ரமலானில் இரவுத் தொழுகை.!

435-‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

புஹாரி:36 அபூஹூரைரா (ரலி).


436-நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர். காலையில் இது பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் பள்ளியில் மக்கள் மேலும் அதிகமானார்கள். நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்ததும் மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானர்கள்.
நான்காம் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்தால் பள்ளி இடம் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஃபஜ்ருத் தொழுகையை முடித்த பின் மக்களை நோக்கி இறைவனைப் புகழ்ந்து ‘அம்மா பஃது’ எனக் கூறிவிட்டு ‘நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் இரவுத் தொழுகை கடமையாக்கப் பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன். (இதனால்தான் இரவு நான் வரவில்லை)” என்று கூறினார்கள்.

புஹாரி: 924 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ரமலானில் இரவுத் தொழுகை.!

இரவுத் தொழுகையின் சிறப்பு!

434-‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1145 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இரவுத் தொழுகையின் சிறப்பு!

வித்ருத் தொழுகை ஒரு ரக்அத்!

432-”இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

புஹாரி: 993 இப்னு உமர் (ரலி).


433-”இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’. என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

புஹாரி:998 இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வித்ருத் தொழுகை ஒரு ரக்அத்!

அழியாமல் இருக்கும் ஃபிர்அவ்னின் உடல்

கேள்வி எண்: 24. கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னுடைய உடலை அழியாமல் தாம் பாதுகாத்து வைத்திருப்பதாக இறைவன் கூறும் வசனம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அழியாமல் இருக்கும் ஃபிர்அவ்னின் உடல்

நபி(ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை.

426-ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்’ என்றும் ஆயிஷா (ரலி) கூறினார்.

புஹாரி :1147 ஆயிஷா (ரலி)


427-நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத் வித்ரு ஆகியவற்றைச் சேர்த்து இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.

புஹாரி: 1140 ஆயிஷா (ரலி)


428-நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இரவின் ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்துக் குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்படுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

புஹாரி :1146 அல் அஸ்வத் (ரலி)


429-நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொடர்ந்து செய்யும் அமல்’ என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி (ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘சேவல் கூவும்போது எழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

புஹாரி :1132 மஸ்ருக் (ரலி)


430-நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் (இருக்கும்போது) ஸஹர் நேரம் வரும் வரை உறங்காமல் இருந்ததில்லை.

புஹாரி :1133 ஆயிஷா (ரலி)


431-இரவின் எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.

புஹாரி: 996 ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நபி(ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை.

உபரியான தொழுகைகளை….

உபரியான தொழுகைகளை இருந்தோ நின்றோ தொழலாம்.

424-நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் உட்கார்ந்த நிலையில் ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமையடைந்தபோது உட்கார்ந்த நிலையில் ஒதினார்கள். முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டுப் பிறகு ருகூவு செய்தார்கள்.

புஹாரி : 1148 ஆயிஷா (ரலி)

425-நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

புஹாரி :1119 ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உபரியான தொழுகைகளை….

பர்லான தொழுகைக்கு முன்னரும், பின்னரும்…

கடமையான தொழுகைக்குப் பின்னர் முன்னர் தொழும் ஸுன்னத்துகள்.

423-நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி (ஸல்) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.

புஹாரி :1180 இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பர்லான தொழுகைக்கு முன்னரும், பின்னரும்…

ஈமானுடைய கிளைகளின் வகைகள்!

‘ஈமான் என்பது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்வானது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லுவதாகும். மிகத்தாழ்ந்தது பாதையில் (பிறருக்குத்) தீங்கு ஏற்படுத்தக் கூடியதை அகற்றி விடுவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் சொன்னதை இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பத்ஹுல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்.

‘ஈமானின் இந்தக் கிளைகளெல்லாம் உள்ளத்தின் செயல்கள், நாவின் செயல்கள், உடலின் செயல்கள் என்று பல பிரிவுகள் கொண்டதாகும்’. Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஈமானுடைய கிளைகளின் வகைகள்!

ஸுப்ஹின் முன் ஸூன்னத்..

419– அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

புகாரி-618: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


420– ஸுபுஹுத் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்.

புகாரி-619: ஆயிஷா (ரலி)


421-நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்.

புஹாரி: 1171 ஆயிஷா (ரலி)


422-நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

புஹாரி :1169 ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஸுப்ஹின் முன் ஸூன்னத்..

லுஹாத் தொழுகையின் சிறப்பு!

416– நபி (ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது பாரமாகி விடுமே என்ற அச்சமே இதற்கு காரணம். நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன்.

புஹாரி : 1128 ஆயிஷா (ரலி)


417– நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுததாக உம்முஹானி (ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவித்ததில்லை. ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது என்னுடைய இல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி (ரலி) குறிப்பிட்டார்கள்.

புஹாரி: 1103 இப்னு அபீ லைலா (ரலி)


418-ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத் தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.

புஹாரி: 1178 அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on லுஹாத் தொழுகையின் சிறப்பு!