ஈமானின் நிலைகள்-அல்லாஹ்வை நம்புதல். பகுதி (2)

பெயர் மற்றும் தன்மைகளில் ஏகத்துவம்
(அஸ்மாவு வஸிஃபாத்)

பெயரில் ஏகத்துவம்:

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.  (7:180)

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கைக் கொண்டு) மனனமிட்ட யாரும் சுவர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. மேலும்
அல்லாஹ் ஒற்றையானவன் , ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
அபூஹூரைரா (ரலி) புகாரி.

மேற்காணும் திருமறை வசனமும், நபிமொழியும் அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுகின்றன. அவற்றைக் கொண்டே அவனை அழையுங்கள் என்றும் கூறுகின்றன. அல்லாஹ்வுடைய
பெயரைக் கொண்டு மனிதர்களை அழைக்கக் கூடாது. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஈமானின் நிலைகள்-அல்லாஹ்வை நம்புதல். பகுதி (2)

அஸர் தொழுகையின் நேரங்கள்..

361– சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொணடிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும் போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுபாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டத்தட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.

புகாரி-550: அனஸ் பின் மாலிக் (ரலி)


362– நாங்கள் உமர்பின் அப்துல் அஜீஸுடன் லுஹர் தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் சென்ற போது அவர்கள் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம். என் தந்தையின் உடன் பிறந்தவரே! இப்போது நீங்கள் தொழுதது என்ன தொழுகை? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அஸர் தொழுகை! நபி (ஸல்) அவர்களுடன் இவ்வாறே நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம் என்றார்கள்.

புகாரி-549 அபூ உமாமா (ரலி)


363– நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.

புஹாரி: 2485. ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அஸர் தொழுகையின் நேரங்கள்..

ஈமானின் நிலைகள் – அல்லாஹ்வை நம்புதல். பகுதி (1)

நெல்லை இப்னு கலாம் ரசூல்

நபி (ஸல்) அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

இறைவன் அகில உலகுக்கும் ஒருவன் தான், இறைவன் பெற்று, பெறப்பட்டு பலவீனமுடையவனாக, சந்ததி உடையவனாக இருக்க முடியாது. இறைவனுக்குத் தேவை என்பதே இல்லாமல் தன்னிறைவு உடையோனாகவும், இறைவனுக்கு நிகராக யாருமே, எதுவுமே இருக்க முடியாது போன்ற கருத்துக்களை உள்ளடக்கி ஏகத்துவத்தை முழுமையாக பறைசாற்றும் விதமாக இஹ்லாஸ் என்ற அத்தியாயம் அமைந்துள்ளது. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஈமானின் நிலைகள் – அல்லாஹ்வை நம்புதல். பகுதி (1)

அதிக வெப்பமில்லாத நாட்களில் ளுஹரை துரிதமாக்குதல்..

360– கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்கும் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலாவிட்டால் தமது ஆடையை விரித்து அதில் ஸஜ்தாச் செய்வார்.

புகாரி- 1208: அனஸ் பின் மாலிக் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அதிக வெப்பமில்லாத நாட்களில் ளுஹரை துரிதமாக்குதல்..

ளுஹர் தொழுகையின் நேரம்..

357– வெப்பம் கடுமையாகும் போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-534: அபூஹுரைரா (ரலி)
358– நபி (ஸல்) அவர்களின் முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு, என்று கூறிவிட்டு, கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும் போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள் என்றார்கள். மணல் திட்டுகளில் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத் தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.
புகாரி-535: அபூதர் (ரலி)

359– இறைவா! எனது ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-537: அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ளுஹர் தொழுகையின் நேரம்..

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

தொழுகையின் நேரத்தில் அதன் ஒரு ரக்அத்தைப் பெற்றவர்

353– தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-580: அபூஹுரைரா (ரலி)

354– ‘ஜிப்ரீல் (அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்’ என்று தம் விரல்களால் ஐந்து தொழுகைகளை எண்ணியபடி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்” என்று தம் தந்தை அபூ மஸ்வூத் (ரலி) சொல்லக் கேட்டதாக பஷீர் இப்னு அபீ மஸ்வூத் (ரஹ்) சொல்ல செவியுற்றேன்” என்றார்கள்.

புஹாரி: 3221 அபீமஸ்வூத் (ரலி)


355– உமர் பின் அப்துல் அஸீஸ் ஒருநாள் தொழுகையைத் தாமதப் படுத்தி விட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி (ரலி) அவரிடம் வந்து, முகீராவே! இது என்ன? ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ரு) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மஃரிப்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் (இஷா) தொழு, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டள்ளது எனவும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீ அறியவில்லையா? என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா பின் ஸுபைர் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா? என்று உமர் இப்னு அப்துல் அஸீஸ் கேட்டார்கள்.

புகாரி-521: ஸுஹ்ரி (ரஹ்)


356– சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள்.

புகாரி-522: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையின் நேரத்தில் அதன் ஒரு ரக்அத்தைப் பெற்றவர்

தொழுகைக்கு முன் மறந்து விட்டது நினைவிற்கு வந்தால்…

352– (ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்ததால் எங்களைப் பார்த்து உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள், என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.

புகாரி-275:அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகைக்கு முன் மறந்து விட்டது நினைவிற்கு வந்தால்…

உண்மையான படைப்பாளன்!

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும் (அ(ல்லாஹ்)வனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்” (அல்குர்ஆன்: 16:8)

Continue reading

Posted in படத்தொகுப்புகள் | Comments Off on உண்மையான படைப்பாளன்!

உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா?

(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல்வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனதைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களை விட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவு கூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ — எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ — எவன் தன் செயல் முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டிருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்படியாதீர்! தெளிவாக கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கைக் கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடுகெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் மிகவும் தீயதாகும். இறைநம்பிக்கைக் கொண்டு நற்செயகள் புரிகின்றவர்களோ — திண்ணமாக, நாம் நற்செயல் புரிவோரின் கூலியை வீணாக்குவதில்லை! அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்க காப்புகள் அணிவிக்கப்படும்.  மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சைநிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்து இருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும். (அல்குர்ஆன்: 18:27-31)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா?