ஒட்டு முடி வைத்தல்

முஸ்லிமுடைய ஒரு அறிவிப்பில், அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து விடுபவளையும் அல்லாஹ் சபிப்பானாக! எனக் கூறினார்கள்’ 
நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் தனது தலை முடியுடன் வேறு முடியை வைத்துக் கொள்வதைக் கண்டித்துள்ளார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

இன்று நம்முடைய காலத்தில் விக் (Wig) என்று சொல்லப்படக்கூடிய ‘டோபா’ வையும் ஒட்டு முடிக்கு உதாரணமாகச் சொல்லலாம். மேலும் இக்காலத்தில் ஒட்டு முடி (சவுரி) வைத்து விடும் பெண்களுக்கு முடி ஒப்பனைக்காரிகள் என்று கூறப்படுகிறது. மேலும் அழகு நிலையங்களில் (Beauty Parlour) பெண்கள் அலங்கரித்துக் கொள்ளக்கூடிய அனைத்தும் விலக்கப்பட்டவைகளைச் சேர்ந்ததாகும். மட்டுமல்ல துர்பாக்கியசாலிகளான நடிகர், நடிகைகள் சினிமாக்களிலும், நாடகங்களிலும் பயன்படுத்தக்கூடிய டோபாக்களும் இதில் அடங்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.