உண்மையை மறுக்காதீர்கள் (இறுதிப் பகுதி)

அல்லாஹ் மனிதர்களுக்குத் தனது ரஸூல்மார்களை அனுப்பினான்; அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி, அவனை ஒருமைப் படுத்துவதின் பால் மக்களை அழைக்குமாறு அவர்களுக்கு உத்தரவுமிட்டான். எனினும் அதிகமான சமுதாயங்கள், தங்கள்பால் அனுப்பப்பட்ட தூதர்களைப் பொய்யாக்கினார்கள்; அம்மக்கள் தாம் அழைக்கப்பட்ட தௌஹீதுக்கும் மாறு செய்தார்கள். அவர்களுடைய முடிவு அழிவாகவே இருந்தது.

‘எவனுடைய உள்ளத்தில் ஒரு கடுகளவேனும் பெருமை உண்டோ, அவன் சுவர்க்கம் பிரவேசிக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள். ‘பெருமை என்பது உண்மைக்கு மாறானதும், மனிதர்களுக்கு இழிவானதுமாகும்’ ஆதாரம்: முஸ்லிம்

இதன்படி நிராகரிப்பவர்களுக்கு ஒப்பாகக் கூடியதும், சுவர்க்கம் பிரவேசிக்கத் தடையாயிருப்பதுமான பெருமையை விட்டொழிப்பதும், உண்மையையும், நல்லுபதேசத்தையும் மறுக்காமலிருப்பதும் ஒவ்வொரு மூமினின் மீதும் கடமையாகும். அறிவு என்பது ஒரு மூமினுடைய தவறிப்போன பொருள்; அதனை எவ்விடத்தில் கண்டு கொள்கிறானோ, அப்பொழுது அதனைப் பெற்றுக் கொள்வான்.

Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on உண்மையை மறுக்காதீர்கள் (இறுதிப் பகுதி)

இஹ்ராமணிந்தவர் தலை உடலைக் கழுவுதல் பற்றி..

752. ‘அப்வா என்ற இடத்தில் மிஸ்வர் மின் மக்ரமா (ரலி) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபட்டனர். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையைக் கழுவலாம்!” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். ‘இஹ்ராம் அணிந்தவர் தலையக் கழுவக் கூடாது!” என்ற மிஸ்வர் (ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), என்னை அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். ‘நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். ‘யார் அது?’ என்று கேட்டார்கள். ‘நானே அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்! ‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்?’ என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) என்னை அனுப்பினார்கள்!” என்று கூறினேன். அபூ அய்யூப் (ரலி), தம் கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை தெரியுமளவிற்குத் திரையை (அசைத்து) இறக்கினார்கள். பிறகு தண்ணீர் ஊற்றுகிற மனிதரிடம் ‘தண்ணீர் ஊற்றுவீராக!’ என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்றினார். அபூ அய்யூப் (ரலி), தம் தலையை இரண்டு கைகளாலும் அசைத்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டு சென்றார்கள்; ‘இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்யப் பார்த்திருக்கிறேன்!” என்றும் கூறினார்கள்.

புஹாரி:1840 அப்துல்லாஹ் பின் ஹூனைன் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராமணிந்தவர் தலை உடலைக் கழுவுதல் பற்றி..

இஹ்ராமிலிருப்பவர் இரத்தம் குத்தி எடுத்தல்.

751. ”நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், ‘லஹ்யு ஜமல்’ என்னுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!”

புஹாரி :1836 இப்னு புஹைனா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராமிலிருப்பவர் இரத்தம் குத்தி எடுத்தல்.

இஹ்ராமிலிருப்பவர் சிரமமிருப்பின் தலை முடியை மழித்தல்.

749. ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். அதற்கு ‘உம் தலையை மழித்துக் கொள்ளும்!” என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!” என்று கூறினார்கள்.

புஹாரி: 1815 கஃபு பின் உஜ்ரா (ரலி).

750. நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4517 அப்துல்லாஹ் பின் மஃகல் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராமிலிருப்பவர் சிரமமிருப்பின் தலை முடியை மழித்தல்.

இறைவா! உலக வாழ்வில் பார்வையுடையவனாக இருந்த என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?

20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம (தீர்ப்பு) நாளில் குருடனாகவே எழுப்புவோம்”

20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.

Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைவா! உலக வாழ்வில் பார்வையுடையவனாக இருந்த என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?

