அஸர் தொழுகையின் நேரங்கள்..

361– சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொணடிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும் போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுபாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டத்தட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.

புகாரி-550: அனஸ் பின் மாலிக் (ரலி)


362– நாங்கள் உமர்பின் அப்துல் அஜீஸுடன் லுஹர் தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் சென்ற போது அவர்கள் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம். என் தந்தையின் உடன் பிறந்தவரே! இப்போது நீங்கள் தொழுதது என்ன தொழுகை? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அஸர் தொழுகை! நபி (ஸல்) அவர்களுடன் இவ்வாறே நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம் என்றார்கள்.

புகாரி-549 அபூ உமாமா (ரலி)


363– நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.

புஹாரி: 2485. ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.