ஹஜ் நேரத்தில் தொழுகையை (மினாவில்) சுருக்குதல்.

402– நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் உஸ்மான் (ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான் (ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள்.

புகாரி-1082 :அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


403– நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு இரு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்நாளில் எப்போதுமில்லாத அளவுக்கு நாங்கள் அதிகமாகவும் இருந்தோம். எந்த அச்சமுமில்லாமலும் இருந்தோம்.

புகாரி-1656: ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாயீ (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஹஜ் நேரத்தில் தொழுகையை (மினாவில்) சுருக்குதல்.

ஈமானுடைய கிளைகளும், குஃப்ருடைய கிளைகளும்

1. சொல், செயல், விசுவாசம் என்று ஈமானுக்கு மூன்று கிளைகள் உண்டு. ஈமானென்றால் நாவினால் மொழிந்து, உள்ளத்தினால்
உறுதிகொண்டு, உறுப்புகளினால் செயல்படுத்துவதாகும்.

நாவினால் மொழிவதென்றால் இஸ்லாத்தின் கலிமாவான ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற வாக்கியத்தை மொழிவதாகும். உள்ளத்தின் செயல்பாடென்றால் அதன் எண்ணம் அதனைத் தூய்மைப்படுத்தல் என்றும், உறுப்புகளைக் கொண்டு செயல்படுத்தல் என்றும் இருவகைப்படும். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஈமானுடைய கிளைகளும், குஃப்ருடைய கிளைகளும்

பிரயாணிகள் தொழுகை..

398– அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.

புகாரி-350: ஆயிஷா (ரலி)

399– நான் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று அல்லாஹ் கூறினான்.

புகாரி-1101. இப்னு உமர் (ரலி)


400– நான் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் (அஸர்) இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்.

புஹாரி: 1089 அனஸ் (ரலி)

401– ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்’ என்று அனஸ் (ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாட்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘பத்து நாட்கள் தங்கினோம்’ என்று விடையளித்தார்கள்.

புஹாரி: 1081 அனஸ்(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பிரயாணிகள் தொழுகை..

ஒட்டுக் கேட்டல்

அல்லாஹ் கூறுகிறான்: “துருவித் துருவி ஆராயாதீர்கள்” (அல்குர்ஆன்; 49:12). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘யாரேனும் மக்களின் செய்தியை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்டால் மறுமையில் அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’ நபிமொழி (தப்ரானி)

அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் அவன் துருவித் துருவி ஆராய்தல் (அல்லது ஒட்டுக் கேட்டல்) எனும் பாவத்துடன் (கோள் சொல்லுதல் எனும்) இன்னொரு பாவத்தையும் செய்தவனாவான். ‘கோள் சொல்பவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்’ என்பது நபிமொழி. (புகாரி)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on ஒட்டுக் கேட்டல்

தொழுகை நேரம் தவறி விட்டால்..

396-நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பிக் கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். இறைத்தூதர் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ரலி) அவர்களும் கண் விழித்தார்கள். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு குரலை உயர்த்தி ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்’ என்று கூறலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் கண்விழித்து (சிறிது தொலைவு சென்றதன்) பின் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், ‘இன்னாரே! எங்களுடன் நீ ஏன் தொழவில்லை?’ என்று கேட்டார்கள். அவர் ‘எனக்குப் ‘பெருந்தொடக்கு’ ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் ‘தயம்மும்’ செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார்.

நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள். எங்களுக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்று கொண்டிருக்கும்போது (ஒட்டகத்தின் மீது) தோலினாலான தண்ணீர்ப் பைகள் இரண்டிற்கிடையே தன் இரண்டு கால்களையும் தொங்கவிட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவளிடம் நாங்கள், ‘தண்ணீர் எங்கே (உள்ளது)?’ என்று கேட்டோம். அதற்கு அவள், ‘தண்ணீர் (இங்கு) இல்லை” என்று சொன்னாள். நாங்கள், ‘உன் வீட்டாரு(ள்ள இந்தப் பகுதி)க்கும் தண்ணீ(ருள்ள இடத்து)க்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?’ என்று கேட்டோம். அவள், ‘ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்)” என்று சொன்னாள். நாங்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட” என்று சொன்னோம். அவள், ‘இறைத்தூதர் (ஸல்) என்றால் யார்?’ என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடியவில்லை. இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவள் நபி (ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போன்றே பேசினாள்; தான் அனாதைக் குழந்தைகளின் தாய் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர. உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர்ப் பைகள் இரண்டையும் கொண்டு வரச் சொல்லிக் கட்டளையிட்டு அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும் வரை (அவற்றிலிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல்ப் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக் கொண்டோம். (எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் குடிப்பாட்டவில்லை. அந்தத் தோல்ப்பை (தண்ணீர்) நிரம்பி வழிந்த காரணத்தால் (அதன்) வாய் பிளந்து போகவிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டு வாருங்கள்” என்று (தம் தோழர்களுக்கு) உத்திரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி (அவளுக்கு வழங்கி)னார்கள். இறுதியில், ‘அவள் தன் வீட்டாரிடம் சென்று, ‘நான் மக்களிலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன்” என்று சொன்னாள். அல்லாஹ் (அவளுடைய) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நேர்வழியளித்தான். எனவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

புஹாரி: 3571 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).

397– யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும், அவர் அதை தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னைத் தியானிப்பதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக! (அல்குர்ஆன்: 20: 14) என்ற வசனத்தை எடுத்து ஓதிக் காட்டினார்கள்.

புகாரி-597: அனஸ்(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகை நேரம் தவறி விட்டால்..

தொழுகையில் குனூத் ஓதுதல்..

392– நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலாமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ மற்றும் மூமின்களில் பலவீனர்களை நீ காப்பற்றுவாயாக! இறைவா! முள்ர் கூட்டத்தின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! யூஸுஃப் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (மதீனாவுக்கு) மேல்த் திசையில் வாழ்ந்த முள்ர் கூட்டத்தினர் அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.

புஹாரி-804: அபூஹுரைரா (ரலி)

393– ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஒதினார்கள்.

புஹாரி-1003: அனஸ் (ரலி)

394– ஆஸிம் (ரஹ்) அறிவித்தார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)” என்று கூறினார்கள். ‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)’ என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவர் பொய் சொன்னார்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி (ஸல்) அவர்களைக் குறித்து, ‘அவர்கள் பனூசுலைம் குலத்தாரின் சில கிளையினருக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” என்று அறிவித்தார்கள். அப்போது அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைக்கும் மக்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள்… என்று (அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்… அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். பனூசுலைம் குலத்தாருக்கு நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. எனவே, அவர்களின் மீது கோபமடைந்ததைப் போல் வேறெவர் மீதும் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்ததில்லை.

புகாரி:3170 ஆஸிம் (ரலி)

395-நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், ‘உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்றும் சொன்னார்கள்.

புஹாரி:6394 அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையில் குனூத் ஓதுதல்..

இவ்வுலக வேதனைகள் எதனால்?

“எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றிவிடுவதில்லை” (8:53)

“எந்த தீங்கும் உங்களை வந்தடைந்ததெல்லாம் உங்கள் கைகள் தேடிக்கொண்ட (தீ)வினையின் காரணமாகவே தான். ஆயினும் (அவற்றில்) அநேகமானவற்றை அவன் மன்னித்து விடுகிறான்” (42:30) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவ்வுலக வேதனைகள் எதனால்?

சிறிய ‘நிபாக்’

இது செயல்மூலம் ஏற்படுகின்றது. பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளது.
 

‘முனாபிக்குடைய அடையாளம் மூன்று. 1. பேசினால்
பொய்யுரைப்பான்; 2. வாக்களித்தால் மாறு செய்வான்; 3. நம்பினால் மோசடி செய்வான்’
ஆதாரம்: புகாரி, முஸ்லிம் Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on சிறிய ‘நிபாக்’

பெரியவர் இமாமாக இருத்தல்..

391– நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக் குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும், இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள். தொழுங்கள் தொழுகை நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் , உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள்.

புகாரி-628: மாலிக் பின் ஹூவைரிஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பெரியவர் இமாமாக இருத்தல்..

ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமான ஒரு நாள்!

70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய – வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்;  அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமான ஒரு நாள்!