ஒரினப் புணர்ச்சி

லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள். (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள், வழிப்பறி செய்கின்றீர்கள், உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்’. அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், ‘நீர் உண்மையாளராயின் அல்லாஹ்வின் வேதனையை எங்களுக்குக் கொண்டுவாரும்’ என்பதாகவே இருந்தது” (29;28,29)

இந்த இழிவான படுமோசமான குற்றத்துக்காக அதைச் செய்தவர்களை அல்லாஹ் நான்கு வகையான தண்டனைகளைக் கொடுத்துத் தண்டித்தான். வேறெந்த சமூகத்தையும் அல்லாஹ் இப்படித் தண்டித்ததில்லை. அவை: அவர்களின் கண்களைக் குருடாக்கினான். அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான். அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான். அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்.

(முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த) இந்த ஷரீஅத்தின் சரியான கூற்றின்படி வாளால் வெட்டிக் கொல்வதே இக்குற்றத்தைச் செய்த இருவரின் தண்டனையாகும். அவ்விருவரும் சுய விருப்பத்தின்படி அதைச் செய்திருந்தால். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களை நீங்கள் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்’அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்

இது போன்ற மானக்கேடான செயல்களால் நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் இன்றைய காலத்தில் பரவி வருவதைப் பார்க்கும் போது இக்குற்றத்துக்கு இத்தகைய தண்டனை விதித்திருப்பதில் இறைவனுடைய நுட்பம் நமக்குத் தெரிய வருகிறது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on ஒரினப் புணர்ச்சி

பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)

முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை.

இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் தடுத்திருந்தார்கள் என்று தௌராத்தில் வருகிறது. மனிதன் இத்தகைய அமல்களைச் செய்வதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறான் என்றும் அவர்கள் கூறினார்கள். ஏனெனில் அனைத்து நபிமார்களின் மார்க்கமும் ஒன்றே. ஆனால் நடைமுறை விதிகள் சில மட்டுமே ஒவ்வொரு நபிக்கும் வெவ்வேறாக இருக்கும். இந்த உண்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கியபோது, ‘நாங்கள் நபிமார்கள் சமூகம். எங்கள் அனைவரது மதமும் ஒன்றே’ என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)

தகுதியால் மேன்மையான மனிதா!

(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிபட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிச்(சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டு கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால் அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனை) புறக்கணித்து விடுகிறீர்கள் – இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கிறான்.

(கரை சேர்ந்த) பின் அவன் உங்களைப் பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காணமாட்டீர்கள்.

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விட மாட்டான் என்றும் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காண மாட்டீர்கள்.

நிச்சயமாக ஆதமுடைய சந்ததியை கண்ணியப் படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட, அவர்களை (தகுதியால்) மேன்மைப்படுத்தினோம்.

அல் குர்ஆன்: அத்தியாயம்-17, வசனம்- 66 முதல் 70 வரை.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தகுதியால் மேன்மையான மனிதா!

விபச்சாரம்

மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் – இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்! திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது” (7:32) இன்னும் சொல்வதானால் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும், ஆண், பெண் இருபாலாரும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், பெண்கள் அந்நிய ஆண்களுடன் தனித்திருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளை பிறப்பித்து விபச்சாரத்தின் பால் இட்டுச் செல்லக்கூடிய அனைத்து வழிகளையும் ஷரீஅத் அடைத்து விட்டது.

திருமணமானவர் (ஆணோ, பெண்ணோ) விபச்சாரம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார். அவருக்குரிய தண்டனை மரணிக்கும் வரை அவர் மீது கல்லெரிய வேண்டும். இது, அவர் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவும் அவருடைய உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் விபச்சாரக் குற்றத்தைச் செய்யும் போது இன்பத்தை அனுபவித்தது போல இப்போது வேதனையை அனுபவிப்பதற்காகவும் ஆகும். திருமணமாகாதவர் அதாவது முறையாகத் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபடாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு அதிக அளவு கசையடி கொடுக்க வேண்டும். ஷரீஅத்துடைய குற்றவியல் சட்டத்தில் நூறு கசையடிகள் என்று வந்துள்ளது. மட்டுமல்ல குற்றவாளிக்கு அவமானமும் (மற்றவர்களுக்கு படிப்பினையும்) ஏற்படும் வகையில் முஃமின்களின் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் முழுமையாக ஒரு வருடத்திற்கு அவரை நாடு கடத்தி இழிவை ஏற்படுத்த வேண்டும்.

