மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு

“இன்னும் மாதவிடாய்ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஓர் தூய்மையற்ற நிலை, ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டும் விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்” (2:222) அவள் தூய்மையடைந்து குளிக்காத வரை அவளிடம் உறவு கொள்வது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: “பிறகு அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” (2:222)

இது எவ்வளவு பெரிய மோசமான பாவமென்பதை பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது. ‘யாரேனும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உறவு கொண்டால் அல்லது குறிகாரனிடம் சென்றால் முஹம்மதுக்கு இறக்கியருளப்பட்ட (வேதத்)தை அவன் நிராகரித்து விட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி

இதனை ஒருவர் வேண்டுமென்றே அல்லாமல் தவறுதலாக, (அதன் சட்டத்தை) அறியாமல் செய்து விட்டால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. வேண்டுமென்றே (சட்டம்) அறிந்து செய்தால், சில அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் அவர் பரிகாரம் செய்வது அவசியமாகும். பரிகாரம் பற்றி கூறப்படக்கூடிய ஹதீஸை அவர்கள் சரி காணுகின்றனர். பரிகாரம் என்பது ஒரு தினார் அல்லது பாதி தினார் தர்மம் செய்வதாகும். இந்த ஒரு தினார் அல்லது பாதி தினார் கொடுப்பதிலேயும் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.

சிலர் கூறுகின்றனர்: அவ்விரண்டில் ஒன்றை அவர் தெரிவு செய்து கொள்ளலாம். அதாவது விரும்பினால் ஒரு தினாரோ பாதி தினாரோ கொடுக்கலாம். இன்னும் சிலர் கூறுகின்றனர்: மாதவிடாய் காலத்தின் கடைசி கட்டத்தில் உதிரப்போக்கு மிகவும் குறைந்து விடும்போதோ அல்லது அவள் குளிப்பதற்கு முன்போ அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் பாதி தினார் கொடுக்க வேண்டும். உதிரபோக்கு அதிகம் ஏற்படுகின்ற மாதவிடாயின் ஆரம்ப கட்டத்தில் அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் ஒரு தினார் கொடுக்க வேண்டும். ஒரு தினார் என்பது மக்களுடைய வழக்கத்தில் உள்ள அளவின்படி 4.25 கிராம் தங்கமாகும். இந்த அளவு தங்கத்தையோ இதன் மதிப்புக்கு ஈடான ரொக்கப் பணத்தையோ அவன் தர்மம் செய்யலாம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு

இவர்கள் முஸ்லிம்கள்!

10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். அவருக்கு அவருடைய இறைவன் ‘அஸ்லிம்’ நீர் (எனக்கு முற்றிலும்) வழிப்படும் எனக்கூறிய சமயத்தில், அவர் (எவ்விதத் தயக்கமுமின்றி) ‘அகிலமனைத்தின் இரட்சகனாகிய உனக்கு இதோ நான் இஸ்லாமாகி விட்டேன் (வழிப்பட்டேன்) என்று கூறினார்”

10:84. நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.”

7:126. “(அன்றி) எங்களிடம் இறைவனின் அத்தாட்சிகள் வந்தபோது நாங்கள் அவனைக் கொண்டு விசுவாசம் கொண்ட (இந்தக் குற்றத்தைத்) தவிர வேறு எதற்கு எங்களிடமிருந்து பழிவாங்கப் போகிறாய் என்று ஃபிர்அவ்னை வினவி, ‘இறைவா! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக (முஸ்லிம்களாக) எங்களை ஆக்கி எங்களைக் கைப்பற்றுவாயாக’ என்று (கூறி மனந்திருந்திய சூனியக்காரர்கள்) பிரார்த்தித்தார்கள்”

12:101. யூஸுஃப் நபி (அலை) ‘இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.”

5:44. தௌராத்தையும் நிச்சயமாக நாம் தான் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது பிரகாசமும் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு (முஸ்லிமாக) நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு மார்க்கக் கட்டளையிட்டு வந்தார்கள்”.

5:111. “அன்றி என்னையும் (அல்லாஹ்வையும்) என்னுடைய தூதரையும் (அதாவது உம்மையும்)(ஈஸா (அலை) விசுவாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் என்னும் உம் சிஷ்யர்களுக்கு நான் அறிவித்த சமயத்தில் அவர்கள் (அவ்வாறே) நாங்கள் விசுவாசித்தோம். நிச்சயமாக நாங்கள் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களென்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக எனக்கூறியதையும் நினைத்துப் பாரும் (என அந்நாளில் கூறுவான்.)”

அல்குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவர்கள் முஸ்லிம்கள்!

அறிமுகம்

வெற்றி பெற்ற பிரிவினர்

அரபு மூலம்
முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ
விரிவுரையாளர் தாருல் ஹதீஸில் கைரிய்யா
மக்கா

தமிழ் மூலம்
மௌலவி எம். எஸ். அப்துல் வதூத் (ஜிப்ரி)
ஆசிரியர், தாருத் தவ்ஹீத் அரபிக்கல்லூரி

வெளியிட்டோர்
அகில இலங்கை ஜம்இய்யத் அன்ஸார்
ஸுன்னத் முஹம்மதியா
இலங்கை

TRANSLATION CENTRE
ஜம்இய்யா இஹ்யாவுத்துராதுல் இஸ்லாமிய்யா
ரவ்லா – குவைத்
Phone: 2574912-3-4 EX 108

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அறிமுகம்

உண்மையான அழைப்புக்கு உரியவன்!

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.

13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாக கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்கு சமமே).

13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள் – வான தூதர்கள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனை பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையை தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும், அல்லாஹ் ஒரு சமுதாயத்தவருக்குத் தீவினையை நாடினால், அதைத் தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத் தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

13:12. அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குறிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன் தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.

13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடைவனாக இருக்கின்றான்.

13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனையன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்:) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டிருப்பவனைப்போல் இருக்கிறது. (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் (நிராகரிப்பவரின்) பிராத்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உண்மையான அழைப்புக்கு உரியவன்!

ழிஹார்

அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட – இந்த சமுதாயத்திலும் பரவி இருக்கின்ற பல வார்த்தைகளில் ழிஹாரும் ஒன்று. அதாவது ஒரு கணவன் தன் மனைவியிடம் ‘நீ எனக்கு என் தாயைப் போன்றவள்’, ‘நீ எனக்கு என் சகோதரியைப் போன்றவள்’ என்பன போன்ற மோசமான வார்த்தைகளைக் கூறுவர். இதற்கு ழிஹார் எனப்படும். பெண்ணுக்கு இதிலே அநீதியிருப்பதால் இறைமார்க்கம் இதை அறுவருப்பாகக் கருதுகிறது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்:

“உங்களில் எவர்கள் தம் மனைவியரை ழிஹார் செய்கின்றார்களோ அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகி விட மாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவரே அவர்களின் அன்னையராவர். அவர்கள் வெறுக்கத்தக்க பொய்யான சொல்லையே கூறுகின்றனர். திண்ணமாக அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனும் மன்னிப்பவனும் ஆவான்” (58:2)

இது விஷயத்தில் இறைமார்க்கம் பரிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரிகாரம், தவறுதலாக ஒருவரைக் கொலை செய்து விட்டால் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைப் போல, இன்னும் ரமழான் பகலில் (நோன்பு வைத்துக் கொண்டு) ஒருவர் தம் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குச் செய்ய வேண்டிய பரிகாரத்திற்கு ஒத்த கடுமையான பரிகாரமாகும். ழிஹார் செய்தவர் இந்தப் பரிகாரத்தைச் செய்யாதவரை மனைவியுடன் இல்லறம் நடத்தக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் தம் மனைவியரை ழிஹார் செய்து பின்னர் தாங்கள் கூறிய சொல்லை விட்டும் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் – இருவரும் ஒருவரையொருவர் தொடும் முன்பாக அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறே உங்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. மேலும் நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். இனி எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லை எனில், அவ்விருவரும் தொடும் முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கு சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகிறதென்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும் நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது” (58:34)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on ழிஹார்

காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்

பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் ‘நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்’ என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய வார்த்தைகளால் தன் கணவனிடம் சவால் விடுகிறாள்.

விவாகரத்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்பது அறிந்ததே! குடும்பம் சிதைந்து குழந்தைகள் சின்னா பின்னமாகி விடுவர். பலனளிக்காத நேரத்தில் கைசேதப்பட வேண்டியது வரும். இதனாலும் இன்னபிற காரணங்களாலும் தான் விவாகத்துச் செய்வதை மார்க்கம் தடை செய்திருப்பதில் உள்ள தத்துவம் தெரிய வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்தப் பெண்ணாயினும் ஒரு காரணமும் இல்லாமல் தன் கணவரிடம் விவாகரத்துக் கோரினால் சுவனத்தின் வாடை அவளுக்கு ஹராமாகி விடும்’ அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அஹ்மத்

‘விவாகரத்துக் கோரக்கூடிய பெண்கள் நயவஞ்சகர்கள்’ என்பதும் நபிமொழி. உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கும் இந்நபிமொழி தப்ரானியில் உள்ளது.

மார்க்கம் அனுமதிக்கின்ற காரணம் இருந்தால், உதாரணமாக கணவன் தொழுகையை விட்டு விடுகிறான் அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்துகிறான் அல்லது விலக்கப்பட்ட காரியத்தைச் செய்ய தனது மனைவியை நிர்பந்திக்கிறான் அல்லது அவளை துன்புறுத்தியோ அல்லது இறைமார்க்கம் அவளுக்கு வழங்கி இருக்கின்ற உரிமைகளைத் தர மறுத்தோ அவளைக் கொடுமைப் படுத்துகிறான். பிறகு அறிவுரைகளும், சீர்திருத்த முயற்சிகளும் அவனுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லையெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெண் தன்னையும் தன் மார்க்கத்தையும் காத்துக் கொள்வதற்காக விவாகரத்தைக் கோரினால் அவள் மீது எந்தக் குற்றமும் கிடையாது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்

பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

புனிதமான மார்க்கம் நமது இஸ்லாம். இது இரு அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று: இறைவனுக்கு இணை துணை கற்பிக்காமல் வணக்க வழிபாடுகள் செலுத்துவது. இரண்டு: எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நபிகள் காட்டித் தந்தார்களோ அப்படி அவனை வணங்குவது. இவ்விரு அடிப்படைகளையும் முழுமையாக நாம் எடுத்து செயல்படுவதினால் கலிமத்துஷ் ஷஹாதாவின் உண்மையான தாத்பரியத்தை மெய்ப்பித்தவர்களாக ஆக முடியும். இறைவன் அடியார்களின் இதயத்தால் பயந்து, வழிபட்டு, உதவிகோரி, நேசித்து, பெருமைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆசைவைத்து நடக்கப்படக் கூடியவனாவான். இந்நிலையில் தான் உண்மையாக நாம் அவனை இறைவனாக ஏற்றிருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும். அல்லாஹ்வுக்கு என்னென்ன தன்மைகள், பாத்தியதைகள், உரிமைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதிலும் மனிதர்கள் கூட்டாக மாட்டார்கள். வணக்கமும் அல்லாஹ்வுக்குரியது. வேறு எவரும் வணங்கப்பட மாட்டார்கள். பிரார்த்தனைக்குரியவனும் அவனே. வேறு யாரும் பிரார்த்திக்கப்பட மாட்டார்கள். அவனையே அஞ்ச வேண்டும். வேறு சிருஷ்டிகளுக்கு அஞ்சக் கூடாது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on பிரார்த்தனையின் படித்தரங்கள் (3) இறுதி பகுதி!

கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல்

ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும்.

‘ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம் கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளை சபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி)

தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம் அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்.

எனவே கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு கீழ்படிந்து, விரைந்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது மனைவியின் கடமையாகும். ‘ஒரு மனிதன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் (பயணம் புறப்படுவதற்காக) ஒட்டகத்தின் சேணத்தின் மேல் அமர்ந்திருந்தாலும் செல்லட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ அறிவிப்பவர்: ஸைத் பின் அர்க்கம். (பஸ்ஸார்)

அதே நேரத்தில் தன்னுடைய மனைவி நோயாளியாகவோ, கர்ப்பிணியாகவோ அல்லது வேறு ஏதேனும் துன்பத்தில் இருந்தால் அது போன்ற சமயங்களில் அவளை இல்லறத்திற்கு நிர்பந்திக்காதிருப்பது கணவன் மீது கடமையாகும். காரணம் அவ்விருவருக்கும் இடையே பிணக்கு ஏற்படாமல் கருத்தொற்றுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல்

வேதனையின் பால் அழைக்கும் மூதாதையர்

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

5:104. “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக் கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிட மாட்டான் – நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல!) நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதில் கண்டோமோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

43:22. அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்,”

43:23. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.

43:24. (அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதைவிட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

37:69. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழிகேட்டிலேயே கண்டார்கள்.

37:70. ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.

37:71. இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

37:72. மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

37:73. பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வேதனையின் பால் அழைக்கும் மூதாதையர்

சிலர் சிலரை விட தரத்தால் உயர்த்தியது ஏன்?

43:26. இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;

43:27. “என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்) . அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்று கூறியதையும் நினைவு கூறுவீராக)!

43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.

43:29. எனினும், இவர்களிடம் உண்மையும், தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.

43:30. ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

43:31. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள (மக்கா, மதினா) பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?”

43:32. உம் இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம். “இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரை விட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.

43:33. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

43:34. அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்): ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தான்.

அல் குர்ஆன்: அஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சிலர் சிலரை விட தரத்தால் உயர்த்தியது ஏன்?