கேள்வி எண்: 24. கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னுடைய உடலை அழியாமல் தாம் பாதுகாத்து வைத்திருப்பதாக இறைவன் கூறும் வசனம் எது?
பதில்: “எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது)” (அல்குர்ஆன்: 10:92)
குறிப்பு: சமீப காலத்தில் கண்டெடுக்கப்பட்டு கெய்ரோ மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய உடல்
ஃபிர்அவ்னுடைய உடல் என அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.