“எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றிவிடுவதில்லை” (8:53)
“எந்த தீங்கும் உங்களை வந்தடைந்ததெல்லாம் உங்கள் கைகள் தேடிக்கொண்ட (தீ)வினையின் காரணமாகவே தான். ஆயினும் (அவற்றில்) அநேகமானவற்றை அவன் மன்னித்து விடுகிறான்” (42:30)
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீ)வினையின் காரணமாகக் கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றி விட்டன. (அவற்றிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களீன் (தீ)வினைகளில் சிலவற்றை, அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் (அல்லாஹ்) செய்கிறான்” (30:41)
“ஓர் ஊரை, அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும்) அமைதியுடனும் அச்சமற்றும் இருந்தது. அதற்கு வேண்டிய பொருள்கள் யாவும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் (அவ்வூர்வாசிகள்
அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட் கொடைளுகளுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறு செய்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து, அவர்கள் அதனைச்) சுகிக்கும்படிச் செய்தான்” (16:112)