குழப்பமான காலத்தில் ஹஜ்ஜூக்கு இஹ்ராம் அணிந்தவர் பற்றி..

771. குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர் (ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, ‘கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!” என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்தார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்து, ‘ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானது தான்!” என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, ‘இவ்விரண்டும் ஒரே மாதிரியானவையே! எனவே, உம்ராவுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்!” என்றார்கள். பிறகு, இரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே வலம் வந்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.

புஹாரி 1813 இப்னு உமர் (ரலி).

772. இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டில், இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய நாடினார்கள். அப்போது அவர்களிடம் ‘மக்களிடையே போர் மூண்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்’ எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது! எனவே, அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறினார்கள். பின்னர் புறப்பட்டு பைதா என்னுமிடத்திற்கு வெளியே வந்ததும் ‘ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் என்னுடைய உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்’ எனக் கூறினார்கள். மேலும் குதைத் என்னுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டு சென்றார். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. யவ்முன் நஹ்ர் (துல்ஹஜ் பத்தாம் நாள்) வரை பலியிடவில்லை; இஹ்ராம் அணிந்திருக்கும்போது விலக்கப்பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை; தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (பலிப் பிராணியை) பலியிட்டுவிட்டுத் தலை முடியை மழித்தார்கள். முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், ‘இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் கூறினார்கள்.

புஹாரி : 1640 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குழப்பமான காலத்தில் ஹஜ்ஜூக்கு இஹ்ராம் அணிந்தவர் பற்றி..

கிரான் முறை ஹஜ் செய்பவர் பற்றி….

770. ”இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?’ என நான் நபி (ஸல்) அவர்களைக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டு விட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும் வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாது” என்றார்கள்.

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கிரான் முறை ஹஜ் செய்பவர் பற்றி….

தமத்துவ் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுத்தல் பற்றி..

768. இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (எனவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை); நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், ‘உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்துள்ளார்களோ அவர் தம் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது. யார் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையோ அவர் ஹஜ்ஜு நாள்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தம் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!” என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்ததும், இறையில்லம் கஅபாவை வலம் வந்துவிட்டு முதலாவதாக ருக்னை (ஹஜருல் அஸ்வதை) முத்தமிட்டார்கள். பிறகு மூன்று சுற்றுக்கள் (தோள்களைக் குலுக்கி) ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் வலம் வந்தார்கள். வலம்வந்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸலாம் கொடுத்தும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஏழு முறை ஸயீச் செய்தார்கள். பிறகு, தம் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மேலும் அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் தம் குர்பானிப் பிராணியை பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். மக்களில், குர்பானி கொடுப்பதற்காகப் பிராணியைக் கொண்டு வந்தவர்களும் நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே செய்தார்கள்.

புஹாரி : 1691 இப்னு உமர் (ரலி).

769. இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ், உம்ராச் செய்தார்கள். இப்னு உமர் (ரலி) கூறிய (முன் ஹதீஸிலுள்ள) செய்தியையே ஆயிஷா (ரலி) எனக்குக் கூறினார் என உர்வா அறிவித்தார்.

புஹாரி : 1692 உர்வா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தமத்துவ் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுத்தல் பற்றி..

தமத்துவ் முறை ஹஜ் செய்ய அனுமதி.

767.’தமத்துவ்’ (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும்வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைக் தம் (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

புஹாரி :4518 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தமத்துவ் முறை ஹஜ் செய்ய அனுமதி.

இஹ்ராமிலிருந்து எப்பொழுது விடுபடுவது?

766. நபி (ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும்போது நான் அங்கு வந்தேன். அப்போது அவர்கள், ‘ஹஜ் செய்ய நாடி விட்டீரா?’ எனக் கேட்க, நான் ‘ஆம்!” என்றேன். ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர்?’ என அவர்கள் கேட்டதும் ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காக!” என்றேன். உடனே அவர்கள், ‘நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாவையும் வலம் வாரும்!” என்றார்கள். பிறகு நான் கைஸ் கோத்திரத்தாரின் பெண்களில் (மஹ்ரமான) ஒருவரிடம் வந்தேன். அவர் என்னுடைய தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தேன். இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறி வந்தேன்! உமர் (ரலி) அவர்களிடம் இதுபற்றி நான் கூறியதும் அவர்கள், ‘நாம் இறைவேதத்தை எடுத்துக் கொண்டால், அதுவோ (ஹஜ் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகிறது. நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்டால், நபி (ஸல்) அவர்கள் பலிப் பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை என்று தெரிகிறது!” எனக் கூறினார்கள்.

புஹாரி :1724 அபூமூஸா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராமிலிருந்து எப்பொழுது விடுபடுவது?

இறுதி தீர்ப்பு நாளை நம்பி தொழுகையை பேணுபவர்களே குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நம்புபவர்கள்!

6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா (மோஸே) கொண்டு வந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கி வைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான(தர்க்கத்)தில் விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டு விடுவீராக. Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறுதி தீர்ப்பு நாளை நம்பி தொழுகையை பேணுபவர்களே குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நம்புபவர்கள்!

அரஃபாத்தில் தங்குதல் பற்றி….

764. மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாகத் வலம்வருவார். மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள். ‘மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்” என்ற (திருக்குர்ஆன் 02:199) வசனம் குரைஷிகள் பற்றி இறங்கியதுதான். அவர்கள் முஸ்தலிஃபா என்னும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களாயிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு திருப்பி விடப்பட்டனர். என ஆயிஷா (ரலி) கூறினார் என என்னுடைய தந்தை (ஸுபைர்) எனக்கு அறிவித்தார்.

புஹாரி : 1665 உர்வா பின் ஜூபைர் (ரலி).

