816. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு ‘இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!” என்று கூறினார்கள்.
817. ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்” என்று கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன். இதுபற்றி நான் இப்ராஹீமிடம் கூறியபோது அவர், இதுபற்றி அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் பின்வருமாறு கூறினார்கள் என குறிப்பிட்டார். ”நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருக்கும்போது, இப்னு மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தங்களின் இடப்பக்கத்தில் கஅபாவும் வலப்பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்றார்கள். பிறகு அவர்கள் ‘இதுவே பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் எறிந்த இடமாகும்!” என்று கூறினார்கள்.