இஷா தொழுகையில் சப்தமாக ஓதுதல்..

265– நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் வத்தீனி வஸ்ஸைத்தூனி என்ற அத்தியாயத்தை ஒதினார்கள்.

புஹாரி-767: பராவு பின் ஆஸிப் (ரலி)

266– முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும்போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) அல்பகரா எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஒதினார். அப்போது ஒரு மனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது (விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று )விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் அவர் ஒரு நயவஞ்சகர்( முனாஃபிக்) என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஒதினார்கள். ஆகவே நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் (ரலி) அவர்களிடம்) முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும் (நீர் இமாமாக நிற்கும்போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஒதுவீராக! என்றும் சொன்னார்கள்.

புகாரி-6106: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.