259– நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் உக்காழ் எனும் சந்தையை நோக்கி புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப் பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் எறியப்பட்டன. (ஒட்டுக் கேட்க சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்கள் இடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பிய போது உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். வானத்துச் செய்திகள் எங்களுக்கு தடுக்கப் பட்டுவிட்டன. எங்கள் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்கவேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ் திசை மேல் திசை எங்கேனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் திஹாமா எனும் பகுதியை நோக்கி சென்றனர். உக்காழ் சந்தைக்கு செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு பஜ்ருத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்த குர்ஆனே காரணம் என்று கூறிக்கொண்டு தம் தலைவர்களிடம் சென்று எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர் வழியை காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணைவைக்கவே மாட்டோம் என்று கூறினர். உடனே அல்லாஹ் ஜின் எனும் அத்தியாயத்தை இறக்கி அருளினான். நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தில் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல)
ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..
புஹாரி-773: இப்னு அப்பாஸ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged அல்லுஃலுவு வல்மர்ஜான். Bookmark the permalink.