தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடைவெளி..

285- நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

புகாரி-496: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)

286- மேடைப் பகுதியில் உள்ள சுவர் பக்கம் (நபி (ஸல்) தொழும் போது) ஒரு ஆடு கடந்து செல்ல முடியாத அளவு இடைவெளியே இருந்தது.

புகாரி-497: ஸலமா பின் அல் அக்வஃ (ரலி)

287- நான் ஸலமா பின் அக்வஃ (ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவனாக இருந்தேன். ஸலமா (ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லீம் அவர்களே! இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

புகாரி-502: யஸீத் பின் அபீ உபைத்
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.