தொழுகை

இஸ்லாத்தின் ஜந்து கடமைகளில் ஒன்றான தொழுகைகள்

6- நஜ்த் தேசத்தைச் சார்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய தலை பரட்டையாக இருந்தது. குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஜவேளைத் தொழுவது என்றார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான தொழுகைகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தொழுகைகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் இஸ்லாத்தின் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -நோன்புகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்தைப் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான ஜகாத்) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தர்மங்கள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்றார்கள்.

(அறிவிப்பவர் : தல்ஹா (ரலி), நூல்கள் : புகாரீ 46, முஸ்லிம் 12)

This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.