உபரியான தொழுகைகளை இருந்தோ நின்றோ தொழலாம்.
424-நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் உட்கார்ந்த நிலையில் ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமையடைந்தபோது உட்கார்ந்த நிலையில் ஒதினார்கள். முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டுப் பிறகு ருகூவு செய்தார்கள்.
புஹாரி : 1148 ஆயிஷா (ரலி)
425-நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.
புஹாரி :1119 ஆயிஷா (ரலி)