இஹ்ராம் அணிந்த நிலையில் கொல்ல அனுமதிக்கப்பட்டவை.

746. ”ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1829 ஆயிஷா (ரலி).

747. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

புஹாரி:1829 ஹப்ஸா (ரலி)

748. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

புஹாரி: 1829 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராம் அணிந்த நிலையில் கொல்ல அனுமதிக்கப்பட்டவை.

மரணித்து விட்டவர்கள் பேய் பிசாசுகளாக வந்து மனிதனை ஆட்டுவிக்கிறார்களா?

கேள்வி எண்: 38. “….(மரணித்து விட்ட) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ‘பர்ஸக்’ என்னும் திரை இருக்கிறது’ (அல்குர்ஆன்: 23:100) என்ற இறைவசனம் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on மரணித்து விட்டவர்கள் பேய் பிசாசுகளாக வந்து மனிதனை ஆட்டுவிக்கிறார்களா?

இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடலாமா?

742. நபி (ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். ‘நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!” என்று கூறினார்கள்.

புஹாரி:1825 இப்னு அப்பாஸ் (ரலி).

743. நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் ‘நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!” என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் ‘உண்ணுங்கள்!” என்றனர். மற்றும் சிலர் ‘உண்ணாதீர்கள்!” என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!’ என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 1823 அபூகதாதா(ரலி).

744. நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.”அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூமஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, ‘நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டு வந்தீர்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில், ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களை விட்டு வந்தேன்!” என்றார். (நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து), ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ‘உண்ணுங்கள்!” என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.

புஹாரி :1821 அபூகதாதா (ரலி).

745. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன
் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள். ‘கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?’ என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?’ என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் ‘இல்லை!” என்றனர். ‘அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1824 அப்துல்லாஹ் பின் அபூகதாதா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடலாமா?

இஹ்ராம் அணியும் முன்பு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்தல்.

739. இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.

புஹாரி: 1539 ஆயிஷா (ரலி).

740. ‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது” என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புஹாரி :271 ஆயிஷா (ரலி).

741. ‘(‘நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்தி, காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறியதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கூறியபோது) ‘நான் நபி (ஸல்) அவர்களுக்கு நறுமணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள்’ என்று ஆயிஷா (ரலி) கூறினார்” என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

புஹாரி :270 முஹம்மது பின் முன்தஷிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராம் அணியும் முன்பு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்தல்.

ஹஜ் உம்ராவுக்கு இஹ்ராம் அணிதல்.

738. ‘உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்’ என்றார். ‘இப்னு ஜுரைஜே! அவை யாவை?’ என இப்னு உமர் (ரலி) கேட்டதற்கு, ‘(தவாஃபின்போது) கஃபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானி ஆகிய) இரண்டு மூலைகளைத் தவிர மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை என்பதை பார்த்தேன். முடியில்லாத தோல் செருப்பை நீங்கள் அணிவதைப் பார்க்கிறேன். நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதைப் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருந்தபோது (துல்ஹஜ் மாத) பிறையைக் கண்டதுமே மக்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நீங்கள் (துல்ஹஜ் மாதம்) எட்டாவது நாள்தான் இஹ்ராம் அணிந்ததைப் பார்த்தேன்’ என்று இப்னு ஜுரைஜ் கூறியதற்கு, ‘கஃபதுல்லாஹ்வின் மூலைகளைப் பொருத்தவரை நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டை நோக்கியுள்ள இரண்டு மூலைகளைத் தவிர எதையும் தொட நான் காணவில்லை. முடியில்லாத செருப்பைப் பொருத்தவரையில் நபி (ஸல்) அணிந்து முடியில்லாத செருப்பை அணிந்து உளூச் செய்வதை பார்த்தேன். எனவே அதை அணிவதை நான் பிரியப்படுகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொருத்தவரை நபி (ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை விரும்புகிறேன். இஹ்ராம் அணிவதைப் பொருத்தவரை நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாகனம் அவர்களை ஏற்றிக் கொண்டு (எட்டாம் நாள்) புறப்படும் வரை அவர்கள் இஹ்ராம் அணிவதை நான் பார்த்ததில்லை’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறினார்”.

புஹாரி :166 உபைத் இப்னு ஜூரைஜ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஹஜ் உம்ராவுக்கு இஹ்ராம் அணிதல்.