கல்லெறிதல் அறுத்து பலியிடுதல் தலைமுடியை மழித்தல்.

821. ‘நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா (ரலி) எடுத்தார்” இதை அனஸ் (ரலி) அறிவித்தார்.

புஹாரி :171 அனஸ் (ரலி).

822. ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்’ என்றார். அதற்கவர்கள் ‘பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்’ என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!’ என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் ‘பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்’ என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்’.

புஹாரி : 83 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி).

823. நபி (ஸல்) அவர்களிடம் பலியிடுவது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!” எனக் கூறினார்கள்.

புஹாரி :1734 இப்னு அப்பாஸ் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.