பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தால்….

415– நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன். அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. ‘ஜாபிரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?’ என்று கேட்டார்கள். ‘என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது அதனால் நான் பின்தங்கி விட்டேன்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு ‘ஏறுவீராக!’ என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘நீர் மணமுடித்து விட்டீரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!’ என்று கூறினார்கள். நான், ‘எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’ நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’ என்று கூறிவிட்டு பின்னர். ‘உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?’ என்றார்கள். நான் ‘சரி (விற்று விடுகிறேன்!)’ என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள்.

பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். ‘இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘உம்முடைய ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!’ என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!’ என்றார்கள். நான் (மனத்திற்குள்) ‘இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை’ என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!’ எனக் கூறினார்கள்.

புஹாரி:2097 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தால்….

மஸ்ஜிதில் நுழைந்ததும்….

414– உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.!

புகாரி-444: அபூகதாதா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மஸ்ஜிதில் நுழைந்ததும்….

பொய்யின் சிரசைச் சிதறடிக்கும் சத்தியம்!

21:11.மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்: அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.
 

21:12.ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்த போது,
அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

21:13.“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும்,உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது). Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பொய்யின் சிரசைச் சிதறடிக்கும் சத்தியம்!

இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான…..

இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாது

413– இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? என்று அம்மனிதரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.

புஹாரி-663: அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான…..

அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்: “மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” (அல்குர்ஆன்: 4:36). Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

தொழுகையை முடித்ததும் இடப்புறமாக எழுதல்.

412– வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தனது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.

புஹாரி-852: இப்னு மஸ்வூது (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையை முடித்ததும் இடப்புறமாக எழுதல்.

தொழுகைகளைச் சேர்த்து தொழுதல்….

409– நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பிரயாணம் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.

புஹாரி: இப்னு உமர் (ரலி).


410– நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணத்தை மேற்கொண்டால் லுஹரை அஸர் வரை தாமதப்படுத்தி ஜம்உச் செய்வார்கள். சூரியன் சாய்ந்த பிறகு புறப்பட்டால் லுஹர்த் தொழுதுவிட்டுப் புறப்படுவார்கள்.

புஹாரி :1111 அனஸ் (ரலி)


411– நான் நபி (ஸல்) அவர்களுடன் (லுஹர், அஸர் தொழுகைகளை) சேர்ந்தார்ப் போல் எட்டு ரக்அத்களும் (மக்ரிப், இஷாத் தொழுகைகளை) சேர்ந்தார்ப்போல் ஏழு ரக்அத்களும் தொழுதிருக்கிறேன்.

புஹாரி:1174 இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகைகளைச் சேர்த்து தொழுதல்….

பிரயாணத்தில் வாகனத்தில் பிரயாணித்தவாறு…

406– நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தின் போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர உபரியான இரவு தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுதுக்கொண்டு இருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்.

புஹாரி-1000: இப்னு உமர் (ரலி)

407– நபி (ஸல்) அவர்களை வாகனம் எத்திசையில் கொண்டு சென்றாலும் அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

புகாரி-1093 ஆமிர் பின் ரபிஆ (ரலி)

408– அனஸ் (ரலி) ஸிரியாவிலிருந்து வந்த போது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். ஐநூத்தம்ர் என்ற இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்களின் முகம் கிப்லாவுக்கு இடப்புறமாக இருக்கும் நிலையில் கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் தொழுததை நான் பார்த்தேன். கிப்லா அல்லாத திசையில் நீங்கள் தொழுகிறீர்களே என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்று விடையளித்தார்கள்.

புகாரி-1100. அனஸ் பின் ஸிரின் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பிரயாணத்தில் வாகனத்தில் பிரயாணித்தவாறு…

பல கிழக்குகள், பல மேற்குகளா?

கேள்வி எண்: 23. இரண்டு கிழக்குகள் – இரண்டு மேற்குகளின் இறைவன் மற்றும் பல கிழக்குகள் – பல மேற்குகளின் இறைவன் இவை பற்றி குர்ஆன் கூறும் வசனங்களை விஞ்ஞான விளக்கத்துடன் கூறுக. Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பல கிழக்குகள், பல மேற்குகளா?

மழை நேரத்தில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுதல்.

404– குளிரும் காற்றும் நிறைந்த ஒரு இரவில் தொழுகைக்காக இப்னு உமர் (ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள் எனவும் கூறினார்கள்.

புஹாரி-666: நாஃபிவு


405– பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்த போது என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி (ஸல்) அவ)ர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறி விட்டு நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான். எனினும் நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்கள்.

புஹாரி-901: அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மழை நேரத்தில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுதல்.