ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?

5- நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34)வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமான் என்றால் என்ன?

நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி கடும் எச்சரிக்கை!

1- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!’
அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

2- ‘என் மீது, எவன் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல்கள் : புகாரீ 108, முஸ்லிம் 4

3- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4

4- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!’
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

யா அல்லாஹ்! நீயே புகழுக்குரியவன்! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்! உன்னிடமே உதவியும் தேடுகிறோம்! எங்களை நேரான பாதையில் வழிநடத்துவாயாக! அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த தூதர், உயிரினும் மேலான எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் அவர்களின் வழியை பின்பற்றுவோர் அனைவரின் மீதும் உன் அருளை என்றென்றும் பொழிந்திடுவாயாக!

1. வேதமும் விரிவுரையும்
மகத்துவமிக்க அல்லாஹ் தன்னை வணங்கி, வழிபடும் நோக்கத்திற்காகத்தான் மனிதர்களையும் ஜின்களையும் படைத்துள்ளான். வாழ்வை வணக்கமாக்கிட மனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறிகளை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அல்லாஹ் வகுத்தளித்தான். அவ்வழியில் தோன்றிய இறுதி வேதம் அல்குர்ஆன், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்.

பாதுகாக்கப்பட்ட வேதத்தின் விரிவுரையாளராக அல்லாஹ் தூதரை அறிமுகப்படுத்தினான்.

மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் (நபியே!) உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 16:44)

வேதவரிகளையும் தூதர் மொழிகளையும் பின்பற்றுவதில்தான் ஈருலக வெற்றி இருக்கிறது என்றும் வேதத்தில் அறிவிப்புச் செய்தான்.

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்டதை அது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் (அல்லாஹ்) சீராக்குகின்றான். (அல்குர்ஆன் 47:2)

எனக்கு வஹியாக அறிவிக்கப்பட்டது அல்குர்ஆன் மட்டுமல்ல! நான் கூறும் கட்டளைகளும்தான்! எனவே அல்குர்ஆனுடன் என் கூற்றையும் இணைத்தே பின்பற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

என்னுடைய ஹதீஸ்களில் ஏதேனும் ஒரு ஹதீஸ் அறிவிக்கப்படும். அப்போது ஒருவன் அறியணையில் சாய்ந்தவனாக, நமக்கிடையே அல்லாஹ்வுடைய வேதம் இருக்கிறது, அதில் நாம் காணும் அனுமதியை அனுமதியாக எடுத்துக் கொள்வோம். அதில் நாம் காணும் தடையை விட்டும் தவிர்ந்து கொள்வோம் என்று கூறும் நிலை விரைவில் ஏற்படலாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தடை செய்துள்ளதைப் போன்று அல்லாஹ்வுடைய தூதரும் தடை செய்துள்ளார்கள்.
(நபிமொழி, அறிவிப்பவர் : மிக்தாம் இப்னு மஃதீ (ரலி) நூல்: இப்னுமாஜா 12)

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக எனக்கு வேதமும் அதனுடன் அது போன்றதும் (ஹதீஸும்) கொடுக்கப்பட்டுள்ளது. (நபிமொழி, நூல் : அபூதாவூத் 3988)

2. நபிமொழிக்காக உழைத்த நல்லோர்
இதற்கு பிறகு வேறு இறைவேதமோ, இறைத் தூதரோ வரப்போவதில்லை, எனவே இதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்த மார்க்க அறிஞர்கள் மிகத்துரிதமாக செயலாற்றினர். இப்பணியில் அரபு மக்களுடன் அரபி அல்லாதவர்களும் கைகோர்த்தனர். அரபி அல்லாதவர்களே இதில் முன்னோடிகளாவும் திகழ்ந்துள்ளார்கள். அவர்கள் இப்பணிக்காகவே அரபி மொழியை கற்றார்கள். அதில் பாண்டியத்துவம் பெற்று மார்க்கத் தொன்றாற்றியுள்ளார்கள். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் மற்றும் நம் சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த ஷைக் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) ஆகியோர்கூட அரபி அல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

3. பின்னடைவில் தமிழுலகம்
ஏனோ தெரியவில்லை! தமிழக மார்க்க அறிஞர்கள் இம்முயற்சியில் பின்தங்கிவிட்டனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இஸ்லாமà
¯ இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் குடிபுகுந்தது வரலாற்று கூறும் உண்மை. ஆனால் தமிழ் முஸ்லிம்களுக்கு தாய் மொழியில் அல்குர்ஆன் மொழியாக்கம் கொடுக்கப்பட்டது எப்போது? தமிழுலகில் முதன்முதலாக வெளிவந்த தர்ஜுமத்துல் குர்ஆன் மதிப்பிற்குரிய அறிஞர் அ. கா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் வெளியீடு என்றே கருதுகிறேன். 1943-ல் மொழி பெயர்ப்பு நிறைவு செய்யப்பட்டு, 1949 மே மாதம் முதல் தேதி, 1368 ரஜப் பிறை 2-ம் நாள் அன்று வெளிவந்தது.

