கேள்வி எண்: 17. மனிதன் தன் தாயின் கருவறையில் வளரும் ஒரு கட்டத்தில், அவனுடைய உறுப்புகள் பாதி வளர்ந்த நிலையிலும் பாதி வளராத நிலையிலும் இருப்பதாக நவீன அறிவியல் உலகம் கண்டறிந்த உண்மையை பிரதிபலிக்கும் திருமறை வசனம் எது?
பதில்: “நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்” (அல்குர்ஆன்: 22:5)
சிறு விளக்கம்: கேள்வி எண் 9-ன் விளக்கத்தில், நமது உறுப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் உடனடியாக தோன்றி விடுவதில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் அவைகள் சிறிது சிறிதாக உருவாக்கப்படுகின்றது என்றும் படித்தோம். அவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அதனுடைய பாதி உறுப்புகள் உருவாக்கப்பட்ட நிலையிலும், பாதி உறுப்புகள் உருவாக்கப்படாத நிலையிலும் இருக்கின்றது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமறை கூறிய இவ்வுண்மையை 20-ம் நூற்றாண்டின் அறிவியல் உலகம் நிரூபித்துக் காட்டிவிட்டது.