835. ”இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)
836. ‘ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது’ எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?’ என்று கேட்டார்கள். ‘தவாஃப் செய்துவிட்டார்’ என (அங்கிருந்தோர்) கூறினார்கள். ‘அப்படியானால் புறப்படுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’.
837. ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப்படுவதை விட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!” என்று கூறிவிட்டு ‘இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம் வந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் ‘அப்படியாயின் புறப்படு!” என்றார்கள்.