கஃபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்தல்.

841. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்கவில்லை என்றால் கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷிகள் அதை (அடித்தளத்தை விட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 1585 ஆயிஷா (ரலி).

842. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! நிச்சயமாக உன்னுடைய கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா?’ எனக் கேட்டேன். ‘உன்னுடைய கூட்டத்தினர் இப்போதே இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இல்லையெனில் அவ்வாறே நான் செய்திருப்பேன்’ என்றார்கள். ”ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதிக்கு எதிரே உள்ள இரண்டு மூலைகளில் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறை இல்லமான ‘கஅபா’வானது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம்விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதேயாகும் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறினார்.

புஹாரி : 1583 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கஃபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்தல்.

கஃபாவினுள் தொழுதல்.

838. நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா இப்னு ஸைத் (ரலி) உஸ்மான்பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்த பிலால் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். ‘ஒரு தூண் தம் வலப்பக்கமும் மற்றொரு தூண் தம் இடப்பக்கமும் மூன்று தூண்கள் பின்புறமும் இருக்குமாறு தொழுதார்கள்’ என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள். அன்றைய தினம் கஅபாவுக்குள் ஆறு தூண்கள் இருந்தன. மற்றோர் அறிவிப்பில் ‘வலப்பக்கம் இரண்டு தூண்கள்’ என்று கூறப்படுகிறது.

புஹாரி : 505 இப்னு உமர் (ரலி).

839. ‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே நுழைந்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் நின்று பிரார்த்தித்தார்கள். அதிலிருந்து வெளியாகும்வரை அவர்கள் தொழவில்லை. வெளியே வந்தபின்பு கஅபாவின் முன்பாக நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ‘இதுதான் கிப்லா’ என்று கூறினார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

புஹாரி : 398 இப்னு அப்பாஸ் (ரலி).

840. நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது வலம் வந்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் ‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?’ என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை!” என பதிலளித்தார்.

புஹாரி : 1600 அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கஃபாவினுள் தொழுதல்.

அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்.

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.

13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாக கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்கு சமமே). Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்.

மாதவிடாய்ப் பெண் தவிர தவாஃப் அல் விதா அனைவரும் செய்வது.

835. ”இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)

புஹாரி :1755 இப்னு அப்பாஸ் (ரலி).

836. ‘ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது’ எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?’ என்று கேட்டார்கள். ‘தவாஃப் செய்துவிட்டார்’ என (அங்கிருந்தோர்) கூறினார்கள். ‘அப்படியானால் புறப்படுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’.

புஹாரி : 328 ஆயிஷா (ரலி) .

837. ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப்படுவதை விட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!” என்று கூறிவிட்டு ‘இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம் வந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் ‘அப்படியாயின் புறப்படு!” என்றார்கள்.

புஹாரி :1771 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மாதவிடாய்ப் பெண் தவிர தவாஃப் அல் விதா அனைவரும் செய்வது.

பலிப்பிராணியை வாகனமாக்குதல்.

833. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி (ஸல்) அவர்கள் ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று கூறினார்கள்.

புஹாரி :1689 அபூஹூரைரா (ரலி).

834. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். அதற்கவர், ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே?’ என்றதும். ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். மீண்டும் அவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றதும் ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!” என மூன்றாம் முறையும் கூறினார்கள்.

புஹாரி : 1690 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பலிப்பிராணியை வாகனமாக்குதல்.

நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான இறைச்சோதனைகள் யாவை?

கேள்வி எண்: 42. எவை எவைகளைக் கொண்டு ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான இறைச்சோதனைகள் யாவை?

பலிப்பிராணிகளை அலங்கரித்தல்.

831. நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்.)

புஹாரி : 1696 ஆயிஷா (ரலி).

832. ”பலிப்பிராணியைக் கொண்டு வருகிறவர் அதை பலியிடும்வரை ஹஜ் செய்பவரின் மீது விலக்கப்பட்டதெல்லாம்’ என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறாரே!” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஸியாத் இப்னு அபீ சுஃப்யான் எழுதிக் கேட்டதற்கு ஆயிஷா (ரலி)அவர் சொல்வது போலில்லை. நான் நபி (ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்கு, கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை என்னுடைய கையாலேயே கோர்த்திருக்கிறேன்; நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு, பிராணியை என்னுடைய தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பி வைத்தார்கள்; ஆனால் அந்த பலிப்பிராணி பலியிடப்படும் வரை அவர்கள், தமக்கு அல்லாஹ் அனுமதித்த எவரையும் தடுத்துக் கொள்ளவில்லை!” எனக் கூறினார்.

புஹாரி :1700 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பலிப்பிராணிகளை அலங்கரித்தல்.

ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.

830. ”இப்னு உமர் (ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, ‘அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!’ என்று கூறியதை பார்த்தேன்.”

புஹாரி : 1713 ஜைது பின் ஜூபைர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.

பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..

829. நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

புஹாரி : 1717 அலி (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..

அறுப்பு தினத்தில் தவாஃப் அல் இஃபாதா செய்வது.

824. நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் லுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் ‘மினாவில்’ என்றார். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும்போது எங்கு அஸர் தொழுதார்கள் எனக் கேட்டதும் ‘அப்தஹ்’ எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, ‘உம்முடைய தலைவர்கள் செய்வது போன்றே செய்வீராக!’ என்றும் கூறினார்.

புஹாரி :1653 அப்துல் அஜீஸ் பின் ரிஃபாஇ (ரலி).

825. ”(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல) பயணம் எளிதாவதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்!”.

புஹாரி : 1765 ஆயிஷா (ரலி).

826. ”முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல. அது நபி (ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம் அவ்வளவுதான்!”.

புஹாரி : 1766 இப்னு அப்பாஸ் (ரலி).

827. நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும் பொழுது, ‘நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் ‘குப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்’ என்று சத்தியம் செய்த இடம்” என்றார்கள்.”பனூ ஹஷிமுக்கும் பனூ முத்தலிபுக்கம் எதிராக நபி (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்யமாட்டோம்’ என குறைஷிக் குலத்தாரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

புஹாரி: 1590 அபூஹூரைரா (ரலி).

828. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி). (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் வினியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக் கொள்ள, நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

புஹாரி: 1634 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அறுப்பு தினத்தில் தவாஃப் அல் இஃபாதா செய்வது.