விபச்சாரம் செய்தவர்களுக்கு கப்றில் வேதனையாவது, அவர்கள் ஒரு அடுப்பில் நிர்வாணமாகக் கிடப்பார்கள். அதன் மேல்புறம் குறுகலாகவும் கீழ்ப்புறம் விசாலமாகவும் இருக்கும். கீழிருந்து நெருப்பு மூட்டப்படும். அப்போது அவர்கள் ஓலமிடுவர். மேலே வந்து அதனை விட்டும் வெளியேற எத்தனிப்பர். பிறகு நெருப்பு அணைக்கப்படும் போது அவர்கள் உள்ளே திருமிபி விடுவர். இவ்வாறு கியாம நாள் வரை செய்யப்படும்.

வயது கடந்து மண்ணறையைச் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்ட ஒரு மனிதர் – இது நாள் வரையில் அல்லாஹ் அவருக்கு (திருந்துவதற்கான) அவகாசம் அளித்திருந்தும் – தொடர்ந்து விபச்சாரம் செய்து வந்தால் விவகாரம் இன்னும் மோசமாகும். அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘மூவரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான், அவர்களை (பாவங்களிலிருந்து) பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு துன்பமிகு வேதனை இருக்கிறது. அவர்கள், வயது கடந்தும் விபச்சாரம் செய்தவர், மகாப் பொய்யனாக உள்ள அரசன், ஆணவம் கொண்ட ஏழை ஆகியோராவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முஸ்லிம்)

விபச்சாரம் செய்து சம்பாதிப்பது சம்பாத்தியங்களில் தீய சம்பாத்தியமாகும். தனது மானத்தை விற்று சம்பாத்தியம் செய்யும் ஒரு விபச்சாரி – ஹதீஸில் வந்துள்ளது போல – பாதி இரவு கழிந்ததும் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற சமயத்தில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் பாக்கியத்தை விட்டும் தடுக்கப்பட்டவளாவாள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதற்கு தேவையும், வறுமையும் பொதுவாக மார்க்கம் அனுமதிக்கின்ற காரணமாக அமையாது. பட்டினி கிடந்தாலும் படி தாண்ட மாட்டாள் பத்தினி என்பது பழமொழி.

தற்காலத்தில் ஆபாசத்தினுடைய அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டு விட்டன. அதற்கான வழியை ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியாலும் தன் நண்பர்களுடைய சூழ்ச்சியாலும் எளிதாக்கி விட்டான். பாவிகளும், தீயவர்களும் அவனைப் பின்பற்றலானார்கள். அதனால் பெண்கள் தங்கள் அழகு, அலங்காரங்களை வெளிக்காட்டுவது அதிகமாகி விட்டது. ஆபாசங்களும், அந்நியப் பெண்களைப் பார்த்தலும், ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து விடுதலும் பரவலாகி விட்டன. மஞ்சள் பத்திரிக்கைகளும், நீலப்படங்களும் பரவி விட்டன. தீமைகள் நிறைந்த, கட்டுப்பாடற்ற நாடுகளுக்கு பயணமாவது அதிகரித்து விட்டது. விபச்சார விடுதிகளும், பாலியல் பலாத்காரங்களும், கற்பழிப்புகளும் பெருகி விட்டன. கருக்கலைப்புகளும் தவறான வழியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டன.

இறைவா! உனது அருளையும் அன்பையும் மன்னிப்பையும் உன் புறத்திலிருந்து பாதுகாப்பையும் உன்னிடம் வேண்டுகிறோம். அதன் மூலம் ஆபாசங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! மேலும் எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, எங்கள் கற்புகளைக் காத்திடவும் விலக்கப் பட்டவைகளுக்கும் எங்களுக்கும் மத்தியில் ஒரு திரையை ஏற்படுத்தவும் வேண்டுகிறோம்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on விபச்சாரம்

வெங்காயம், பூண்டு!

