களங்கமற்ற வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே!

கேள்வி எண்: 41. “அறிந்துக் கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்” (அல்குர்ஆன்:39:3) இவ்வசனத்தில் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை?
பதில்: இவ்வசனத்தில் மூலம் நாம் பெறும் தெளிவுகள்:-

*  வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அதாவது தொழுகை, பிரார்த்தனை செய்தல், நோன்பு, ஜக்காத், ஹஜ், அறுத்து பலியிடுதல், நேர்ச்சை, உதவி தேடுதல், பாதுகாவல் தேடுதல், மன்றாட்டம் செய்தல், முறையிடுதல், பேரச்சம் கொள்ளுதல், கண்ணுக்குத் தெரியாத மறைவானவற்றிடம் பிராத்தித்தல் இன்னும் என்னென்ன வணக்க முறைகள் இருக்கின்றனவோ அவைகள் அத்தனையையும் களங்கமற்ற முறையில் தூய எண்ணத்தோடு அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும்.

* அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ அல்லது உதவியாளரோ நமக்கு இல்லை. ஆகவே, அவனையே நமது பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*  அல்லாஹ்விடம் நமக்காக இவர்கள் பரிந்து பேசுவார்கள் என யாரையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.