தொழுகையின் நேரத்தில் அதன் ஒரு ரக்அத்தைப் பெற்றவர்

353– தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-580: அபூஹுரைரா (ரலி)

354– ‘ஜிப்ரீல் (அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்’ என்று தம் விரல்களால் ஐந்து தொழுகைகளை எண்ணியபடி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்” என்று தம் தந்தை அபூ மஸ்வூத் (ரலி) சொல்லக் கேட்டதாக பஷீர் இப்னு அபீ மஸ்வூத் (ரஹ்) சொல்ல செவியுற்றேன்” என்றார்கள்.

புஹாரி: 3221 அபீமஸ்வூத் (ரலி)


355– உமர் பின் அப்துல் அஸீஸ் ஒருநாள் தொழுகையைத் தாமதப் படுத்தி விட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி (ரலி) அவரிடம் வந்து, முகீராவே! இது என்ன? ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ரு) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மஃரிப்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் (இஷா) தொழு, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டள்ளது எனவும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீ அறியவில்லையா? என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா பின் ஸுபைர் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா? என்று உமர் இப்னு அப்துல் அஸீஸ் கேட்டார்கள்.

புகாரி-521: ஸுஹ்ரி (ரஹ்)


356– சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள்.

புகாரி-522: ஆயிஷா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.