Category Archives: வெற்றியாளர்கள்

தௌஹீதில் உலமாக்களின் நிலைபாடு

உலமாக்கள் (கற்றபடி செயல்படும் அறிஞர்கள்) நபிமார்களின் வாரிசு (அனந்திரக்காரர்)கள். நபிமார்கள் மக்களை முதலாவது அழைத்தது தௌஹீதின் பக்கமாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். “(உலகின் பல பாகங்களில் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பாருக்கும், நிச்சயமாக நாம் தூதரை (ரஸூலை) அனுப்பி இருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். வழி கெடுக்கும் ஷைத்தான்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதில் உலமாக்களின் நிலைபாடு

தௌஹீதின் எதிரிகள்

“இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான (பொய்ச்) செய்திகளை, (க் காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். (6:112) ஜின்னிலுள்ள ஷைத்தான்கள், மனிதர்களிலுள்ள ஷைத்தான்களை வழிகேடு, தீமை, பொய்யான செய்திகள் போன்றவற்றைக் கொண்டு, அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி, அவர்களை வழிகெடச் … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதின் எதிரிகள்

தௌஹீதுடைய பயன்களிற் சில……..

ஒரு தனி மனிதனிடத்திலோ, அல்லது ஒரு ஜமாஅத்திடத்திலோ ‘தௌஹீத்’ உறுதிப் படுத்தப்பட்டு விட்டால், அப்பொழுது மிகச் சிறந்த சில கனிவர்க்கங்கள் அவர்களுக்குக் கிடைப்பது நிச்சயமாகி விடும். அவற்றில் சில…… 1. மனிதன், அல்லாஹ் அல்லாதவர்களுக்கும், தாமே படைக்கப் பட்டிருக்கையில் எதனையும் படைக்கச் சக்தியற்ற படைப்புகளுக்கும் வணக்கம் செலுத்துவதிலிருந்தும், அவர்களுக்கு பணிந்து நடப்பதிலிருந்தும் அவனை விடுவிப்பதாகும். இது … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதுடைய பயன்களிற் சில……..

தௌஹீதுடைய சிறப்புகளிற் சில…..

“எவர்கள் விசுவாசம் கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் யாதொரு அக்கிரமத்தை (ஷிர்க்கை)யும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு; அவர்கள் தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்” (6:82) மேற்கண்ட வசனம் அருளப்பட்ட போது ஸஹாபாக்களின் நிலைபற்றி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘ஸஹாபாக்கள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! எங்களில் எவர்தான் அநியாயம் செய்யாதவர்கள் … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதுடைய சிறப்புகளிற் சில…..

தௌஹீதின் முக்கியத்துவம்

அல்லாஹ் உலகோர்களைத் தனக்கு வழிபடுவதற்காவே படைத்துள்ளான். அல்குர்ஆன் தனது அதிகமான அத்தியாயங்களில் ஏகத்துவக் கொள்கையையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் ஷிர்க்குடைய தீய விளைவுகளைப் பற்றி வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றது. இது, இம்மையில் அழிவுக்கும், மறுமையில் நிரந்தர நரக வாழ்க்கைக்கும் காரணமாய் அமைகின்றது. ரஸுல்மார்கள் அனைவரும் தமக்கு அல்லாஹ் கட்டளையிட்டபடி, தௌஹீதைக் கொண்டே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதின் முக்கியத்துவம்

“அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா”

(ரஹ்மான் அர்ஷில் அமைந்து விட்டான்) இஸ்தவா என்ற சொல்லுக்கு ‘அல்உலுவ்வு’ என்னும் அல்லாஹ்வுக்குரிய உயர்வை உறுதிப்படுத்தக் கூடியதாக குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஸலபு(முன்னோர்)களின் கூற்றுகள் ஆதாரமாய் அமைந்துள்ளன. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் உயர்வான இடத்தில் அமைந்துள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. “கலிமாதையிப், ஸலவாத்து போன்ற தூய வாக்கியங்கள் அவனளவில் உயர்கின்றன. நல்ல செயல்களை அவனே உயர்த்துகின்றான்” … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on “அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா”

இஸ்தஇன் பில்லாஹி வஹ்தஹூ

(அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோருவீராக) 1. ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! உதவி கோரினால் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கோரு!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்) இமாம் நவவி (ரஹ்) அவர்களும், இப்னுஹஜர் ஹைதமி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘இவ்வுலக தேவையாயினும் மறு … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on இஸ்தஇன் பில்லாஹி வஹ்தஹூ

‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்’

(வழிபடுவதும் கொண்டும், பிரார்த்தனை புரிவது கொண்டும், உதவி தேடுவது கொண்டும் உன்னை மட்டுமே சொந்தமாக்குகின்றோம்.) 1. முஸ்லிம்கள் இந்த வசனத்தை ஒரு நாளைக்குப் பல விடுத்தங்கள் தொழுகையினுள்ளும் வெளியிலும் ஓதி வருகின்றனர். இதுதான் ஸூரத்துல் பாத்திஹாவின் சாரமாகும். ஸூரா பாத்திஹா குர்ஆனின் சாரமாகும். 2. இவ்வசனம், தொழுகை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்ற அனைத்து வணக்கங்களையும் … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்’

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்பதின் அர்த்தம்

‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் ரஸூலாக அனுப்பப்பட்டார்கள்’ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்ததை உண்மைப் படுத்துவோம்; ஏவியதற்கு வழிப்படுவோம்; தடுத்ததை விட்டு விடுவோம்; அவர்கள் மார்க்கமாக்கியுள்ளதைக் கொண்டு அல்லாஹ்வுக்கு வழிபடுவோம். 1. அபுல்ஹஸன் அலி-அந்நத்வி அவர்கள் தனது ‘கிதாபுன் நுபுவ்வா’ என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ‘நபிமார்களின் ஆரம்பகால தஃவாவு (இறை பணி) … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்பதின் அர்த்தம்

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அர்த்தம்

(லாமஃபூத – பிஹக்கின் இல்லல்லாஹ் — அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவருமில்லை என்பதாகும்) இதிலே அல்லாஹ்வைத் தவிர வேறெரு இறைவன் இல்லையென்று கூறுவதும், இறைமைத்துவம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று கூறி உறுதிப்படுத்துவதும் அமைந்துள்ளது. 1. “அல்லாஹ்வைத் தவிர வேறொரு இறைவன் இல்லையென்பதை நீர் அறிந்து கொள்ளும்” (47:19) என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் அர்த்தத்தை … Continue reading →

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அர்த்தம்