21:11.மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்: அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.
21:12.ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்த போது,
அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
21:13.“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும்,உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
21:14.(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.
21:15.அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தளிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.
21:16.மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே
இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.
21:17.வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
21:18.அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தித்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து
விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி)வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
அல்குர்ஆன்: அல் அன்பியா – நபிமார்கள்.