(தர்ஜுமத்துல் குர்ஆன், 1978 நான்காம் பதிப்பு, அறிமுக உரையிலிருந்து)
தமிழில் அல்குர்ஆனின் மொழியாக்கம் வெளிவரவே இவ்வளவு கால தாமதம் என்றால், பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இலட்சக் கணக்கான நபிமொழிகள் தமிழ் சமுதாயத்தை முழுமையாக எப்போது வந்த சேரப் போகிறதோ! அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்!

4. அனாச்சார ஊடுருவல்
தமிழக மக்களிடையே மார்க்கத்திற்கு முரணான கொள்கைகள், கோட்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஊடுறுவக் காரணமாக இருந்ததும் இந்த மொழியாக்கப் பின்னடைவுதான்! மார்க்கத்தின் மீளுமிடம் அல்குர்ஆனும் சுன்னாவும் என்ற நிலை மாறி, மார்க்கத்தின் மீளுமிடம் மார்க்க அறிஞர்களானார்கள்?!. அவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையினரைத் தவிர, பெரும்பாலோர் அல்லாஹ்வுடைய அமாநிதத்தை முறையாக மக்களிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டனர்.

-ஷிர்க்- அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் கொள்கைகளும் -பித்அத்- மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்ட நூதனச் செயல்களும் பள்ளியினுள் நிகழ்த்தப்படும் ஜும்ஆ உரையிலும் கலந்திருந்தது. அவர்களின் சில கூற்றுகள் பொதுமக்களின் உள்ளத்தில்கூட நெருடலை ஏற்படுத்தின. இது சரியாகத் தெரியவில்லையே! என்றெல்லாம் நினைத்த பொதுமக்களும் உள்ளனர். ஆனால் அல்குர்ஆனும் ஹதீஸ் நூல்களும் அரபியில் இருப்பதால் மீள்பார்வைக்கு வழியில்லாத பொதுமக்கள் மார்க்க போதகர்களின்?! கையில் சிக்கித் தவித்தனர். இன்றும் அந்நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

5. எழுச்சியை நோக்கி
இருப்பினும் நாம் வாழும் இக்காலகட்டத்தை எழுச்சி காலம் என்றுதான் கூறவேண்டும். பல நூறு வருடங்களாக முடங்கிக் கிடந்த மொழியாக்கப்பணிகள் அல்லாஹ்வின் பெருங்கிருபையால் செயல்படத் துவங்கியுள்ளன. ஸஹீஹுல் புகாரீ, ரியாலுஸ் ஸாலிஹீன் போன்ற ஹதீஸ் நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மார்க்க ஆதார நூல்கள் பொதுமக்களின் கையில் கிடைத்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் மார்க்க அறிஞர்களிடமும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று ஜும்ஆ உரைகளிலும் பிற சொற்பொழிவுகளிலும் ஆதாரம் கூறப்படுகிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனையும் அதன் விரிவுரையான ஸுன்னாவையும் அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் சமூக முன்னேற்றத்திற்கும் எழுச்சிக்கும் ஒரே வழி! அவ்வழியில் எங்களையும் இணைத்துக் கொள்வதற்காக தொடங்கியுள்ள சிறு முயற்சிதான் அல்லுஃலுவு வல்மர்ஜான் எனும் ஹதீஸ் நூலின் மொழியாக்கப் பணி.

இரண்டுவகை ஹதீஸ் தொகுப்புகள்
ஹதீஸ் கிரந்தங்களை தொகுப்பின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
1- ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத் இன்னும் இதுபோன்ற மூல கிரந்தங்கள்.
2- மூல கிரந்தங்களிpருந்து தொகுக்கப்பட்ட ரியாலுஸ் ஸாலிஹீன், மிஷ்காத்துல் மஸாபீஹ் போன்ற தொகுப்பு நூல்கள்.

