கல்லெறிதல் அறுத்து பலியிடுதல் தலைமுடியை மழித்தல்.

821. ‘நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா (ரலி) எடுத்தார்” இதை அனஸ் (ரலி) அறிவித்தார்.

புஹாரி :171 அனஸ் (ரலி).

822. ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்’ என்றார். அதற்கவர்கள் ‘பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்’ என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!’ என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் ‘பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்’ என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்’.

புஹாரி : 83 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி).

823. நபி (ஸல்) அவர்களிடம் பலியிடுவது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!” எனக் கூறினார்கள்.

புஹாரி :1734 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கல்லெறிதல் அறுத்து பலியிடுதல் தலைமுடியை மழித்தல்.

நன்றி மறந்து நிராகரித்து கடுமையான கூலியை பெற்ற மக்கள்

34:15. நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; ‘உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்’ (என்று அவர்களுக்கு கூறப்பட்டது). Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நன்றி மறந்து நிராகரித்து கடுமையான கூலியை பெற்ற மக்கள்

முடியைக் குறைத்தல் அல்லது மழித்தல் பற்றி..

818. நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள்.

புஹாரி : 1726 இப்னு உமர் (ரலி).

819. ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!’ எனக் கூறியதும் தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்..” என்றனர். நபி (ஸல்) அவர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள்.

புஹாரி : 1726 இப்னு உமர் (ரலி).

820. நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்…” என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்…” என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக!)” எனக் கூறினார்கள்.

புஹாரி :1728 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on முடியைக் குறைத்தல் அல்லது மழித்தல் பற்றி..

களங்கமற்ற வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே!

கேள்வி எண்: 41. “அறிந்துக் கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்” (அல்குர்ஆன்:39:3) இவ்வசனத்தில் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on களங்கமற்ற வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே!

ஜமராவில் கல்லெறிதல் பற்றி..

816. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு ‘இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!” என்று கூறினார்கள்.

புஹாரி :1748 அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரலி).

817. ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்” என்று கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன். இதுபற்றி நான் இப்ராஹீமிடம் கூறியபோது அவர், இதுபற்றி அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் பின்வருமாறு கூறினார்கள் என குறிப்பிட்டார். ”நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருக்கும்போது, இப்னு மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தங்களின் இடப்பக்கத்தில் கஅபாவும் வலப்பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்றார்கள். பிறகு அவர்கள் ‘இதுவே பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் எறிந்த இடமாகும்!” என்று கூறினார்கள்.

புஹாரி : 1750 அல்மாஷ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஜமராவில் கல்லெறிதல் பற்றி..

பெண்களும் வயது முதிர்ந்த பலவினர்களும் முஜ்தலிஃபாவை விட்டு இரவில் வெளியேறுதல்.

812. நாங்கள் முஸ்தலிஃபாவில் தங்கினோம். அப்போது ஸவ்தா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், மக்கள் புறப்படுவதற்கு முன்பாக, தாம் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மெதுவாக நடக்கக் கூடியவராக இருந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, மக்கள் அங்கிருந்து புறப்படும் முன் அவர் புறப்பட்டுவிட்டார். நாங்கள் மட்டும் ஸுப்ஹு வரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். ஸவ்தா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றது போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும் விட அது எனக்கு அதிகப் பிரியமானதாக இருந்திருக்கும்.

புஹாரி :1681 ஆயிஷா (ரலி).

813. அஸ்மா (ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, ‘மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!” என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு ‘சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றதும் ‘புறப்படுங்கள்!’ எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், ‘அம்மா! நாம் விடியம் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகிறதே!” என்றேன். அதற்கவர்கள், ‘மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்” என்றார்கள்.

புஹாரி : 1979 அஸ்மா (ரலி) அவர்களின் அடிமை அப்துல்லாஹ் (ரலி).

814. நபி (ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன்.

புஹாரி : 1678 இப்னு அப்பாஸ் (ரலி).

815. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) தம் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (மினாவிற்கு) அனுப்பி விடுவார். மற்றவர்கள் முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம் என்னுமிடத்தில் இரவு தங்குவார்கள். அங்கு விரும்பியவாறு அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்னமேயே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பி விடுவார்கள். அவர்களில் சிலர் ஃபஜ்ருத் தொழுகைக்கு மினாவை அடைவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் வந்தடைவர். அவர்கள் அங்கு வந்ததும் ஜம்ராவில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள்

புஹாரி : 1676 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பெண்களும் வயது முதிர்ந்த பலவினர்களும் முஜ்தலிஃபாவை விட்டு இரவில் வெளியேறுதல்.

முஜ்தலிஃபாவில் ஃபஜ்ரை முன்பாகவே தொழுதல்.

811. ”நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை… இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று : (முஸ்தலிஃபாவில்) மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதது இன்னொன்று : ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிஃபாவிலேயே) தொழுதது,”

புஹாரி : 1682 இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on முஜ்தலிஃபாவில் ஃபஜ்ரை முன்பாகவே தொழுதல்.

முஜ்தலிஃபாவில் மக்ரிப் இஷா தொழுதல்.

807. ‘(ஹஜ்ஜில்) நபி (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தை விட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும் இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை”

புஹாரி :139 உஸமா இப்னு ஜைத் (ரலி) .

808. நான் உஸாமா (ரலி)வுடன் அமர்ந்திருக்கும்போது, உஸாமாவிடம், ‘கடைசி ஹஜ்ஜில் அரஃபாவிலிருந்து திரும்பிய நபி (ஸல்) அவர்களின் நடை எவ்வாறிருந்தது?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘நபி (ஸல்) அவர்கள் சாதாரணமாக நடப்பார்கள். (மக்கள் நெருக்கடியில்லாத) விசாலமான இடம் வந்ததும் விரைந்து நடப்பார்கள்’ எனக் கூறினார்.

புஹாரி : 1666 உர்வா (ரலி).

809. இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள்.

புஹாரி: 1674 அபூ அய்யுப் அல் அன்ஸாரி (ரலி).

810. நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பிரயாணம் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.

புஹாரி :1091 இப்னு உமர் (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on முஜ்தலிஃபாவில் மக்ரிப் இஷா தொழுதல்.

அரஃபா நாளில் தல்பியா கூறுதல்.

806. நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப்படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை’ என்று விடையளித்தார்கள்.

புஹாரி :970 முஹம்மது பின் அபூபக்கர் அத்தகபீ (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அரஃபா நாளில் தல்பியா கூறுதல்.

ஜமராவில் கல்லெறியும் வரை தல்பியாக் கூறுதல்.

805. அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்’ எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் நாளில் ஃபழ்ல் இப்னு அப்பாஸைத் தம் வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றினார்கள். குரைப் மற்றொரு அறிவிப்பாளர் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமராவைச் சென்றடையும் வரையில் தல்பியா கூறிக் கொண்டிருந்தார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

புஹாரி :1669 உஸாமா பின் ஜைது (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜமராவில் கல்லெறியும் வரை தல்பியாக் கூறுதல்.