அஷ்ஷெய்க் முஹம்மத் குதுப் அவர்கள் மக்கா தாருல் ஹதீஸில் ஆற்றிய ஓர் உரையின் போது, இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தார். கேள்வியும், அதற்கான பதிலும் பின்வருமாறு:-
கேள்வி: ‘ஆட்சியின் முன்னேதான் இஸ்லாம் மீட்சி பெறும்’ என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, அகீதாவை (அடிப்படைக் கொள்கையை)ச் சரிசெய்வதிலும் அவ்வழியில் மக்களைப் பயிற்றுவிப்பதிலும் தான் இஸ்லாம் மீட்சிபெறும் என்று கூறுகின்றனர். இவ்விரண்டில் எது சரியானது?
பதில்: ‘அகீதாவை’ச் சரியான முறையில் பிரசாரம் செய்யக்கூடிய ‘தாஇகள்’ (பிரசாரகர்கள்) இல்லாமல், பூமியில் இந்த மார்க்கத்தின் ஆட்சி எங்கிருந்து வரும்? அந்த ‘தாஇகள்’ சரியான ஈமானைப் போதிக்கின்றனர்; தங்களுடைய மார்க்கத்தில் சோதிக்கப்பட்டு பொறுமையாக இருக்கின்றனர்; அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்கின்றனர். அப்பொழுது பூமியிலே அல்லாஹ்வுடைய மார்க்கம் நல்லமுறையில் சட்டமாக்கப்படுகின்றது. ஆட்சி என்பது வானத்திலிருந்து பூமிக்கு வருகின்ற ஒன்றன்று. தானாக அது வானத்திலிருந்து இறங்கி விடவும் மாட்டாது. ஒவ்வொரு வஸ்துவும் வானத்திலிருந்து இறங்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் மனிதனுடைய முயற்சியின் பயனாகத்தான் இச்சந்தர்ப்பத்தை மனிதனுக்கு, அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். இதுபற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. “அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள் உங்களுடன் யுத்தம் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (யுத்தத்தின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கிறான். (47:04)
அகீதாவைக் சரிசெய்வது கொண்டும் அதனமைப்பில் காலத்தைப் பயிற்றுவிப்பது கொண்டுமே நாம் (பிரசாரத்தை) ஆரம்பிக்க வேண்டும். (இஸ்லாத்தின்) ஆரம்பகாலம் சோதனைக்குள்ளானவாறு சோதிக்கப்பட்டு, சோதனைக்காக பொறுமை சாதிக்க வேண்டியேற்படும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்