ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

259– நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் உக்காழ் எனும் சந்தையை நோக்கி புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப் பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் எறியப்பட்டன. (ஒட்டுக் கேட்க சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்கள் இடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பிய போது உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். வானத்துச் செய்திகள் எங்களுக்கு தடுக்கப் பட்டுவிட்டன. எங்கள் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்கவேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ் திசை மேல் திசை எங்கேனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் திஹாமா எனும் பகுதியை நோக்கி சென்றனர். உக்காழ் சந்தைக்கு செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு பஜ்ருத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்த குர்ஆனே காரணம் என்று கூறிக்கொண்டு தம் தலைவர்களிடம் சென்று எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர் வழியை காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணைவைக்கவே மாட்டோம் என்று கூறினர். உடனே அல்லாஹ் ஜின் எனும் அத்தியாயத்தை இறக்கி அருளினான். நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தில் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல)

புஹாரி-773: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..

257– (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75 வது அத்தியாயத்திலுள்ள) ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்” எனும் (திருக்குர்ஆன் 75:16,17) வசனங்களை அருளினான். அதாவது, ‘உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்” என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்” என்ற (திருக்குர்ஆன் 75:18 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்” என்று கூறினான். ‘பின்னர், அதனை விளக்குவதும் எம்முடைய பொறுப்பாகும்” எனும் (திருக்குர்ஆன் 75:19 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான். (இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு வரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி(ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

புகாரி: 4929 இப்னு அப்பாஸ் (ரலி).

258. அவசரப்பட்டு நீங்கள் உங்கள் நாவை அசைக்கவேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கும் போது நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்படும் போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் முலம் புலனாயிற்று. வஹீயை (மனனம் செய்ய) அவசரப்பட்டு நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம். (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் முலம்) ஓத வைப்பதும் நமது பொறுப்பாகும். எனவே நாம் அதனை ஓதும்போது ஓதுவதிலேயே நீர் கவனம் செலுத்துவீராக. அதாவது மவுனமாக இருந்து அதனைச் செவி தாழ்த்திக் கேட்பீராக – பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும். (75:16.19) என்ற வசனங்களை அப்போது அல்லாஹ் அருளினான் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது இருஉதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கின்றேன் என்று சொல்லித் தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அசைத்துக் காட்டினார்கள். இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) இடமிருந்து அறிவிக்கும் ஸயீது பின் ஜுபைர் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) தமது இரு உதடுகளையும் அசைத்தது போன்று நான் அசைக்கின்றேன் என்று கூறி அசைத்துக் காட்டினார்கள். மேலும் இப்னு அப்பாஸ் தொடர்ந்து, அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை) வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஜிப்ரில் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதினார்கள் என்று கூறினார்கள்.

புகாரி-5: ஸயீது பின் ஜுபைர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..

தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..

256. (நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். எனும் (17:110ஆவது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஒ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். ஆகவே உயர்ந்தோனாகிய அல்லாஹ் நீங்கள் உங்கள் தொழுகையில் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவிற்குக் குரலை உயர்த்தாதீர்கள் (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலை தாழ்த்தியும் விடாதீர்கள். அவர்களுக்குக் கேட்டால் தான் உங்களிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். ஆகவே இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாளுங்கள் எனக் கட்டளையிட்டான்.

புகாரி-7490: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..

தடை செய்யப்பட்ட வஸீலா

தடுக்கப்பட்ட வஸீலா என்பது மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமற்றதாகும். இது பல வகைப்படும்.

1. வஸீலா என்று சொல்லிக் கொண்டு இன்று நடைபெறுவது போன்று, மரணித்தவர்களிடம் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுதலும், அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும் மரணித்தவர்களிடம் வஸீலாத் தேடுவதாகும். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தடை செய்யப்பட்ட வஸீலா

பள்ளிக்கு வரும் பெண்கள்!

253- உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி- 5238: இப்னு உமர் (ரலி)

254- உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமா அத்தாகத் தொழச் செல்வார். அவரிடம்(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) கூறியுள்ளனர் என்று பதிலுரைத்தார்.

புஹாரி-900: இப்னு உமர் (ரலி)

255- பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி (ஸல்) அவர்கள் (இன்று) கண்டிருந்தால், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப் பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதை விட்டும்) தடுத்திருப்பார்கள்.

புஹாரி-869: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பள்ளிக்கு வரும் பெண்கள்!

ஜமாஅத்தில் தொழும் பெண்கள் ஆண்களை முந்தலாகாது..

252- சில ஆண்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர்;. அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய (சிறிய) வேஷ்டியை. தங்களுடைய கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர் (இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுத பெண்களிடத்தில் ஆண்கள் ஸுஜூதிலிருந்து எழுந்து அமர்வதுவரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜூதிலிருந்து உயர்த்தவேண்டாம் என்று கூறினார்கள்.

புகாரி-362:ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஜமாஅத்தில் தொழும் பெண்கள் ஆண்களை முந்தலாகாது..

ஜமாஅத் தொழுகையில் வரிசையைச் சீராக்குதல்..

248- வரிசையை ஒழுங்குப் படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்குப் படுத்துவது தொழுகையை நிலைப் பெறச் செய்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-723: அனஸ் (ரலி)

249- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முகத்துக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன் எனக் கூறினார்கள்.

புஹாரி-719: அனஸ் (ரலி)

250- உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அல்லாஹ் உங்களது முகங்களை மாற்றிவிடுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-717: நுஃமான் பின் பஷீர் (ரலி)

251- பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டு குலுக்கும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-615: அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஜமாஅத் தொழுகையில் வரிசையைச் சீராக்குதல்..

பெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்

இன்றைய காலத்தில் நம்முடைய எதிரிகள் நவீன, நவநாகரீக உடைகளை பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் தயாரித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவவிட்டுள்ளதன் மூலம் நமக்கெதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளனர். Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on பெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்

இமாமை முந்துதல் கூடாது..

247- உங்களில் ஒருவர் தொழுகயில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் அவருடைய தலையை கழுதையுடைய தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்சவேண்டாமா? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-691: அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இமாமை முந்துதல் கூடாது..

தொழுகையில் பேணுதல்..

245- நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-418:அபூஹுரைரா (ரலி)

246- அல்லாஹ்வின் மேல் ஆணையாக ருகூவையும் ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்யுங்கள்! நான் எனக்குப் பின்புறமாக-அல்லது என் முதுகுக்குப் பின்- நீங்கள் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-742: அனஸ் பின் மாலிக் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையில் பேணுதல்..