கேள்வி எண்: 42. எவை எவைகளைக் கொண்டு ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
பதில்: “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்கு துன்பம் ஏற்படும்பொழுது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்” (அல்குர்ஆன்: 2: 155-157)