இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது

இஸ்லாத்தில் சிறந்தது எது? காரியங்களில் சிறந்தது எது?

24- ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு)நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று கூறினார்கள்.
புகாரி-12: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

25- அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)சொன்னார்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரது செயலே சிறந்தது.
புகாரி-11: அபூ மூஸா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது

ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?

5- நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34)வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஈமான் என்றால் என்ன?

மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

அல்லாஹ் தனது வேதத்தில் நமக்கு அறிவுறுத்திய விஷயங்களில் மனைவியருக்கிடையே நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நேர்மையாக நடந்து கொள்வது சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான்” (4:129)

அல்லாஹ் விரும்பும் நீதம் என்பது மனைவியருடன் இரவு தங்குவதில் நீதமாக நடந்து கொள்வதும், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் ஒவ்வொருவருக்கும் உரிய உரிமையை வழங்குவதும் ஆகும். நீதம் என்பது என்பு செலுத்துவதில் அல்ல. ஏனெனில் அதில் மனிதன் நீதமாக நடந்து கொள்ள முடியாது.

மக்களில் சிலர் தம்மிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கும்போது ஒரு மனைவியின் பக்கமே முற்றிலும் சாய்ந்து மற்றவளை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். அந்த ஒருத்தியிடம் மட்டும் அதிக இரவுகள் தங்குகின்றனர். அல்லது மற்றவளை விட்டு விட்டு ஒருத்திக்கு மட்டும் செலவு செய்கின்றனர். இது ஹராம் – தடுக்கப்பட்டதாகும். அவர் மறுமையில் எந்த நிலையில் வருவார் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒருவருக்கு இரு மனைவியர் இருந்து ஒரு மனைவியின் பக்கம் அவர் (முழுமையாகச்) சாய்ந்து விட்டால் மறுமையில் அவரது ஒரு புஜம் சாய்ந்த நிலையில் வருவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூதாவூத், தாரமி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on மனைவியருக்கிடையில் அநீதமாக நடத்தல்

ஈமானின் அநேக கிளைகள்

21- ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-9: அபூஹூரைரா(ரலி)

22- அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்)அவர்கள் சென்றார்கள். உடனே,அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-24: அப்துல்லாஹ் (இப்னு உமர்(ரலி)

23- இம்ரான் பின் ஹூஸைன்(ரலி)அவர்கள், நாணம் நன்மையை மட்டுமே தரும் என நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.
புகாரி-6117: இம்ரான் பின் ஹூஸைன்(ரழி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமானின் அநேக கிளைகள்

ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்

எந்த வித சந்தேகமுமின்றி ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவாறு அல்லாஹ்வைச் சந்திப்பவர் சுவனில் நுழைவார். அவரை நரக நெருப்பு தீண்டாது.

17- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் ஈஸா(அலை)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன(ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)என்றும், அவனிடமிருந்து(ஊதப்பட்ட)ஓர் உயிர்,என்றும்,சொர்க்கம் (இருப்பது)உண்மை தான், என்றும்,எவர்(சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-3435: உபாதா(ரலி)

18- (ஒரு முறை) நான் நபி(ஸல்)அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். எனக்கும் நபிகளாருக்கும் இடையே(ஒட்டகச்)சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை.(அந்த அளவுக்கு நெருக்கத்தில் நான் இருந்தேன்.) அப்போது நபி(ஸல்)அவர்கள் முஆதே! என்று அழைத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்.(கூறுங்கள்)என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் முஆத் பின் ஜபலே! என அழைத்தார்கள். நான் (அப்போதும்)அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)என்று பதிலளித்தேன். நுபி(ஸல்)அவர்கள் அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிpமை என்ன என்பதை நீர் அறிவீரா! என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவருடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். நபி(ஸல்)அவர்கள் அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன வென்றால் அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும் அவனுக்கு எதனையும் (எவரையும்)இணை வைக்கக்கூடாது என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் முஆது பின் ஜபலே! என்று அழைத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன்.(கூறுங்கள்)என்று சொன்னேன். நபி(ஸல்)அவர்கள் அடியார்கள் அதை நிறை வேற்றினால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள், என்று சொன்னேன். ஆடிபார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்றால், அவர்களை அவன் (மறுமையில)வேதனைப் படுத்தாமல் இருப்பதாகும் என்று சொன்னார்கள்.
புகாரி-6500: முஆத் பின் ஜபல்(ரலி)