இதில் அல்லுஃலுவு வல்மர்ஜான் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இது ஸஹீஹுல் புகாரீ மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்à
®Ÿà¯ நூல்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட நூலாகும். 54 தலைப்புகளில் பல்வேறு உப தலைப்புகளுடன் இம்மை, மறுமை வெற்றிக்கு அத்தியாவசியமான 1906 நபிமொழிகளை அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் எகிப்தைச் சார்ந்த முஹம்மது ஃபுவாத் அப்துல் பாகிஃ அவர்கள். அல்லாஹ் அவர்களின் இச்சேவையை ஏற்றுக் கொள்வானாக! மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸின் வாரிசுதாரராக்குவானாக! ஆமீன்.

அல்லுஃலுவு வல்மர்ஜான் என்று பெயரிட்டு வழங்கியிருக்கும் இந்நபிமொழிக் களஞ்சியம் உண்மையிலேயே ஆழ்கடல் அணிகலன்களாகிய முத்து பவளங்களைக் காட்டிலும் மிக மிக பெருமதிப்புடையவை. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியரால் தொகுக்கப்பட்ட இந்நபிமொழிக் களஞ்சியத்தை தமிழில் அறிமுகப் படுத்துவதில் மிக்க மகிழ்வடைகிறோம்.

ஆதாரப் பூர்வமான அனைத்து ஹதீஸ்களும் -அது எந்த கிரந்தத்தில் இடம்பெற்றிருந்தாலும்- ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாகும். இருப்பினும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மத்தியில் அவைகளின் தரத்திலும் வலிமையிலும் சில படித்தரங்களை ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஹதீஸ்கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் இப்னு ஸலாஹ்(ரஹ்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்கள்.

முதலாம் வகை – புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்ற ஹதீஸ்.
இரண்டாம் வகை – புகாரீயில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.
மூன்றாம் வகை – முஸ்லிமில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.
நான்காம் வகை – புகாரீ, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெறாவிட்டாலும் அவர்கள் இருவரும் கடைபிடிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஐந்தாம் வகை – புகாரீயில் இடம் பெறாவிட்டாலும் புகாரீயின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஆறாம் வகை – முஸ்லிமில் இடம் பெறாவிட்டாலும் முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஏழாம் வகை – புகாரீ, முஸ்லிமில் இடம் பெறாத, இரண்டின் நிபந்தனைகளுக்கும் உட்படாத, பிற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸ்.

முத்தஃபக்குன் அலைஹி
ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.

முத்தஃபக்குன் அலைஹி என்ற ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் முதல்தர வகையை உள்ளடக்கிய நபிமொழிக் களஞ்சியம்தான் அல்லுஃலுவு வல்மர்ஜான். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனுக்கு அடுத்த உயர்ந்த தரத்தில் போற்றப்படும் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு நூல்தான் இது.

இந்நூலில் ஸஹீஹுல் புகாரீயின் ஹதீஸ்களின் வாசகங்கள்தான் இடம் பெற்றுள்ளன. அதே ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் எண்ணை மட்டும் குறிப்பிட்டுள்ளோம். இரண்டு நூல்களிலும் இடம் பெற்ற ஒரே ஹதீஸின் வாசக அமைப்பு சற்று மாறியிருக்கலாம், அறிவிப்பாளர் மாறுபடலாம். ஆனால் கூறப்படும் செய்திகள் இரண்டும் ஒன்றாக இருப்பதை காணலாம்.

நன்றிகள்
ஸவூதி அரேபியா (ரியாத்) தாருஸ் ஸலாம் வெளியீடான அல்லுஃலுவு வல்மர்ஜான் ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஸஹீஹுல் புகாரீயின் தமிழ் மொழியாக்கங்கள்.

அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக! மனத்தூய்மையுடன் செய்யும் பணியாக அல்லாஹ் இதனை அங்கீகரிப்பானாக! மறுமையில் நபிமார்களுடனும் நல்லோர்களுடனும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இணைந்
து வாழ இதனை காரணமாக ஆக்கியருள்வானாக! இப்பணி முழுமையாக நிறைவடையவும் இதுபோன்ற மேலும்பல சேவைகள் செய்யவும் வாய்பளிப்பானாக! ஆமீன்.

வேண்டுகோள்
இம்முயற்சியில் நிறைவிருப்பின் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! குறைகளிருப்பின் அது நாங்கள் செய்தவையே! சுட்டிகாட்டினால் தாட்சணியமின்றி சரிசெய்துக் கொள்வோம்! இன்ஷா அல்லாஹ்!

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on முன்னுரை

வெற்றி பெற்ற பிரிவினர்

1. “(மூமின்களே!) அல்லாஹ்வுடைய கயிற்றை (குர்ஆனை) நீங்கள் பலமாகப் பற்றி பிடியுங்கள். (உங்களுக்குள்) பிரிந்து விடாதீர்கள்” (3:103) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

2. “இணைவைத்து வணங்குவோ (ஷிர்க் வைப்போ) ரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்களுடைய மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணிப் பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனர். அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) தைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர்” (30:31,32) என்று மூமின்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்.

3. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: ‘அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும், உங்களிடமுள்ள தலைவருடைய கட்டளைகளுக்குச் செவிதாழ்த்திக் கீழ்படியுமாறும் நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். அந்தத் தலைவர் அபிசீனியாவைச் சேர்ந்த ஒர் அடிமையாக இருப்பினும் சரியே. எனக்குப் பின் எவர் வாழ்வாரோ அவர் அதிகமான கருத்து முரண்பாடுகளைக் காண்பார். அப்பொழுது நீங்கள் எனது ஸுன்னத்தை (நடைமுறையை) யும், குலபாஉர் ராஷிதீன் (நேர்வழி நடக்கும் கலீபாக்) களுடைய ஸுன்னத்தையும் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாகும். அதனை கடைவாய்ப் பற்களினால் கௌவிப் பிடியுங்கள். (மார்க்கத்தில்) புதிதாகத் தோன்றுவனற்றில் மிக எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் புதிதானவை அனைத்தும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடாகும்’
ஆதாரம்: திர்மிதி. இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்பதாக திர்மிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆதாரமற்றவை அனைத்தும் சந்தேகத்துக்கு உரியனவாகும். கருத்துவேற்றுமை ஏற்படுமிடத்தில், ஆதாரமுள்ளதை எடுத்துக் கொண்டு சந்தேகமானதை விட்டுவிடுமாறு மேற்படி ஹதீஸ் வலியுறுத்துகின்றது. அத்துடன் மார்க்கமென்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட புதிதான செயல் முறைகள் அனைத்தும் வழிகேடு என்பதாக மேற்படி ஹதீஸ் கூறுகின்றது. ஆதாரமற்ற ஒரு செயல் பயபக்தி ஏற்படுவது போல் உருவமைத்துக் காட்டப்பட்டாலும், இடையில் புகுத்தப்பட்டது என்ற காரணத்தால், அது வழிகேடு என்பதில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை — (மொழிபெயர்ப்பாளர்)

4. ‘அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த யூத, கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்து 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். 72 கூட்டங்கள் நரகில் (பிரவேசிப்பார்கள்) ஒரு கூட்டத்தினர் மட்டுமே சுவர்க்கத்தில் (பிரவேசிப்பார்கள்). அந்தக் கூட்டம்தான் (ஸுன்னத் வல்) ஜமாஅத்தாகும்’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்

வேறு சிலரின் மற்றொரு ரிவாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘ (ஒரே) ஒரு கூட்டத்தைத் தவிர அவர்கள் அனைவரும் நரகம் பிரவேசிப்பார்கள். நானும் எனது ஸஹாபாக்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ, அவ்வழியில் இருப்பவர்கள் தான் அந்த ஒரு கூட்டமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஆதாரம்: திர்மிதி, (ஸஹீஹ்)

(சுவர்க்கம் பிரவேசிப்பது ஒரு கூட்டம் மட்டுமே என்றும் ஏனைய 72 கூட்டங்களும் நரகமே பிரவேசிப்பார்கள் என்றும் மேற்காட்டிய ஹதீஸ் கூறிற்று. இந்த ஹதீஸ் வேறு சில கிரந்தங்களில் சற்று விரிவாகக் காணப்படுகின்றது. சுவர்க்கம் செல்லும் கூட்டத்தின் அடையாளமாவது, நபி (ஸல்) அவர்களையும், ஸஹாபாக்களையும் மட்டுமே பின்பற்றுவார்கள். எவர்கள் தமது மார்க்க விஷயங்களில் எல்லா நிலைகளிலும் நபியவர்களையும், ஸஹாபாக்களையும் பின்பற்றுகின்றவர்களாக இருக்கின்றனரோ, அவர்கள் தான் சுவர்க்கம் செல்லும் 73வது கூட்டத்தினராவர்). (மொழிபெயர்ப்பாளர்)

5. ‘ஒரு தினம் நபி (ஸல்) அவர்கள் தனது கையினால் நேரான ஒரு கோடு கீறினார்கள். பின்பு ‘இதுதான் நேரான அல்லாஹ்வின் பாதையாகும்’ என்று கூறினார்கள். அக்கோட்டிலிருந்து அதன் வலமும் இடமுமாக பல கோடுகளைக் குறுக்காகக் கீறிவிட்டு, இவையனைத்தும் பல வழிகள்; இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டிருக்கிறான். அவற்றில் அந்த ஷைத்தான்கள் ஒவ்வொன்றும் இருந்து கொண்டு, அதனதன் வழியின் பால் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிவிட்டுப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

(அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக இதுதான் எனது நேரான வழி. நீங்கள் அனைவரும் இதனையே பின்பற்றுங்கள். (நேரான ஒரு தனி வழிக்குமாறான) பலவழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனு (அல்லாஹ்வு) டைய பாதையை விட்டும், உங்களைத் திருப்பிப் பல பிரிவுகளாகப் பிரித்து விடும். நீங்கள் அனைவரும் உள்ளச்சம் உடையவர்களாக ஆகுவதற்காக இதனைக்கொண்டே அல்லாஹ் உங்களுக்கு வஸிய்யத் செய்து (நற்புத்தி) கூறுகிறான்” (6:153) அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) ஆதாரம்:அஹ்மத், நஸஈ, ஹாகிம்

6. நாம் அனைவரும் ஒன்றுபட்டு சங்கையான குர்ஆனைப் பற்றிப் பிடிக்குமாறும், தமது மார்க்கத்தில் பல பிரிவினர்களாகப் பிரிந்த இணைவைப்பவர்களில் நாம் ஆகிவிடாதிருக்குமாறும் மேற்காட்டிய வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் பல பிரிவுகளாகப் பிரிந்தனரென்றும், முஸ்லிம்கள் அதனைவிட அதிகமாகப் பிரிவார்களென்றும், இவர்களில் ஒரு கூட்டத்தைத் தவிர ஏனையவர்கள் குர்ஆனை விட்டும், நபியவர்களது ஸுன்னாவை விட்டும் தூரப்படுவதனால் நரகம் பிரவேசிப்பதற்குக் காரணமாக அமைகிறது என்றும் நபி (ஸல்) அவர்கள் எமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

அப்பிரிவுகளிலிருந்து வெற்றிபெற்றோர் ஒரேயொரு கூட்டத்தினர் மட்டுமே ஆவார்கள். இக்கூட்டம் மட்டுமே சுவர்க்கம் பிரவேசிக்கும். இவர்கள் குர்ஆனையும், ஸுன்னாவையும், நபித்தோழர்களின் நடைமுறையையும் உறுதியாகப் பற்றிப் பிடித்தவர்கள் ஆவார்கள்.

7. வெற்றிபெற்ற கூட்டம் என்றால், அவர்கள் தான் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் ஆவார்கள். அஹ்லுஸ்ஸுன்னா (ஸுன்னா உடையோர்) என்ற இக்கூட்டத்துக்கு அஹ்லுல் ஹதீஸ் (ஹதீஸ் உடையோர்) என்ற மற்றொரு பெயரைத் தவிர வேறெந்தப் பெயரையும் கூறுவதற்கில்லை என்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிய்யி (ரஹ்) அவர்கள் தனது ‘அல்குன்யா’ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on வெற்றி பெற்ற பிரிவினர்

யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த மனிதா!

22:5. மனிதர்களே! மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்: நாம் உங்களை மண்ணிலிருந்து, பிறகு இந்திரியத்திலிருந்து – பிறகு இரத்தக்கட்டியிலிருந்து – பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகதான் (இவற்றை நாம் எடுத்துரைக்கிறோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தைஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு உங்களைக் குழந்தை வடிவில் வெளிக் கொணர்கின்றோம்.

19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா?

23:14. பிறகு, அந்த விந்தினை இரத்தக்கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர், அந்த இரத்தக்கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக் கட்டியை எழும்புகளாய் ஆக்கினோம். பின்னர், அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளர செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்.

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.

56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?

அல் குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த மனிதா!

