தகுந்த காரணத்துடன் ஜமாஅத்துக்கு தொழ வரவில்லையெனில்..

384– நான் நபி(ஸல்)அவர்கள் இடத்தில் அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமுகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்து விட்டது. மழைக்காலங்களில் எனக்கும் என் சமுகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும் அவ்விடத்தை (எனது) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மறுநாள் சூரியன் உயரும்போது அபூபக்கர் (ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். நான் அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே உமது வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டும் என விரும்புகிறீர் என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம் இரண்டு ரக்அத்கள் அவர்கள் தொழுவித்துப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். மாமிசமும் மாவும் கலந்து நபி (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த உணவை உண்டு செல்லுமாறு அவர்களை நாங்கள் வற்புறுத்தினோம் (நபி (ஸல்) வந்ததைக் கேள்வியுற்ற) அப்பகுதியைச் சேர்ந்த பல ஆடவர்கள் எனது வீட்டில் வந்து குழுமினார்கள். அவர்களில் சிலர் மாலிக் பின் துகைஷின் எங்கே? என்று கேட்க, அவர்களில் ஒருவர் அவர் ஒரு முனாபிக், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்காதவர் (அதனால் தான் நபியைக் காணவரவில்லை ) என்று கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்! அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறி இருப்பதை நீர் அறியமாட்டீரா? என்று கேட்டனர். அல்லாஹ்வும் அவனது தூதருமே இதை நன்கறிந்தவர்கள். அவர் நயவஞ்சகர்களுக்கு நல்லது செய்வதாக நாங்கள் அறிகிறோம். என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் பொருத்தம் நாடி யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறாரோ அவர் மீது நரகத்தை இறைவன் ஹராமாக்கி விட்டான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-425: இத்பான் பின் மாலிக் (ரலி)


385– நான் ஜந்து வயது சிறுவனாக இருக்கும் போது நபி அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போது) நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு பின்னர் இத்ஃபான் அறிவித்த ஹதீஸைக் கூறினார்.

புகாரி-77: மஹ்மூது பின் ரபீஊ (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.