பெரிய ‘நிபாக்’ (நயவஞ்சகத்தனம்)

பெரிய நிபாக் (நயவஞ்சகத்தனம்) என்றால் நாவினால் இஸ்லாமிய நம்பிக்கையை வெளியாக்குவதும், உள்ளத்தினாலும் உறுப்புகளினாலும் ‘குஃப்ரை’ நம்புவதுமாகும். இது பலவகைப்படும்.

1. நபி (ஸல்) அவர்களைப் பொய்யாக்குதல் அல்லது அவர்கள் கொண்டுவந்தவற்றில் சிலவற்றைப் பொய்யாக்குதல்.

2. நபி (ஸல்) அவர்கள் மீது கோபம் கொள்ளுதல் அல்லது அவர்கள் கொண்டுவந்ததில் சிலவற்றின் மீது வெறுப்படைதல்.

3. இஸ்லாம் வீழ்ச்சியடைவதால் மகிழ்ச்சியடைதல் அல்லது இஸ்லாத்திற்கு ஏற்படும் வெற்றியை வெறுத்தல்.
நிபாக் செய்கின்றவனுக்குரிய தண்டனை குஃப்ர் செய்கின்றவனுக்குரிய தண்டனையை விடக் கொடியதாகும். அல்லாஹ் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறான்.

“நிச்சயமாக ‘முனாபிக்’கள் நரகத்தின் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள்” (அல்குர்ஆன்: 4:145)

இதனாலதான் அல்லாஹ், ஸூரதுல் பகறாவின் ஆரம்பத்தில் காஃபிர்களை இரண்டு வசனங்களைக் கொண்டும்; ‘முனாபிக்’களைப் பதின்மூன்று வசனங்களைக் கொண்டும் (படுமோசமாக)வர்ணித்துள்ளான்.

ஸூஃபிகளாக இருக்கும் முஸ்லிம்களைக் காண்கிறோம். அவர்கள் தொழுகிறார்கள்; நோன்பு நோற்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் அபாயம் என்னவெனில், முஸ்லிம்களுடைய அடிப்படைக் கொள்கைகளையெல்லாம் கெடுத்து விடுகிறார்கள். பெரிய ஷிர்க்கான அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆக் கேட்பதை ஆகுமாக்குகிறார்கள். ‘அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான்’ என்று நம்புகிறார்கள். ‘அல்லாஹ் அர்ஷில் அமைந்துள்ளான்’ என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதை மறுக்கிறார்கள்.
 

 இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.