தமிழாக்கியோன் உரை

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும், ஸலாமும் அவனது ரஸூல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ அவர்களது ‘அல்-பிர்கதுந் நாஜியா’ (Al-FIRKATHUN NAJIYA) என்ற அரபி நூலை வாசிக்கும் அரிய வாய்ப்பொன்று கிட்டியது. அல்-ஹம்துலில்லாஹ்!

அவர் தனது நூலை 54 சிறு தலையங்கங்கள் கொண்டதாக அமைத்திருப்பது, வாசிப்போருக்கு விருவிருப்பையும் உற்சாகத்தையும் ஊட்டுவதாக அமைந்துள்ளது. ஈமானை வலிறுத்துவதாகவும், சமூகத்தில் மலிந்துள்ள ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கைகள் போன்றவற்றைத் தடை செய்வதாகவும் அவை அமைந்துள்ளன.

அவர் ஒவ்வொரு அம்சத்துக்கும் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஹதீஸைப் பொறுத்தமட்டில் அதன் ஆதாரக் கிரந்தங்களைக் காட்டும் போது, புகாரி, முஸ்லிமல்லாத ஏனைய கிரந்தங்களின் ஆதாரங்களுக்குப் பின்னால் ‘ஸஹீஹ்’ (சரியானது) ‘ஹஸன்’ (நல்லது) என்ற வார்த்தையைக் குறித்துக் காட்டுகின்றார்.

ஏனென்றால் அக்கிரந்தங்களில் ஸஹீஹ் அல்லாதவைகளும் உண்டு. அதனால் அவற்றிலுள்ள ஸஹீஹ்களை மட்டுமே தனது நூலுக்கு ஆதாரமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் புகாரி, முஸ்லிமைப் பொறுத்தமட்டில் அவற்றில் ஸஹீஹானவைகள் மட்டுமே இருப்பதால் ஸஹீஹ் என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல் வெறுமனே ‘புகாரி, முஸ்லிம்’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இவ்விதமாகவே ஹதீஸ்களின் ஆதாரங்களைத் தனது நூலில் குறிப்பிடுவதாக “ளஈபான’ மவுளூஆன ஹதீஸ்கள் என்ற 49ம் தலையங்கத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மேற்படி நூலை தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ் பேசும் மக்களுக்கும் பயன்பெறச் செய்யவேண்டுமென்ற ஆவலைப் பூர்த்திச் செய்யும் வகையில் எனது இம் மொழிபெயர்ப்பைப் பிரசுரம் செய்ய அகில இலங்கை ஜம்இய்யத் அன்ஸார் ஸுன்னத் முஹம்மதிய்யா முன் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்வியக்கம் இஸ்லாம் மார்க்கத்துக்காகச் செய்யும் இப்பணியையும், இதல்லாத ஏனைய பணிகளையும் அல்லாஹ் அங்கீகரித்து அருள் புரிவானாக! ஆமீன்!

அப்துல் வதூத் முஹம்மத் ஸாலிஹ்
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தமிழாக்கியோன் உரை

நெருக்கடியான வாழ்க்கை எதனால்?

“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?”

“(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62)

“என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும் இராது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர”. (15:42)

“(நபியே!) நீர் திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டுக் காக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக் கொள்ளும்.* எவர்கள் விசுவாசம் கொண்டு தங்கள் இறைவன் மீது தவக்குல் வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைத்திருப்பவர்களிடமும், அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்”. (16:98-100)

“எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (சினேகிதனாக) காட்டி விடுவோம். அவன் இவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுவான். நிச்சயமாக அவைதாம் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. எனினும் அவர்களோ தாங்கள் நேரான பதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்”. (43:36-37)

“நிச்சயமாக நாம்தாம் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும், அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை இரட்சித்துக் கொள்வோம்”. (15:9)

“நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகின்றானோ அவன் வழிதப்பவும், நஷ்டமடையவும் மாட்டான். எவன் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ, அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும்.** மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாக எழுப்புவோம். அவன் என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய். நான் (உலகில்) பார்வையுடையவனாக இருந்தேனே என்று கேட்பான். அதற்கு இவ்வாறே நம் வசனங்களும் உன்னிடம் வந்தன. நீ அவற்றை மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று இறைவன் கூறுவான்”. (20:123-126)

