பறவைகளும், பிராணிகளும் மனிதர்களைப் போன்ற சமுதாயமா?


கேள்வி எண்: 22. “பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை” என்று தொடங்கும் வசனம் எது? இவ்வசனத்தில் பொதிந்துள்ள அறிவியல் அதிசயத்தை விளக்குக:- Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பறவைகளும், பிராணிகளும் மனிதர்களைப் போன்ற சமுதாயமா?

இஷா தொழுகையின் நேரம்..

372– இஸ்லாம் (நன்கு) பரவுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். பெண்களும், சிறுவர்களும் உறங்கி விட்டனர் என உமர் (ரலி) தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தொழுவிக்க) வரவில்லை. அதன் பின் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி இப்பூமியில் உள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை என்றார்கள்.

புகாரி-566: ஆயிஷா (ரலி)

373– நபி (ஸல்) அவர்கள் தம் அலுவல் காரணமாக ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். நாங்கள் பள்ளியிலேயே உறங்கியப் பின்னர் விழித்து பின்னர் உறங்கியப் பின்னர் விழித்தோம். பிறகு எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து உங்களைத் தவிர பூமியில் உள்ளவர்களில் வேறு எவரும் இத்தொழுகைக்காக காத்திருக்கவில்லை என்றார்கள்.

புகாரி-570: இப்னு உமர் (ரலி)

374– ஹுமைத் இத்தவீல் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுகை நடத்தினார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கி விட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்றார்கள்.

புஹாரி:5869 ஹூமைத் (ரலி)

375- நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் புத்ஹான் எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி (ஸல்) அவர்களை சந்தித்தோம். அவர்கள் தமது காரியத்தில் ஈடுபட்டு இருந்ததால் நள்ளிரவு நேரம் வரை இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுவித்தனர். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி அப்படியே இருங்கள்! நற்செய்திப் பெற்றுக் கொள்ளுங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.

புகாரி-567: அபூ மூஸா (ரலி)

376- நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவை தாமதப் படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும், மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) எழுந்து தொழுகை எனக் கூறினார்கள். உடன் நபி (ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது. என் சமுதாயத்திற்கு சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்தில் தொழுமாறு கட்டளையிட்டு இருப்பேன் என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தம் கைகளை தலையில் வைத்தார்கள் என்று நான் அதா அவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் தம் விரல்களை சற்று விரித்து, விரல்களின் முனைகளைத் தலை உச்சியில் வைத்து அவர்களின் பெரு விரல், காது ஓரங்கள், நெற்றிப் பொட்டு, தாடியின் ஓரங்கள் ஆகியவற்றில் படுமாறு அழுத்தித் தடவி, இப்னு அப்பாஸ் (ரலி) செய்து காட்டியது போல் செய்து காட்டினார்கள். என்று இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.

புகாரி-571: இப்னு அப்பாஸ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on இஷா தொழுகையின் நேரம்..

மக்ரிப் தொழுகையின் நேரம்..

370– சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுபவர்களாக இருந்தோம்.

புகாரி-561: ஸலமா (ரலி)

371– நபி (ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுது விட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்)

புகாரி-559: ராபிவு பின் கதீஜ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மக்ரிப் தொழுகையின் நேரம்..

பூமியைப் படைத்த அல்லாஹ்வின் கூற்று!


அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம். (அல்குர்ஆன்: 31:10)


Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பூமியைப் படைத்த அல்லாஹ்வின் கூற்று!

ஸுப்ஹூ, அஸர் தொழுகையின் மகத்துவம்.

367– இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்ற அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களை விட்டு விட்டு வருகிறோம் என்று அவர்கள் விடையளிப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-555: அபூஹுரைரா (ரலி)

368– நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்கள் இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்! என்று கூறிவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உமது இறைவனின் புகழைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 50:39) என்ற இறை வசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.

புகாரி-554: ஜரீர் (ரலி)


369– பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது ஃபஜ்ரு, அஸர் தொழுகைகளை) யார் தொழுகிறாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-574: அபூமூஸா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஸுப்ஹூ, அஸர் தொழுகையின் மகத்துவம்.

பெரிய ‘நிபாக்’ (நயவஞ்சகத்தனம்)

பெரிய நிபாக் (நயவஞ்சகத்தனம்) என்றால் நாவினால் இஸ்லாமிய நம்பிக்கையை வெளியாக்குவதும், உள்ளத்தினாலும் உறுப்புகளினாலும் ‘குஃப்ரை’ நம்புவதுமாகும். இது பலவகைப்படும்.

1. நபி (ஸல்) அவர்களைப் பொய்யாக்குதல் அல்லது அவர்கள் கொண்டுவந்தவற்றில் சிலவற்றைப் பொய்யாக்குதல்.

2. நபி (ஸல்) அவர்கள் மீது கோபம் கொள்ளுதல் அல்லது அவர்கள் கொண்டுவந்ததில் சிலவற்றின் மீது வெறுப்படைதல்.

3. இஸ்லாம் வீழ்ச்சியடைவதால் மகிழ்ச்சியடைதல் அல்லது இஸ்லாத்திற்கு ஏற்படும் வெற்றியை வெறுத்தல். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on பெரிய ‘நிபாக்’ (நயவஞ்சகத்தனம்)

நடுத்தொழுகை என்பது எது?

364- யாருக்கு அஸர் தொழகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப்பட்டவனைப் போன்று இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-552: இப்னு உமர் (ரலி)

365- அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை (யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி: 2931 அலி (ரலி)

366- அகழ்போரின் போது சூரியன் மறைந்தபின் உமர் (ரலி) குரைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் அஸர் தொழவில்லை என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூ செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூ செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். பின்னர் மஃரிபு தொழுதார்கள்.

புகாரி-596: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on நடுத்தொழுகை என்பது எது?

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன்.

2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லி காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குறிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடைய மாட்டார்கள். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்

உலக மக்கள் யாவருக்கும் நேர்வழி காட்டும் இடம்!

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: 3:96)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலக மக்கள் யாவருக்கும் நேர்வழி காட்டும் இடம்!

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

‘உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம். Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.