வெங்காயம், பூண்டு சாப்பிட்டதோடு பள்ளிக்கு வருதல்

அல்லாஹ் கூறுகிறான்: “ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்” (7:31) ‘பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் நம்மை விட்டும் அல்லது நம் பள்ளியை விட்டும் விலகியிருக்கட்டும். தனது வீட்டில் உட்கார்ந்து கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: ‘வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய செடியைச் சாப்பிட்டவர் நம் பள்ளியின் பக்கம் நெருங்கவே வேண்டாம். மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முஸ்லிம்)

ஒரு முறை ஜும்ஆ நாளில் உமர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். தமது உரையில் இவ்வாறு கூறினார்கள்: ‘மக்களே! நீங்கள் இரண்டு செடிகளை உண்கிறீர்கள். அவ்விரண்டையும் கெட்ட வாடையுடையதாகவே நான் கருதுகிறேன். அவை வெங்காயம், வெள்ளைப் பூண்டு. நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன், பள்ளியில் ஒருவரிடம் அதன் வாடையை உணர்ந்தால், அவரை வெளியேற்றும்படி உத்தரவிடுவார்கள். பிறகு பகீஃ எனுமிடத்திற்கு அவர் வெளியேற்றப்படுவார். எனவே யாரேனும் அதைச் சாப்பிட விரும்பினால் நன்கு சமைத்துச் சாப்பிடட்டும்’
அறிவிப்பவர்: மிதான் பின் அபீதல்ஹா (ரலி) நூல்: முஸ்லிம்

சிலர் தம் வேலைகளை முடித்துக் கொண்டு அப்படியே பள்ளிக்கு வந்து விடுகின்றனர். அவர்களின் அக்குள்களிலிருந்தும், காலுறைகளிலிருந்து வெறுக்கத்தக்க வாடை வெளியேறுகிறது. இதுவும் கூடாததாகும். இதைவிடவும் மோசமானது என்னவென்றால் பீடி, சிகரெட் குடிப்பவர்கள் அதைக் குடித்து விட்டு பள்ளிக்கு வருகின்றனர். அதன் மூலம் மலக்குகளுக்கும் தொழுகின்றவர்களுக்கும் தொல்லை தருகின்றனர்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on வெங்காயம், பூண்டு!

பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)

இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் தேடுகிறேன். உதவி கோருகிறேன். என் பகைவனுக்கெதிராக உதவி புரிவீராக!’ என்றெல்லாம் பிரார்த்தித்தலாகும். அன்றி கீழ்வரும் பிரார்த்தனை இவை எல்லாவற்றையும் விட பயங்கர குற்றத்திற்குரியதாக இருக்கிறது. ‘நீர் என்னை மன்னித்தருள்வீர்! என்னுடைய தௌபாவையும், பாவ மன்னிப்பையும் ஏற்றருள்வீர்!’ என்று பிரார்த்தனை செய்வது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)

மிகவும் அன்புடையவன்!

அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)

அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே! (28:88)

எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! (6:103)

அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42: 11)

அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)

ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)

அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. (112:3)

பிரபஞ்சம் முழுவதின் ஆட்சியதிகாரம் நேரடியாக அவனிடத்தே இருக்கிறது. (36:83)

வானம், பூமி மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் அவனே நிர்வகிக்கின்றான். (32:5)

அனைத்துக்கும் உணவளிப்பவன். (37:5)

வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன் (67:2)

அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)

அனைத்துக்கும் அமைதியும், புகலிடமும் அளிப்பவன். (59:23)

மறைந்திருப்பவை, நிகழ்ந்தவை, நிகழக் கூடியவை அனைத்தையும் அறிந்தவன். (2:29,59:22)

அனைத்தையும் செவிமடுப்பவன். (6:13)

அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். (2:20)

அனைத்தையும் மிகைத்தவன்; அவனது தீர்ப்பை யாரும் எதிர்த்திட முடியாது. (59:23)

அவன் நுண்ணறிவாளன்; அவனது எந்த படைப்பும் வீணானவை, இலக்கற்றவை அல்ல! (34:1)

அளவிலாக் கருணையுடையவன்; இணையிலாக் கிருபை உடையவன். (1:2)

மிகவும் அன்புடையவன். (2:207)

அவனுடைய கருணையும், கிருபையும் ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்திருக்கின்றது. (7:156)

நீதி செலுத்துபவன்; மக்களிடம் முழு நீதியுடன் நடந்து கொள்பவன். (10:4)

யார் மீதும் அணுவளவும் கொடுமை புரியாதவன். (50:29)

