ளுஹர் தொழுகையின் நேரம்..

357– வெப்பம் கடுமையாகும் போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-534: அபூஹுரைரா (ரலி)
358– நபி (ஸல்) அவர்களின் முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு, என்று கூறிவிட்டு, கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும் போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள் என்றார்கள். மணல் திட்டுகளில் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத் தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.
புகாரி-535: அபூதர் (ரலி)

359– இறைவா! எனது ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-537: அபூஹுரைரா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.