சிறிய ‘நிபாக்’

இது செயல்மூலம் ஏற்படுகின்றது. பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளது.
 

‘முனாபிக்குடைய அடையாளம் மூன்று. 1. பேசினால்
பொய்யுரைப்பான்; 2. வாக்களித்தால் மாறு செய்வான்; 3. நம்பினால் மோசடி செய்வான்’
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
‘எவனிடம் நான்கு அம்சங்கள் உண்டோ, அவன் பூரணமான ஒரு முனாபிக் ஆவான். எவனிடம் அவற்றில் ஒருபகுதி உண்டோ, அவன் அதனை விட்டுவிடும்வரை அவனிடத்தில் நயவஞ்சகத்தனத்தின் ஒரு பகுதி இருந்துகொண்டே இருக்கின்றது. 1. பேசினால் பொய்யுரைப்பான். 2. வாக்களித்தால் மாறு செய்வான்.
3. உடன்படிக்கை செய்தால் முறித்து விடுவான். 4. வழக்காடினால் வம்பு செய்வான்’
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.