அவனுடைய கட்டளைகள் அனைத்தும் நீதியின் அடிப்படையிலானவை. (6:115)

அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவரைப் பழிவாங்குபவன். (3:4)

மன்னிப்புக் கோருபவருக்கு மன்னிப்பு அளிப்பவன். (85:14)

பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். (110:3)

நன்மைகளைப் பெரிதும் மதிப்பவன். (64:17)

தான் நாடியதைச் செய்யக் கூடியவன். (55:16)

பேசுகிறவன். (2:253)

தான் விரும்பும் வகையில் செயல்படுபவன். (3:40)

அவன் நாடுவது உண்டாகும்; அவன் நாட்டமின்றி எதுவும் தாமாகவே நடப்பதில்லை. (76:30)

தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)

தனக்குத்தானே பெருமைக்குறியவன்; மிகவும் சிறப்புடையவன்; கண்ணியமானவன். (11:73)

எந்த ஒரு குறையையும் விட்டுத் தூய்மையானவன். எல்லா சிறப்பு அம்சங்களும் கொண்டவன். அந்த உன்னத அந்தஸ்தை விட்டுத் தாழ்மையான அல்லது அதற்கு முரணான எந்தத் தன்மையும் அவனிடம் இல்லை. (59:23)

ஒவ்வொரு தகுதியிலும் இணையற்றவன். அவனுடன் எதையும் ஒப்பிட முடியாது. (42:11)

வானம், பூமியில் நிகழும் எதுவொன்றையும் வைத்து அவனது எதார்த்த நிலையை யூகிக்க முடியாது. (30:26)

வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே! (2:163)

பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மகிமையே படிந்திருக்கிறது. (45:37)

அவனைத் தவிர வேறு எவரிடமும் இம்மியளவும் மேன்மையோ வணங்கப்படுவதற்குரிய தன்மையோ இல்லை. அவன் எதிரில் எல்லோரும் இயலாதர்கள்; மேலும் அவனது கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள்; அவனது அடிமைகள்!

அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. (18:26)

அல்குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மிகவும் அன்புடையவன்!

வேண்டுமென்றே இமாமை முந்துவது

மனிதன் இயல்பாகவே அவசரப்படக் கூடியவனாக இருக்கிறான். “மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கிறான்” என்று அல்லாஹ் கூறுகிறான். (17:11) நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அவசரம் ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: பைஹகீ

ஒருவன் ஜமாஅத்துடன் தொழும் போது தனது வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ தொழுகின்ற பெரும்பாலோர் ருகூவிலும், சுஜூதிலும், பொதுவாக ஒவ்வொரு தக்பீரிலும் ஏன் ஸலாம் கொடுப்பது உட்பட எல்லா நிலைகளிலும் பெரும்பாலும் இமாமை முந்துவதைக் கவனிக்கலாம். ஏன் சில சமயம் அவன் கூட இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. பெரும்பாலோரிடம் சாதாரணமாகத் தோன்றக்கூடிய இத்தகைய செயல் குறித்து நபி (ஸல்) அவர்கள் மூலமாக கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. அவர்கள் கூறினார்கள்: ‘இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், தமது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றி விடுவான் என்பதை அஞ்ச வேண்டாமா?’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம். தொழுகையாளி தொழுகைக்கு வரும்போதே அமைதியாகவும் கம்பீரமாகவும் வர வேண்டும் என்ற கட்டளை இருக்கும் போது தொழுகையில் எவ்வாறு இப்படி நடந்து கொள்ள முடியும்?

சிலர், இமாமை பிந்துவது ஒரு வகையில் இமாமை முந்துவதைப் போல எண்ணிக் கொள்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிக்ஹ் கலை அறிஞர்கள் இது விஷயத்தில் அழகான ஒரு அடிப்படையைக் கூறி இருக்கிறார்கள். என்னவெனில் இமாம் அல்லாஹ் அக்பர் என்று கூறி முடித்தவுடன் மஃமூம்கள் பின் தொடர ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முந்தவும் கூடாது. பிந்தவும் கூடாது. இதுவே சிறந்ததாகும். நபித்தோழர்கள் தம் தொழுகையில் நபி (ஸல்) அவர்களை முந்தாமலிருப்பதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