“அலிஃப், லாம், மீம், ஸாத். (நபியே! இவ்) வேதம் உம்மீது அருளப் பெற்றுள்ளது. இதைப் பற்றி உம்முடைய நெஞ்சத்தில் யாதொரு நெருக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், விசுவாசம் கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும் அருளப் பெற்றுள்ளது. (மனிதர்களே!) உங்களுக்கு உங்கள் இறைவனால் அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்கு) பாதுகாப்பாளர் (களாக ஆக்கி அவர்) களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவது வெகு சொற்பமே”. (7:1-3)

“(நபியே! இது) வேதநூல். இதனை நாமே உம்மீது அருட்செய்திருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களின் இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவீராக. (அப்பிரகாசமே) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய, யாவரையும்) மிகைத்தோனின் நேரான வழியாகும். அந்த அல்லாஹ் (எத்தகையோனென்றால்) வானங்களிலும், பூமியிலும் இருப்பவை யாவும் அவனுக்கே சொந்தமானவையே. ஆகவே நிராகரிப்போருக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்கு) பெருங்கேடுதான்”. (14:1-2)

“(நபியே!) உமக்கு நம்முடைய கட்டளைகளில் உயிரானதை (குர்ஆன்) வஹி மூலம் அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், விசுவாசம் இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும் (இவ்வேதத்தை உமக்கு வஹி மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு இதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீர் (இதன் மூலம் ஜனங்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர். இதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை (யாவையும்) அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) நீர் அறிந்து கொள்வீராக”. (42:52-53)

* நாவளவில் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்) என்று சொல்ல வேண்டுமென்பது மட்டுமல்ல இதன் கருத்து: அத்துடன் ‘திருக்குர்ஆனை ஓதிடும்போது ஷைத்தானின் வழிகெடுக்கும் ஊசலாட்டங்களை விட்டு அல்லாஹ் என்னைப் பாதுகாப்பானாக!’ என்றும் உளமார்ந்த முறையில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில், எவன் குர்ஆனிலிருந்து நேர்வழி பெறவில்லையோ அவன் வேறு எங்கிருந்தும் நேர்வழி பெற முடியாது. எவன் குர்ஆனிலிருந்து வழிகேட்டை அடைகிறானோ அவனை இவ்வுலகமனைத்தும் சேர்ந்தும் கூட வழிகேட்டிலிருந்து விடுவிக்க முடியாது.

** “உலகில் நெருக்கடியான வாழ்க்கை உண்டு” — என்பதன் கருத்து, ஏழ்மையோ ஆதரவின்மையோ அவனை வருத்தும் என்பதல்ல. மாறாக, இங்கு அவன் மன அமைதியை இழந்து விடுவான். அவன் பெருஞ் செல்வந்தனாக இருந்தாலும் நிம்மதியிழந்தே வாழ்வான். அவன் முழு அதிகாரத்துடன் நாட்டை ஆள்பவனாக இருந்தாலும் மனக்குழப்பம், அமைதியின்மை ஆகியவற்றிலிருந்து ஈடேறமாட்டான். அவனுடைய உலகியல் வெற்றிகளெல்லாம் ஆயிரக்கணக்கான முறையற்ற நடத்தைகளின் விளைவுகளாகும். அவற்றின் காரணமாக தனது மனசாட்சி முதல் அக்கம் பக்கத்திலுள்ள முழு சமூகச்சூழல் வரை ஒவ்வொன்றோடும் அவன் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கவேண்டி வரும். அது அவனை நிம்மதியுடனும், மன அமைதியுடனும், உண்மையான மகிழ்ச்சியுடனும் வாழ விடாது.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நெருக்கடியான வாழ்க்கை எதனால்?

மலப்பாதையில் உடலுறவு

பலவீனமான ஈமானுடைய ஒரு சிலர் தம் மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதிலிருந்து விலகி பேணுதலாக இருப்பதில்லை. இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன் சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்)

இன்னும் சொல்வதானால் ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன், அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டான் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி

நற்சிந்தனையுடைய மனைவியர் சிலர் இதனை மறுத்தாலும் சில கணவன்மார்கள் இதற்கு நீ இணங்கவில்லையெனில் உன்னை விவாகரத்துச் செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர். இன்னும் சிலரோ இது கூடுமா? கூடாதா? என மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்பதற்கு வெட்கப்படக்கூடிய தம் மனைவியரை இது கூடும் என்ற சந்தேகத்தில் ஆழ்த்தி ஏமாற்றி விடுகின்றனர். சிலபோது பின்வரும் குர்ஆன் வசனத்தையும் அவளுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்; “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பும் முறையில் செல்லுங்கள்” (2:223). ஆனால் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்திருக்குமென்பது நாம் அறிந்த ஒன்றாகும். கணவன் தன் மனைவியின் பிறப்பு உறுப்பில் அவன் விரும்பும் முறையில் முன்புற வழியாகவோ பின்புற வழியாகவோ உடலுறவு கொள்ளலாம் என்பதை திண்ணமாக நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியே உள்ளனர். அப்படியிருக்க பின் துவாரமென்பது பிறப்பு உறுப்பு அல்லவே.

