Category Archives: வெற்றியாளர்கள்
நாம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்குவது எப்படி?
நாம், ஷிர்க்கில் மூன்று வகைகளைத் தவிர்ப்பதைக் கொண்டல்லாமல், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்கியவர்களாக ஆகமாட்டோம். இரட்சகனு (அல்லாஹ்வு)டைய செயல்களில் இணைவைத்தல்:- படைக்கக் கூடியதாகவோ, நிர்வகிக்கக் கூடியதாகவோ அல்லாஹ்வுடன் வேறெவரும் இருப்பதாக நம்புதல். இந்த நம்பிக்கை, அல்லாஹ் உலக நிர்வாகங்களில் சிலவற்றை சில அவுலியாக்களிடம் ஒப்படைத்துள்ளதாக, சில சூபிய்யாக்கள் நம்புவது போன்றாகும். இந்த நம்பிக்கை இஸ்லாத்துக்கு முன்னிருந்த முஷ்ரிக்குகளிடம் … Continue reading
அல்லாஹ் அல்லாதவனை அழைப்பவனுக்கு உதாரணம்
அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகின்றது. அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்; அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ, அவையாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும், ஓர் ஈயைக் கூட சிருஷ்டிக்க முடியாது. (ஈயை சிருஷ்டிப்பதென்ன?) ஓர் ஈ அவர்களுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் … Continue reading
பெரிய ஷிர்க்கும் அதன் வகைகளும்
பெரிய ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டாக்குதல். உதாரணத்துக்கு அல்லாஹ்வை அழைப்பது போன்று அதனை அழைப்பதாகும். அல்லது இரட்சிக்கத்தேடுதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அதற்கு ஏற்படுத்துவதாகும். ‘இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘பாவங்களில் மிக மகத்தானது எது?’ என்று கேட்டார்கள். உன்னை அல்லாஹ் … Continue reading
(தௌஹீதுக்) கொள்கை முதலாவதா? அல்லது ஆட்சி முதலாவதா?
அஷ்ஷெய்க் முஹம்மத் குதுப் அவர்கள் மக்கா தாருல் ஹதீஸில் ஆற்றிய ஓர் உரையின் போது, இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார். கேள்வியும், அதற்கான பதிலும் பின்வருமாறு:- கேள்வி: ‘ஆட்சியின் முன்னேதான் இஸ்லாம் மீட்சி பெறும்’ என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, அகீதாவை (அடிப்படைக் கொள்கையை)ச் சரிசெய்வதிலும் அவ்வழியில் மக்களைப் பயிற்றுவிப்பதிலும் … Continue reading
அனைத்துக்கும் மூல ஆதாரம் குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே!
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குர்ஆனைக் கொண்டும், சரியான ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவ்விரண்டின் பக்கமே தீர்ப்புக் கேட்டுச் செல்லவும் வேண்டும். பின்வரும் மறைவசனத்தைக் கொண்டே அவ்வாறு செயல்பட வேண்டும்.“அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக!” (5:49) ‘அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே தீர்ப்பளித்து, அல்லாஹ் அருளியவற்றையே தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய தலைவர்களுக்கும், அவர்களுடைய … Continue reading
சட்டமியற்றும் அதிகாரம்!
சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறெவருக்குமில்லை அல்லாஹ், உலகத்தார்கள் அனைவரையும் தனக்கு வழிபடுவதற்காகவே படைத்தான்; அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே அவர்களிடம் ரஸூல்மார்களை அனுப்பினான்; மனிதர்களுக்கு மத்தியில் உண்மையைக் கொண்டும் நீதத்தைக் கொண்டும் தீர்ப்பு வழங்குவதற்காக ரஸூல்மார்களுடன் வேதத்தையும் அனுப்பினான். இச்சட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களிலும் அவனது ரஸூலுடைய போதனைகளிலும் அமைந்துள்ளன. சட்டமென்பது, வணக்கவழிபாடுகள், அன்றாட நடைமுறைகள், கொள்கைக் … Continue reading
தௌஹீதினதும் ஷிர்க்கினதும் போர்க்களம்
ஷிர்க்குடன் தௌஹீதுக்கு ஏற்பட்ட யுத்தம், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குமாறும், சிலை வணக்கத்தைக் கைவிடுமாறும் நூஹ் (அலை) அவர்கள் தனது மக்களை அழைத்த காலந்தொட்டு ஏற்பட்டதாகும். அம்மக்களிடையே நூஹ் (அலை) அவர்கள் 950 வருடகாலங்கள் வாழ்ந்து தௌஹீதுப் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். பின்வருமாறு அல்குர்ஆன் கூறுகின்றவாறு அவர்களுடைய மறுப்பு இருந்தது. “(அவர்களில் உள்ளவர்கள் தங்களில் உள்ள மற்றவர்களை … Continue reading
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்
(அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) இவர் ஹிஜ்ரி 1115ம் ஆன்து நஜ்திலே (இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள ‘அல் உயைனா’ என்ற ஊரில் பிறந்தார். பத்து வயதை அடையுமுன்னர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். அவருடைய தந்தையிடத்தில் ஹன்பலி பிக்ஹை (சட்டக்கலையை)க் கற்றார். பல ஊர்களிலுமுள்ள ஆசியர்களிடம் தப்ஸீரையும் ஹதீஸையும் கற்றார். குறிப்பாக மதீனா … Continue reading
வஹ்ஹாபி என்பதன் அர்த்தம்
தௌஹீதின் எதிரிகள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி தௌஹீதுடைய அடிப்படையில் இருப்பவனுக்கு ‘வஹ்ஹாபி’ என்று சொல்கின்றனர். இவர்கள் உண்மை சொல்லுகின்றவர்களாக இருந்தால் அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மதைச் சம்பந்தப்படுத்தி ‘முஹம்மதி’ (முஹம்மதைச் சேர்ந்தவன்) என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். (அவ்வாறு சொல்லியிருந்தால் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சார்ந்தவன் என்று கருத்துக் கொள்ள இடமேற்பட்டு … Continue reading
‘வஹ்ஹாபி’ என்பதென் அர்த்தமென்ன’?
மனிதர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், வீணான நம்பிக்கைகளுக்கும், பித்அத்தான நடைமுறைகளுக்கும் மாறாக நடக்கின்றவர்களை ‘வஹ்ஹாபிகள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய நம்பிக்கைகள் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படக்கூடிய பிழையானவையாக இருப்பினும் சரிதான். குறிப்பாக தௌஹீதின் பக்கம் மக்களை அழைப்பதையும், அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்க வேண்டும் என்று கூறுவதையும், அவனல்லாத எவரிடமும் கேட்கக்கூடாது என்று கூறுவதையும் தான் … Continue reading