குர்ஆனின் கணிதவியல் அற்புதம்!

கேள்வி எண்: 18. பின்வரும் வார்த்தைகள் அல்குர்ஆனில் எத்தனை முறைகள் இடம் பெற்றுள்ளன? துன்யா – ஆகிரா, ஹயாத் – மௌத்து.

பதில்:

துன்யா 115 தடவைகள்
ஆகிரா 115 தடவைகள்
ஹயாத்து 145 தடவைகள்
மௌத்து 145 தடவைகள்

சிறு விளக்கம்: இவைகள் குர்ஆனில் காணப்படும் கணிதவியல் பற்றிய அற்புதங்களாகும். இதுபோன்று திருமறையின் இன்னும் சில கணிதவியல் அற்புதங்களைக் காண்போம்.

மலக்குகள் 88  தடவைகள்
ஷைத்தான் 88  தடவைகள்
நன்மை 50  தடவைகள்
தீமை 50  தடவைகள்
மக்கள் 50  தடவைகள்
தூதுவர்கள் 50  தடவைகள்
இப்லீஸ் 11  தடவைகள்
இப்லீஸிடமிருந்து பாதுகாப்பு 11  தடவைகள்
ஜகாத் 32  தடவைகள்
பரக்கத் 32  தடவைகள்
ஆண் 24  தடவைகள்
பெண் 24  தடவைகள்
பொறுமை 114 தடவைகள்
சோதனை 114 தடவைகள்

இன்னும் சில கணிதவியல் அற்புதங்களைக் காண்போமா?

மாதம் (அஷ்-ஷஹர்) -12 முறை; நாள் (அல்-யவ்ம்) -365 முறை; கடல்பரப்பு (அல்-பஹ்ர்) -32 முறை + நிலப்பரப்பு (அல்-பர்ரி) -13 முறை. மாதங்கள் 12 என்றும், நாள் 365 என்றும் நாம் (மனிதன்) சில பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தாலும், இப்பூமியின் கடல் மற்றும் நிலப்பரப்பு என்ன விகிதாச்சாரத்தில் (32 முறை + 13 முறை = 45 முறை) உள்ளது என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பு! அதனை திருமறை எப்படி அன்றே கூறியுள்ளது என்பதைக் காண்க:

கடல்பரப்பு 32 முறை என்பது விகிதாச்சாரத்தில்:
32 45×100=71.11% என்பதும்,
நிலப்பரப்பு 13 முறை என்பது விகிதாச்சாரத்தில்:
13 45×100=28.89% என்பதும் தெளிவாகின்றது. மொத்தம் 100% சதவிகிதம் பூர்த்தியடைகின்றது.

இந்த புவியியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே யார் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சொல்லித் தந்திருக்க முடியும்? -இவற்றைப் படைத்த இறைவனைத் தவிர! எல்லா ஞானமும் அவனிடமே உள்ளது.

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழிகெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடையவன் அவருக்கு கற்றுக் கொடுத்தார். (அல்குர்ஆன்: 53:1-5) மேலும் பார்க்க வசனங்கள்:- 3:79, 4:113, 12:68, 36:69, 55:1-2, 96:5.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.