தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுதல்..

389– உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள் என்று தோழுர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித் தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-528: அபூஹுரைரா (ரலி)

390– பள்ளி வாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.

புஹாரி-662: அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுதல்..

ஜமாஅத்தாக தொழ வெகுதொலைவிலிருந்து வருவதன் சிறப்பு

388– யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து இருந்து இமாமுடன் தொழுகிறாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட நன்மை அதிகம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-651: அபூமூஸா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஜமாஅத்தாக தொழ வெகுதொலைவிலிருந்து வருவதன் சிறப்பு

ஈமானின் நிலைகள்-மலக்கு(வானவர்)களை நம்புவது

(நம்முடைய) தூதர் தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கிவைக்கப்பட்ட(வேதத்)தை விசுவாசிக்கின்றனர். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர் இவர்கள்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர். அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை படுத்திவிட மாட்டோம் (என்றும்) மேலும் (இரட்சகனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். இன்னும் (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்படிந்தோம். எங்கள் இரட்சகனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்பக்கமே (எங்களுடைய) மீட்சி உள்ளது என்றும் கூறுகின்றார்கள். 2-285. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஈமானின் நிலைகள்-மலக்கு(வானவர்)களை நம்புவது

ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..

387– ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்திகின்றான்: ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமருந்திருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவாகளுக்குத் தொல்லை அளிக்காத வரையில், இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி! என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-477:அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..

தொழுபவரின் ஆடை பிறர் மீது படுதல்..

386– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும் போது, சில வேளை அவர்களுடைய ஆடை என் மீதுபடும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்.

புகாரி-379:மைமூனா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுபவரின் ஆடை பிறர் மீது படுதல்..

தகுந்த காரணத்துடன் ஜமாஅத்துக்கு தொழ வரவில்லையெனில்..

384– நான் நபி(ஸல்)அவர்கள் இடத்தில் அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமுகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்து விட்டது. மழைக்காலங்களில் எனக்கும் என் சமுகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும் அவ்விடத்தை (எனது) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மறுநாள் சூரியன் உயரும்போது அபூபக்கர் (ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். நான் அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே உமது வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டும் என விரும்புகிறீர் என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம் இரண்டு ரக்அத்கள் அவர்கள் தொழுவித்துப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். மாமிசமும் மாவும் கலந்து நபி (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த உணவை உண்டு செல்லுமாறு அவர்களை நாங்கள் வற்புறுத்தினோம் (நபி (ஸல்) வந்ததைக் கேள்வியுற்ற) அப்பகுதியைச் சேர்ந்த பல ஆடவர்கள் எனது வீட்டில் வந்து குழுமினார்கள். அவர்களில் சிலர் மாலிக் பின் துகைஷின் எங்கே? என்று கேட்க, அவர்களில் ஒருவர் அவர் ஒரு முனாபிக், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்காதவர் (அதனால் தான் நபியைக் காணவரவில்லை ) என்று கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்! அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறி இருப்பதை நீர் அறியமாட்டீரா? என்று கேட்டனர். அல்லாஹ்வும் அவனது தூதருமே இதை நன்கறிந்தவர்கள். அவர் நயவஞ்சகர்களுக்கு நல்லது செய்வதாக நாங்கள் அறிகிறோம். என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் பொருத்தம் நாடி யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறாரோ அவர் மீது நரகத்தை இறைவன் ஹராமாக்கி விட்டான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-425: இத்பான் பின் மாலிக் (ரலி)


385– நான் ஜந்து வயது சிறுவனாக இருக்கும் போது நபி அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போது) நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு பின்னர் இத்ஃபான் அறிவித்த ஹதீஸைக் கூறினார்.

புகாரி-77: மஹ்மூது பின் ரபீஊ (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தகுந்த காரணத்துடன் ஜமாஅத்துக்கு தொழ வரவில்லையெனில்..

வல்லமையும், அல்லாஹ்வின் அதிகாரமும்!


“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது” (அல்குர்ஆன்: 55:33)



Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வல்லமையும், அல்லாஹ்வின் அதிகாரமும்!

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். அதுதான் ஆடையிலோ, உடம்பிலோ பட்டுவிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது. மட்டுமல்ல தொழுகை கூடாமல் போவதற்குக் காரணமும் அதுதான். மேலும் கப்ரு வேதனைக்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் அவசியம்..

380– ஒருவர் தனியாக தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின் போது பகல்நேர மலக்குகளும் இரவுநேர மலக்குகளும் ஒன்று சேருகிறார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்து விட்டு, நீங்கள் விரும்பினால் நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன் சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது (17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.

புகாரி-648: அபூஹுரைரா (ரலி)

381– தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-645: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

382– எனது உயிர் எவனது கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டையிட்டு அதன்படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப் பட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர் தொழுகையை நடத்திய பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கின்ற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் கால்களின் இரண்டு அழகிய குளம்பு கொடுக்கப் படுகிறது என்று அவர்கள் யாராவது அறிவார்களானால் நிச்சயமாக இஷா தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள்.

புகாரி-644: அபூஹுரைரா (ரலி)

383– அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி, அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-657:அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் அவசியம்..

ஸுப்ஹூ தொழுகையின் நேரம்..

377– மூமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.

புகாரி-578: ஆயிஷா(ரலி)

378– நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்து விட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்குத் தாமதமானால் தாமதப்படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.

புகாரி-560:ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

379– நானும் எனது தந்தையும் அபூ பர்ஸா (ரலி)யிடம் சென்றோம். கடமையான தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள். என்று கேட்டோம். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுது விட்டு) மதீனாவின் கடைக்கோடியில் உள்ள தமது இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளிக் குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும் என்றார்கள். மஃரிப் பற்றி அபூ பர்ஸா (ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக்கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் விரும்புபவர்களாக இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் , இஷாவுக்குபின் பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும் போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும் என அபூ பர்ஸா (ரலி) கூறினார்கள்.

புஹாரி-771: ஸய்யார் பின் ஸலாமா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on ஸுப்ஹூ தொழுகையின் நேரம்..