19- நான் நபி(ஸல்)அவர்களுக்குப் பின்னால் உஃபைர் என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று (என்னிடம்)கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று பதில் கூறினேன். நபி(ஸல்)அவர்கள், மக்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால்,அவர்கள் அவனை(யே)வணங்கிட வேண்டும்,அவனுக்கு எதனையும்(எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப் படுத்தாமல் இருப்பதாகும் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,அவர்களுக்கு (இந்த நற்செய்தியை)அறிவிக்காதீர்கள்.அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள், என்று பதிலளித்தார்கள்.
புகாரி-2856: முஆத்(ரலி)

20- ஒரே வாகனத்தின் மீது முஆது(ரலி) அவர்கள் நபி(ஸல்)அவர்களுக்குப் பின்னே à
®…மர்ந்திருக்கும் நிலையில் நபி(ஸல்)அவர்கள் முஆதே! என்று அழைத்தார்கள். உத்தரவிற்குக் காத்திருக்கிறேன்,அல்லாஹ்வின் தூதரே!(தங்களின் உத்தரவிற்குப் பணிவதைப்)பெரும் பேறாகவும் கருதுகிறேன். என்று முஆத்(ரலி)அவர்கள் கூறினார்கள். முஆதே! என மீண்டும் நபி(ஸல்)அவர்கள் அழைத்தார்கள். உத்தரவிற்குக் காத்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! அதனைப் பெரும் பேறாகவும் கருதுகிறேன். என மீண்டும் முஆத்(ரலி)அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு தம் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குறிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவிடமாட்டான். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே! என்று முஆத் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில்(இது மடடும் போதுமே என்று)அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றித்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் தான் இந்த ஹதீஸை முஆத்(ரலி)அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
புகாரி-128: அனஸ் பின் மாலிக்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்

ஈமானின் முதல் அங்கம்

ஈமானின் முதல் அங்கம் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவது.
16- அபூதாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபி (ஸல்)அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் பின் ஹிஷாம்,அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக சாட்சிக் கூறுவேன்,என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீர் புறக்கணிக்கப்போகின்றீரா? எனக்கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்)அவர்கள் ஒரு புறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே(மரணிக்கின்றேன்)என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்து விட்டார். அப்போது நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும் வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன், என்று கூறியதும்,இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று,(அல்குர்ஆன்-9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(புகாரி:1360 அல் முஸய்யப் பின் ஹஸ்ன்(ரழி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமானின் முதல் அங்கம்

ஏற்றுக் கொள்ளும் வரை..

லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்ளும் வரை மக்களுடன் போரிடுதல்.

13- நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஜகாத்தை கடமையை மறுத்ததன் மூலம்) இறை நிராகரிப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர்(ரலி) தயாரானார்கள்) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே அதனைக் கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். அவர்களில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர (அவருக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்). அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஜகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்று பதிலளித்தார்கள். இதனைச் செவியுற்ற உமர் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்! அவர் கூறியதே சரியானது! என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி-1400, முஸ்லிம் 29)

14- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். அவர்களில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர (அவருக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்) அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.

(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல்கள் : புகாரி-2946, முஸ்லிம் 30)

15- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக சாட்சி கூறி, தொழுகையையும் நிலை நாட்டி, ஜகாத்தையும் வழங்கும் வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே அவர்கள் இதனைச் செய்துவிடுவார்களானால், அவர்களுடைய உயிர்களையும் உடமைகளையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டனர். அவர்களில் இஸ்லாத்தில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவர்களைத் தவிர (அவர்களுக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்) அவர்களுடைய விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.

(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரீ 25, முஸ்லிம் 25)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஏற்றுக் கொள்ளும் வரை..

விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொள்வது. மார்க்கக் கடமைகளைப் பேணுவது. மக்களை அதன் பால் அழைப்பது

10- இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்துல் கைஸூடைய தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது, வந்திருக்கும் இம்மக்கள் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ரபீஆ வம்சத்தினர் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வருக! வெட்கப்படாமல், கவலை கொள்ளாமல் வருகை தாருங்கள்! என்று வரவேற்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தம் தடை செய்யப்பட்ட புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) தங்களை சந்திக்க முடியாது. காரணம் எங்களுக்கும் தங்களுக்குமிடையில் இறை நிராகரிப்பாளர்களான முளர் வம்சத்தினர் வாழ்கிறார்கள். எனவே திட்டவட்டமாக சில கட்டளை எங்களுக்கு கூறுங்கள். அவற்றை நாங்கள் இங்கே வராதவர்களுக்கும் அறிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சுவர்க்கம் செல்வோம் என்றனர். மேலும் நபி (ஸல்) அவர்களிடம் சிலவகை பானங்களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான்கு காரியங்களை அவர்களிடம் ஏவினார்கள். நான்கு காரியங்களை தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்புவதென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள் என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக சாட்சி கூறுவது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத்தை வழங்குவது, ரமலான் மாதம் நோன்பு நோற்பது, போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஜந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்கி விடுவது என்றார்கள். மேலும் (மது வைத்திருந்த) மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்ச மரத்தின் அடிமரத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகிய நான்கையும் தடை செய்தார்கள். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு (இங்கே வராதவர்களுக்கு) அறிவித்து விடுங்கள் என்றும் கூறினார்கள்.

(நூல்கள் : புகாரி- 53, முஸ்லிம் 24)

11- நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த போது அவரிடம், நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் சொல்கிறீர். எனவே அவர்களை முதன் முதலில் அல்லாஹ்வை வணங்குவதன்பால் அழைப்பீராக! அவர்கள் -வணக்கத்திற்குரியவன்- அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொண்டால், இரவு பகல் இணைந்த ஒரு நாளில் ஜந்து வேளை தொழுவதை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால் அவர்களுடைய செல்வங்களிலிருந்து வசூலித்து அவர்களிடையே உள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஜகாத் பெறுவீராக! மக்களின் பொருட்களில் உயர்தரமானவற்றை வசூலிக்காதீர்! என்று அனுப்பினார்கள்.

(அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி), நூல்கள் : புகாரி-1458, முஸ்லிம் 28)

12- நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி)அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுனராக) அனுப்பி வைத்தபோது, அநீதியிழைக்கப்பட்டவரின் (உமக்கு எதிராக) பிரார்த்திப்பதை அஞ்சிக் கொள்வீராக! ஏனெனில் அப்பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி-2448, முஸ்லிம் 27)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு

சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்

7- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள்! என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்! என்று (மக்களை நோக்கிச்) கூறி விட்டு, (அந்த மனிதரை நோக்கி) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்க வேண்டும்! தொழுகையை நிலை நாட்டவேண்டும்! ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்! உறவைப் பேணிக் கொள்ளவேண்டும்! என்று கூறி விட்டு, உமது வாகனத்தில் புறப்படுவீராக! என்றார்கள்.
அம்மனிதர் (அப்போது)தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்!

(அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி), நூல்கள்: புகாரி 5983, முஸ்லிம் 14-15)

8. கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்கவேண்டும். விதிக்கப்பட்ட தொழுகைகளையும் நிர்ணயிக்கப்பட்ட ஜகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்! ரமலானில் நோன்பு நோற்க வேண்டும்! என்றார்கள். அதற்கவர், என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட எதையும் அதிகமாகச் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி), நூல்கள்: புகாரி- 1397, முஸ்லிம் 16)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்

தொழுகை

இஸ்லாத்தின் ஜந்து கடமைகளில் ஒன்றான தொழுகைகள்

6- நஜ்த் தேசத்தைச் சார்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய தலை பரட்டையாக இருந்தது. குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஜவேளைத் தொழுவது என்றார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான தொழுகைகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தொழுகைகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் இஸ்லாத்தின் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -நோன்புகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்தைப் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான ஜகாத்) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தர்மங்கள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்றார்கள்.

(அறிவிப்பவர் : தல்ஹா (ரலி), நூல்கள் : புகாரீ 46, முஸ்லிம் 12)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகை