253- உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி- 5238: இப்னு உமர் (ரலி)
254- உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமா அத்தாகத் தொழச் செல்வார். அவரிடம்(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) கூறியுள்ளனர் என்று பதிலுரைத்தார்.
புஹாரி-900: இப்னு உமர் (ரலி)
255- பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி (ஸல்) அவர்கள் (இன்று) கண்டிருந்தால், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப் பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதை விட்டும்) தடுத்திருப்பார்கள்.
புஹாரி-869: ஆயிஷா (ரலி)