இமாமைப் பின்பற்றுதல்..

274- நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து (ஸுஜூதுக்குச் சென்று) நெற்றியைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தமது முதுகை வளைக்க மாட்டார்கள்.

புஹாரி-811: பராவு (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இமாமைப் பின்பற்றுதல்..

தொழுகையை சுருக்கமாக தொழுதாலும் பரிபூரணமாக தொழுதல்..

272- நபி (ஸல்) அவர்கள் ருகூவும் அவர்களது ஸஜ்தாவும் இரு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.

புஹாரி-792: பராஉ (ரலி)

273- அனஸ் (ரலி) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள்.

புஹாரி-800: ஸாபித் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையை சுருக்கமாக தொழுதாலும் பரிபூரணமாக தொழுதல்..

மனிதர்களுக்கு நன்மைகளை அருளும் நிலையான வணக்கஸ்தலம்

2:125. (“கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக ஆக்கி கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் ‘என் வீட்டை சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மனிதர்களுக்கு நன்மைகளை அருளும் நிலையான வணக்கஸ்தலம்

இமாம் சுருக்கமாகவும் முறையாகவும் தொழுவித்தல்..

267.ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை (க்கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்து விடுகிறேன். என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதை விடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள் மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர் என்று சொன்னார்கள்.

புகாரி-7159: அபூமஸ்ஊத் அல் அன்சாரி (ரலி)


268– மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாளிகள், முதியவர்கள் அவர்களில் உள்ளனர். தனித்துத் தொழும்போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-703: அபூஹுரைரா (ரலி)

269– நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.

புஹாரி-706: அனஸ் (ரலி)

270– நபி (ஸல்) அவர்களை விடத் தொழுகையைச் சுருக்கமாகவும் (அதேசமயம்) பூரணமாகவும் தொழுவிக்கக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஓரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

புஹாரி-708: அனஸ் பின் மாலிக் (ரலி)


271– நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-709: அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இமாம் சுருக்கமாகவும் முறையாகவும் தொழுவித்தல்..

இஷா தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

265– நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் வத்தீனி வஸ்ஸைத்தூனி என்ற அத்தியாயத்தை ஒதினார்கள்.

புஹாரி-767: பராவு பின் ஆஸிப் (ரலி)

266– முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும்போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) அல்பகரா எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஒதினார். அப்போது ஒரு மனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது (விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று )விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் அவர் ஒரு நயவஞ்சகர்( முனாஃபிக்) என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஒதினார்கள். ஆகவே நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் (ரலி) அவர்களிடம்) முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும் (நீர் இமாமாக நிற்கும்போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஒதுவீராக! என்றும் சொன்னார்கள்.

புகாரி-6106: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இஷா தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

பாதி வளர்ந்தும், பாதி வளராமலும் இருக்கும் உறுப்புகள்

கேள்வி எண்: 17. மனிதன் தன் தாயின் கருவறையில் வளரும் ஒரு கட்டத்தில், அவனுடைய உறுப்புகள் பாதி வளர்ந்த நிலையிலும் பாதி வளராத நிலையிலும் இருப்பதாக நவீன அறிவியல் உலகம் கண்டறிந்த உண்மையை பிரதிபலிக்கும் திருமறை வசனம் Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பாதி வளர்ந்தும், பாதி வளராமலும் இருக்கும் உறுப்புகள்

ஸுப்ஹு மஃரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

262– எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் போது லுஹர் தொழுபவாகளாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிருடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். இந்த ஹதீஸை அபூபர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், மஃரிப் பற்றி அபூபர்ஸா (ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் வரை அல்லது இரவின் பாதிவரை தாமதப் படுத்துவது பற்றிப் பொருட்படுத்த மாட்டார்கள் என அபூபர்ஸா (ரலி) குறிப்பிட்டார்கள் என்கிறார்.

புகாரி-541: அபூபர்ஸா (ரலி)

263– நான் வல்முர்ஸலாதி உர்பன் என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனை செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு (ரலி) அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! மஃரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஒதியதன் மூலம் எனக்கு நினைவு படுத்தி விட்டாய் என்று கூறினார்கள்.

புஹாரி-763: இப்னு அப்பாஸ் (ரலி)

264– நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் தூர் அத்தியாயத்தை ஓதும்போது நான் செவியுற்றுள்ளேன்.

புஹாரி-765:ஜுபைர் பின் முத்இம் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஸுப்ஹு மஃரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

நீதவான்களை புகார் கூறுவதில் பயந்து கொள்ளுங்கள்

261– (கஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) மீது கூஃபா வாசிகளில் சிலர் உமர் (ரலி) இடத்தில் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர் (ரலி) அவரை நீக்கி விட்டு அம்மார் (ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுவித்தேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஒதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று பதிலளித்தார்கள். உம்மைப் பற்றி நமது கருத்தும் அதுவே என்று உமர் (ரலி) கூறினார்கள். அதன் பின் ஒரு நபரைத் அல்லது சில நபர்களை ஸஃது (ரலி) உடன் கூஃபாவுக்கு அனுப்பி ஸஃதைப் பற்றி கூஃபாவாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். பனூ அப்பாஸ் கூட்டத்தாரின் பள்ளிவாசலில் விசாரித்தபோது அந்த கூட்டத்தை சேர்ந்த அபூஸஃதா எனப்படும் உஸாமா பின் கதாதா என்பவர் எழுந்தார். நீங்கள் விசாரிப்பதால் தான் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை. (பொருள்களை) சமமாக பங்கிடுவதில்லை: தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு இறைவா! உனது இந்த அடியார் (அவரது புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுவராகவும் இருந்தால் அவரது ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரது வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்து விட்டது எனக் கூறக் கூடியவராகி விட்டார். ஜாபிர் (ரலி) வழியாக அறிவிக்கும் அப்துல் மாலிக் பின் உமைர் அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன். முதுமையில் அவரது புருவங்கள் அவரது கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்கள் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்: இந்த நிலையில் அவரை நான் பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

புஹாரி-755: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நீதவான்களை புகார் கூறுவதில் பயந்து கொள்ளுங்கள்

ளுஹர் அஸ்ர் தொழுகையில் சப்தமின்றி ஓதுதல்..

260– லுஹர் தொழகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்துகளில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை எங்களுக்கு கேட்குமாறு ஓதுவார்கள். அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) அல்ஹம்து அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாம் ரக்அத்தில் குறைந்த நேரம் ஓதுவார்கள்.

புஹாரி-759: அபூகதாதா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ளுஹர் அஸ்ர் தொழுகையில் சப்தமின்றி ஓதுதல்..

இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான ஸூஃபிகள்

ஸுஃபியிஸம்: பைஅத் கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திக்கின்றனர்.

இஸ்லாம்: ‘அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திப்பதை கடுமையாகக் கண்டித்த நபி (ஸல்) அவர்கள், தனித்திருக்கும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தானும்கூட இருப்பதாகக் கூறினார்கள்’ Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான ஸூஃபிகள்