831. நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்.)
832. ”பலிப்பிராணியைக் கொண்டு வருகிறவர் அதை பலியிடும்வரை ஹஜ் செய்பவரின் மீது விலக்கப்பட்டதெல்லாம்’ என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறாரே!” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஸியாத் இப்னு அபீ சுஃப்யான் எழுதிக் கேட்டதற்கு ஆயிஷா (ரலி)அவர் சொல்வது போலில்லை. நான் நபி (ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்கு, கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை என்னுடைய கையாலேயே கோர்த்திருக்கிறேன்; நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு, பிராணியை என்னுடைய தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பி வைத்தார்கள்; ஆனால் அந்த பலிப்பிராணி பலியிடப்படும் வரை அவர்கள், தமக்கு அல்லாஹ் அனுமதித்த எவரையும் தடுத்துக் கொள்ளவில்லை!” எனக் கூறினார்.