குர்ஆனின் கணிதவியல் அற்புதம்!

கேள்வி எண்: 18. பின்வரும் வார்த்தைகள் அல்குர்ஆனில் எத்தனை முறைகள் இடம் பெற்றுள்ளன? துன்யா – ஆகிரா, ஹயாத் – மௌத்து. Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on குர்ஆனின் கணிதவியல் அற்புதம்!

தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடைவெளி..

285- நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

புகாரி-496: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)

286- மேடைப் பகுதியில் உள்ள சுவர் பக்கம் (நபி (ஸல்) தொழும் போது) ஒரு ஆடு கடந்து செல்ல முடியாத அளவு இடைவெளியே இருந்தது.

புகாரி-497: ஸலமா பின் அல் அக்வஃ (ரலி)

287- நான் ஸலமா பின் அக்வஃ (ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவனாக இருந்தேன். ஸலமா (ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லீம் அவர்களே! இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

புகாரி-502: யஸீத் பின் அபீ உபைத்
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடைவெளி..

தொழுகையின் போது குறுக்கே செல்பவர் பற்றி..

283– எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயித் என்ற கூட்டத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூஸயீத் (ரலி) அவரது நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்த போது, அபூஸயீத் (ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தென்படவில்லை. எனவே மீன்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூஸயீத் (ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (ஆட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூஸயீத் (ரலி) மர்வானிடம் சென்றார்கள். உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சனை? என்று மர்வான் கேட்டார். உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது, யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும். அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூஸயீத் (ரலி) கூறினார்கள்.

புகாரி-509: அபூஸாலிஹ் (ரலி)

284– தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூஜுஹைம் (ரலி) அனுப்பி வைத்தார். தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாட்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் (ரலி) விடையளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன்னழ்ரு என்பவர் நாற்பது வருடங்கள் என்று கூறினார்களா? அல்லது நாற்பது மாதங்கள் அல்லது நாற்பது நாட்கள் என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.

புகாரி-510: புஸ்ரு பின் ஸயீத் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையின் போது குறுக்கே செல்பவர் பற்றி..

அல்லாஹ்வின் திருநாமம் அவர்கள் முன் கூறப்பட்டால்…

 ஸுஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் ‘திக்ரு’ (ஹல்கா) செய்கிறோம் என்ற பெயர்களில் உரத்த குரலில் சப்தமாக ‘அல்லாஹ்’ எனக்கூவி அழைத்து பாட்டிசைத்து உடலை அசைத்து ஆட்டம் போடுகின்றனர். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அல்லாஹ்வின் திருநாமம் அவர்கள் முன் கூறப்பட்டால்…

தொழுகையின் போது சுத்ரா எனும் தடுப்பு….

278– நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுவிப்பதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும் போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப் பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால் தான் (நமது) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர்.

புகாரி-494: இப்னு உமர் (ரலி)
279– நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
புகாரி-507: நாஃபிவு
280– பிலால் (ரலி) பாங்கு சொல்லும் போது (பாங்கை நீட்டிச் சொல்வதற்காக) தமது வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.
புகாரி-634: அபூஜுஹைஃபா (ரலி)
281– தோலினால் செய்யப் பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி (ஸல்) அவர்கள் அணிந்திருக்க நான் பார்த்தேன். மேலும் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்த தண்ணீரை பிலால் (ரலி) எடுத்துச் செல்வதையும் அந்த தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் நான் கண்டேன். யாருக்குத் தண்ணீர் கிடைத்ததோ அவர் அதை தமது உடம்பில் தடவிக் கொண்டார். யாருக்கு தண்ணீர் கிடைக்கவில்லையோ அவர் தண்ணீர் கிடைக்கப் பெற்ற தமது நண்பனின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார். பிலால் (ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
புகாரி-376:அபூ ஜுஹைஃபா (ரலி)
282– நான் பெண் கழுதை ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் தடுப்பு எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுது கொண்டிருந்தார்கள். கழுதையை மேய விட்டு விட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று ஒரு வரிசையில் நானும் புகுந்து கொண்டேன். எனது அந்தச் செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
புகாரி-76: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையின் போது சுத்ரா எனும் தடுப்பு….

உதவியை உறுதிப்படுத்துவதற்கான நிபந்தனைகள்

நபி (ஸல்) அவர்கள் சரித்திரத்தைப் படிக்கிறவன் பின்வரும் படித்தரங்களைக் கண்டுக் கொள்வான்.

1. தௌஹீத்:- நபி (ஸல்) அவர்கள் தனது கூட்டத்தாரை இபாதத்திலும், துஆக் கேட்பதிலும், அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதிலும், ஷிர்க்குக்கு எதிராகப் போராடுவதிலும் பதிமூன்று வருடங்களை மக்காவில் கழித்தார்கள். இந்த நம்பிக்கை தமது தோழார்களுடைய உள்ளங்களில் உறுதியாகப் பதிந்து விடும்வரை, நபியவர்கள் இப்போராட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். இதனால் நபித்தோழர்கள் அல்லாஹ் அல்லாத எவருக்கும் பயப்படாத வீரமுள்ளவர்களாக மாறினர். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on உதவியை உறுதிப்படுத்துவதற்கான நிபந்தனைகள்

ஸுஜூதின் போது….

277- நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தமது இரு கைகயையும் விரித்து வைப்பார்கள்.

புகாரி-390: மாலிக் பின் புஹைனா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஸுஜூதின் போது….

ஸுஜூதில் நிலத்தில் படும் உடல் உறுப்புகள்..

276– நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது எனவும் கட்டளையிடப் பட்டார்கள்.

புஹாரி-809: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஸுஜூதில் நிலத்தில் படும் உடல் உறுப்புகள்..

ஒட்டு முடி வைத்தல்

முஸ்லிமுடைய ஒரு அறிவிப்பில், அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து விடுபவளையும் அல்லாஹ் சபிப்பானாக! எனக் கூறினார்கள்’ 
Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ஒட்டு முடி வைத்தல்

ருக்உ ஸுஜூதில் என்ன கூறுவது?..

275- நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும் ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி (இறைவா! நீ தூயவன்: எங்கள் இறைவா! உன்னைப் போற்றுகிறோம்: இறைவா! என்னை மன்னித்துவிடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள்.

புஹாரி-817: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ருக்உ ஸுஜூதில் என்ன கூறுவது?..