அனைத்துக்கும் மூல ஆதாரம் குர்ஆன் மற்றும் சுன்னா மட்டுமே!

முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குர்ஆனைக் கொண்டும், சரியான ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவ்விரண்டின் பக்கமே தீர்ப்புக் கேட்டுச் செல்லவும் வேண்டும். பின்வரும் மறைவசனத்தைக் கொண்டே அவ்வாறு செயல்பட வேண்டும்.“அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக!” (5:49)

‘அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே தீர்ப்பளித்து, அல்லாஹ் அருளியவற்றையே தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய தலைவர்களுக்கும், அவர்களுடைய சமூகத்தவர்களுக்கும் அல்லாஹ் பலத்தைக் கொடுக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னு மாஜா (ஹஸன்)இஸ்லாமிய நாடல்லாத அந்நிய நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படுகின்ற பிரான்ஸ் சட்டம், ஆங்கிலேய சட்டம் ஆகியவற்றுக்கு அடிபணியாதிருப்பது கடமையாகும். இஸ்லாத்துக்கு முரண்படுகின்றவாறு தீர்ப்புகள் வழங்கப்படும் நீதிமன்றங்களுக்கு அவர்கள் செல்லாதிருக்க வேண்டும். அறிவாளிகளில் நம்பிக்கையானவர்களிடத்தில் இஸ்லாத்தின் தீர்ப்பைக் கொண்டு நீதி கேட்க வேண்டும். இதுவே அவர்களுக்கு சிறந்தது.ஏனென்றால் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதியாகத் தீர்ப்பு அளிக்கின்றது. நகரங்களிலுள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று எந்தவிதப் பயனுமற்றதாக வீணாக்கக்கூடிய பணத்தையும், நேரத்தையும் அது சேமித்துக் கொடுக்கின்றது.அவ்வாறு வீணாக்கிக் கொண்டு, இஸ்லாத்துக்கு மாறான தீர்ப்பை எதிர்பார்க்கின்றவனுக்கு மறுமையில் இரட்டிப்பான வேதனையுண்டு. ஏனென்றால் அவன், நீதியுள்ள அல்லாஹ்வுடைய சட்டத்தைப் புறக்கணித்து விட்டு, அநீதியாக நடந்து கொள்ளும், அல்லாஹ்வுடைய படைப்பின் சட்டத்தில் ஒதுங்கிக் கொண்டவனாகிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.