கேள்வி எண்: 23. இரண்டு கிழக்குகள் – இரண்டு மேற்குகளின் இறைவன் மற்றும் பல கிழக்குகள் – பல மேற்குகளின் இறைவன் இவை பற்றி குர்ஆன் கூறும் வசனங்களை விஞ்ஞான விளக்கத்துடன் கூறுக.
பதில்: “இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே” (அல்குர்ஆன்: 55:17)“எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 70:40)
“வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்” (அல்குர்ஆன்: 37:5)
சிறு விளக்கம்: நாம் சூரியன் உதிக்கும் திசையாகிய கிழக்கை ஒவ்வொரு நாளும் உதிக்கும்போது பார்ப்போமேயானால், சூரியன் ஒரே
இடத்திலிருந்து உதிக்காமல் பல்வேறு புள்ளிகளிலிருந்து உதயமாவதைப் பார்க்கலாம். அதேபோல் சூரியன் மறையும்போதும் ஒரே புள்ளியில் மறையாமல் மேற்கு திசையின் பல்வேறு புள்ளிகளில் மறைகின்றது. சில மார்க்க அறிஞர்கள் சூரியன் இவ்வாறு கீழ் திசைகளில் பல இடங்களில் தோன்றி மேல் திசைகளில் பல இடங்களில் மறைவதை இவ்வசனங்களுக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவனாக இருக்கின்றான். மறைவான விஷயங்களை அறிந்தவன் அல்லாஹ்வே.