பர்ராஉ பின் ஆஸிப் (ரலி) கூறுகிறார்கள்: ‘நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுவார்கள். அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தி பிறகு தமது நெற்றியை நிலத்தில் வைக்காத வரை யாரும் (ஸஜ்தாவுக்காக) தமது முதுகை வளைப்பதை நான் பார்த்ததில்லை. அதன் பிறகே பின்னால் உள்ள அனைவரும் ஸஜ்தாவில் வீழ்வார்கள்’ (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் முதுமையை அடைந்த போது, தமது அசைவுகளில் ஒரு விதத் தாமதம் ஏற்பட்ட போது தம் பின்னால் தொழக் கூடியவர்களுக்கு இப்படி உணர்த்துவார்கள்: ‘மக்களே! எனக்கு வயதாகி விட்டது. ருகூவிலும் சுஜூதிலும் என்னை முந்தாதீர்கள்’ முஆவியா பின் அபீ சுஃப்யான் அறிவிக்கக்கூடிய இச்செய்தி பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்து அபூதாவூதிலும் உள்ளது.

இமாம் தொழுகை நடத்தும் போது தக்பீர் கூறுவதில் நபி வழிப்படி நடக்க வேண்டும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியில் இவ்வாறு வந்துள்ளது: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூவு செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்… பிறகு (ஸஜ்தாவுக்காக) குனியும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு (மீண்டும்) ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் சொல்வார்கள். பிறகு இவ்வாறே தொழுது முடிக்கும் வரை அனைத்து ரக்அத்துகளிலும் நடந்து கொள்வார்கள். அதுபோல இரண்டாம் ரக்அத்தில் (அத்தஹிய்யாத்தில்) அமர்ந்த பிறகு (மூன்றாம் ரக்அத்துக்காக) எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்’ (புகாரி)

இமாம் தமது அசைவுகளுடன் தக்பீரையும் அமைத்துக் கொண்டால் மஃமூம்களும் முன்பு கூறப்பட்ட முறை பிரகாரம் இமாமை அக்கறையோடு பின்பற்றினால் ஜமாஅத்துடைய ஒழுங்கு அனைவருக்கும் நிறைவேறிவிடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on வேண்டுமென்றே இமாமை முந்துவது

சத்தியமும் அசத்தியமும்

13:16. (நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.” (அவ்வாறில்லையே; எனவே, நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.


13:17. அவன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.

13:18. எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சத்தியமும் அசத்தியமும்

தொழுகை!

தொழுகையில் வீணான காரியங்களும் அதிகப்படியான அசைவுகளும்

இவை எப்படிப்பட்ட ஆபத்து எனில் தொழுகையாளிகளில் பலர் இவற்றிலிருந்து விடுபட முனைவதில்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவதில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வின் திரு முன் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்” (2:238)

மேலும் கூறுகிறான்: “திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களின் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்” (23:1,2)

தொழுகையில் சுஜூத் செய்யும் போது சுஜூத் செய்யுமிடத்தில் மணலை சமப்படுத்துவது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ‘நீ தொழுது கொண்டிருக்கும் போது மணலை சமப்படுத்தாதே! அவ்வாறு செய்துதான் ஆக வேண்டுமென்றால் பொடிப் பொடிக் கற்களை சமப்படுத்துவதற்காக ஒரு முறை செய்து கொள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஅய்கீப் (ரலி) நூல்: அபூதாவூத்

தொழுகையில் அதிகமான அசைவுகள் தேவையில்லாமல் தொடர்ந்து நடைபெறுவது தொழுகையை வீணாக்கி விடும் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின் அல்லாஹ்வின் திருமுன் நின்று கொண்டு வீணான காரியங்களைச் செய்பவர்களின் நிலை என்ன? அல்லாஹ்வின் திருமுன் நின்று கொண்டு அவர்கள் தம் கடிகாரத்தைப் பார்க்கின்றார்கள், ஆடையைச் சரி செய்கிறார்கள், விரலை மூக்கில் விடுகிறார்கள், இடது புறமும், வலது புறமும், மேல் நோக்கியும் பார்க்கிறார்கள், தம் பார்வை பறிக்கப்பட்டு விடும் என்றோ, தம் தொழுகையை விட்டும் ஷைத்தான் திசை திருப்பி விடுவான் என்றோ அவர்கள் அஞ்சுவதில்லை.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on தொழுகை!