இத்தகைய தீமையின் காரணங்களுள் மற்றொன்று என்னவெனில், தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு முன் அறியாமைக்காலத்து அருவருக்கத்தக்க தீய நடத்தைகளை அனந்தரப் பழக்கங்களாக பெறுகிறான் மனிதன். மேலும் ஹராமென விலக்கப்பட்ட விநோதமான பாலுணர்வு அனுபவங்களுடன் அல்லது ஆபாசமான படங்களின் தீய காட்சிகளால் நிறைந்த சிந்தனையுடன் வருகிறான். இத்தகைய பாவங்களிலிருந்து பாவமன்னிப்புத் தேடாமலேயே தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசித்து விடுகிறான்.

ஆக இச்செயல் – கணவன் மனைவி இருவரும் இதனைப் பொருந்திக் கொண்டாலும் – ஹராமானதே என்பது தெளிவு. ஏனெனில் ஒரு ஹராமைப் பொருந்திக் கொள்வது அதை ஹலாலாக மாற்றி விட முடியாது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on மலப்பாதையில் உடலுறவு

நல்லுணர்வு பெறுவோர் உண்டா?


2:2. இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர் வழிகாட்டியாகும்.

2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

11:13. “இ(வ்வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய திண்ணமாக உங்களால் முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

5:16. அல்லாஹ் இதை (குர்ஆனை)க் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர்வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.

38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.

10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

10:58. “அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங் கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.

15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.

17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது” என்று (நபியே!) நீர் கூறும்.

39:27. இன்னும், இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா?

அல்குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

முன்னுரை!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் நிழலில் வெற்றிபெற்ற பிரிவினர்
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனையே புகழ்கின்றோம். அவனிடமே பிழை பொறுக்கத் தேடுகிறோம். எம்மில் தோன்றும் தீமைகளை விட்டும், எமது செயல்களில் ஏற்படும் கெடுதிகளை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். எவனை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறானோ அவனை வழிதவறச் செய்யவும், எவனை அவன் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனை நேர்வழிப் படுத்தவும் எவராலும் முடியாது. அல்லாஹ்வையன்றி வேறெந்த இரட்சகனுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரென்றும் அவனுடைய தூதரென்றும் நான் சான்று பகர்கிறேன்.
இந்நூல் முக்கியமானதோர் ஆய்வு நூலாகும், பல பிரிவுகள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. பரிசுத்தமான தௌஹீ (ஏகத்துவத்) தின் அடிப்படைக் கொள்கையின் பக்கமும், உலகில் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் பரவியிருக்கும் ஷிர்க் (இணைவைப்பதி) லிருந்து அவர்களைத் தூரப்படுத்துவதாகவும் இந்நூல் அழைப்பு விடுக்கின்றது. இந்த ஷிர்க் தான் கடந்த கால சமுதாயங்களின் அழிவுக்குக் காரணமாயிருந்தது.
தற்கால உலகின் துர்ப்பாக்கியத்துக்குக் காரணமும், குறிப்பாக உலக முஸ்லிம்களின் இழிநிலைக்குக் காரணமும் இதுவாகும். இவர்கள் பல துன்பங்கள், யுத்தங்கள் சோதனைகளும் போன்றவற்றைச் சந்திப்பதெல்லாம் இதனாலேதான்.
இந்நூலிலுள்ள ஆய்வுகளும், அதனுல் அமைந்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும் நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களின் அடிப்படையில் செயல்பட்டு, வெற்றி பெற்ற ஒரு கூட்டத்தாரின் அடிப்படைக் கொள்கையைத் தெளிவு படுத்துவதாக அமைந்துள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக அமைய வேண்டுமென வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்.
முஹம்மத் ஜமீல் ஜைனூ
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on முன்னுரை!