ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமான ஒரு நாள்!

70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய – வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்;  அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.

70:8. வானம் – உருக்கப் பட்ட செம்பைப் போல் ஆகி விடும் நாளில் –

70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்) –

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்க மாட்டான்.

70:11. அவர்கள் நேர்க்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்(தீர்ப்பு) நாளில் வேதனைக்கு ஈடாக குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் (பிரியப்படுவான்).

70:15. அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமான)து கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகும்.

70:16. அது (சிரசுத்) தோல்களைக் (எரித்து) கழற்றி விடும்.

70:17. (நேர்வழியை) புறக்கணித்துப் புறங்காட்டி சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

70:18. அன்றியும் பொருளைச் சேகரித்து பிறகு (அதைத் தக்கப்படி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே )அவனையும் அது அழைக்கும்.

70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

70:20. அவனை ஒரு கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான்;

70:21. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.

          அல் குர்ஆன்: அல் மஆரிஜ் (உயர் வழிகள்)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.

0 Responses to ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமான ஒரு நாள்!

  1. Abdul Ghani says:

    Assalamu Alaikkum wa Rahmathullah wa Barakathuhu

    Alhamthulillah… This website is very useful. Articles are more valuable.

    May Allah(SWT) give Heaven to you.

    Can you give option to take print out?

    Jazakallhu Kairan

    wasalam,
    Abdukl

  2. Jafar Ali says:

    வ அலைக்கும் ஸலாம்!

    //Can you give option to take print out?//

    இன்ஷா அல்லாஹ்!!