364- யாருக்கு அஸர் தொழகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப்பட்டவனைப் போன்று இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-552: இப்னு உமர் (ரலி)
365- அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை (யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.
புஹாரி: 2931 அலி (ரலி)
366- அகழ்போரின் போது சூரியன் மறைந்தபின் உமர் (ரலி) குரைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் அஸர் தொழவில்லை என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூ செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூ செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். பின்னர் மஃரிபு தொழுதார்கள்.
புகாரி-596: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)