அவனை துதி செய்யாத பொருள் பூமியில் உண்டா

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டு இருக்கின்றனர்; இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அ(ல்லாஹ்)வன் பொறுமையுடையோனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:44)

This entry was posted in தினம் ஒரு வசனம். Bookmark the permalink.

0 Responses to அவனை துதி செய்யாத பொருள் பூமியில் உண்டா

  1. குர்ஆன் விளக்கங்களில் பிறைகோடுகளுக்கு () உள்ளிருப்பவற்றை சேர்த்துப் படித்தாலும் விட்டு விட்டுப் படித்தாலும் பொருள் தரும் மாதிரிதான் இதுவரை தர்ஜூமாக்கள் வந்துள்ளன. அது மாதிரி இருப்பதுதான் சிறப்பாகவும் இருக்குமென நினைக்கிறேன்.
    உதாரணமாக
    ‘அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக்’ என்னுமிடத்தில்
    ‘அ(ல்லாஹ்வாகிய அ)வனை துதி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அ(ல்லாஹ்வாகிய அ)வன் புகழைக்’ என்றிருத்தல் நலம்.
    அதிகப்பிரகங்கியாகத் தோன்றினால் மன்னிக்கவும்.

    தங்களின் இம்முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. எந்த பதிவையும் படிப்பதற்கு முன் குர்ஆனோடு தொடர்பு கொள்ள அனைவருக்கும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.