765. (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) அரஃபா தினத்தில் என்னுடைய ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்றிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், இவர் (நபி (ஸல்) குரைஷிக் குலத்தவராயிற்றே!’ இவருக்கு இங்கு என்ன வேலை? என என்னுள் கூறிக் கொண்டேன். (ஏனெனில் மக்காக் குறைஷிகள் ஹரம் எல்லைக்கு வெளியே ஹஜ்ஜின் எந்தக் கிரியைகளையும் செய்வதில்லை).

புஹாரி :1664 ஜூபைர் பின் முத்இம் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அரஃபாத்தில் தங்குதல் பற்றி….

ஹஜ்ஜில் இஹ்ராமை அணிதலும் களைதலும்….

755. ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க்காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். ‘இது உன்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் கஅபாவை வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ செய்து) விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பியபோது மீண்டும் ஒரு முறை வலம் வந்தார்கள். ஹஜ், உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் அணிந்தவர்கள் ஒருமுறை மட்டுமே வலம் வந்தார்கள்.

புஹாரி : 1556 ஆயிஷா (ரலி).

756. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் விதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால்நடையைக் கொண்டு வராத ஹஜ்ஜின் ‘தமத்துவ்’ என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும்வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் ‘உம்ரா’ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புஹாரி :316 ஆயிஷா (ரலி).

757. ‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம் வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்’ என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ‘குர்பானி கொடுத்தார்கள்”.

புஹாரி :294. ஆயிஷா (ரலி).

758. நாங்கள் ஹஜ்ஜின் மாதங்களில், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து, ஹஜ்ஜுக்குரிய கட்டுப்பாடுகளுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு, ‘ஸரிஃப்’ என்னும் இடத்திற்கு வந்து தங்கினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், ‘பலிபà¯
à®ªà®¿à®°à®¾à®£à®¿ கொண்டு வராமல் ஹஜ்ஜை உம்ராவாகச் செய்ய விரும்புகிறவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்! பலிப்பிராணி வைத்திருப்பவர் அவ்வாறு செய்ய வேண்டாம்!’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களில் ஓரளவு வசதி படைத்தவர்களிடமும் பலிப்பிராணிகள் இருந்தன. எனவே, அவர்கள் உம்ராவுக்கெனத் தனியாக வலம் வரவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் ‘ஏன் அழுகிறாய்?’ எனக் கேட்டார்கள். ‘நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை செவியுற்றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டேன்!” என்றேன். அதற்கவர்கள் ‘என்ன காரணம்?’ எனக் கேட்டதும், ‘நான் தொழக்கூடாது நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்! (எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது!) என்றேன். அவர்கள், ‘உனக்கொன்றுமில்லை! நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அப்பெண் மக்களுக்கு விதிக்கப்பட்டதே உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது! எனவே, ஹஜ் செய்பவளாகவே இரு! அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக் கூடும்!” என்றார்கள். நாங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு மினாவிலிருந்து புறப்படும்வரை நான் அப்படியே (மாதவிடாயுடன்) இருந்தேன். பிறகு முஹஸ்ஸப் வந்து தங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, ‘உன்னுடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவள் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! பிறகு நாங்களிருவரும் தவாஃபை முடித்துக் நடுநிசியில் வந்தபோது ‘(தவாஃபை) முடித்து விட்டீர்களா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார்கள். மக்களும், ஸுப்ஹுக்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.

புஹாரி: 1788 ஆயிஷா (ரலி).

759. நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு சென்றோம். அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் செய்ய நாங்கள் காணவில்லை. மக்காவை வந்தடைந்ததும் கஅபாவை வலம் வந்தோம். அதன் பிறகு குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் நான் மாதவிடாய்க்காரியாக இருந்ததால் வலம் வரவில்லை. (முஹஸ்ஸப் எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! மக்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால் நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன் என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘நாம் மக்காவை வந்தடைந்தபோது நீ வலம் வரவில்லையா?’ எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். ‘அப்படியானால் உன்னுடைய சகோதரனுடன் தன்யீம் எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள். ஸஃபிய்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘நானும் உங்கள் அனைவரின் பயணத்தையும் தடுத்துவிட்டதாக உணர்கிறேன்’ என்று சொன்னபோது, நபி (ஸல்) ‘காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! பத்தாம் நாளில் நீ வலம் வரவில்லையா?’ என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்து விட்டேன்!” என்றார். ‘பரவாயில்லை! புறப்படு!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் இறங்கிக் கொண்டிருந்தேன் அல்லது அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக் கà
¯Šà®£à¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à¯‡à®©à¯.

புஹாரி:1784 ஆயிஷா (ரலி).

760. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.

புஹாரி: 1784 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்(ரலி).

761. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே அறிவித்தார்.(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், ‘இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என்றார்கள். ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ‘நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?’ என்று நாங்கள் பேசிக் கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.—‘நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?’ என்று சொல்லும்போது ஜாபிர் (ரலி) அவர்கள், ‘இப்படி’ என்று சைகை செய்து கை அசைத்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, ‘நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னுடைய குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்கமாட்டேன்” என்றார்கள். எனவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.

புஹாரி :7367 அதா (ரலி).

762. நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு, (அவர்கள் யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்ய தியாகப் பிராணியுடன் வந்தபோது) தம் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) யமன் நாட்டின் நிர்வாகியாக இருக்கும் நிலையிலேயே வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘அலீயே! எதற்காக நீங்கள் இஹ்ராம் அணிந்தீர்கள்” என்று கேட்டார்கள். அலீ அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானி கொடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தியாகப் பிராணியை குர்பானி கொடுத்தார்கள்.

புஹாரி :4352 ஜாபிர் (ரலி).

763. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி (ஸல்) மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ (ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் அணிந்தேன்!” என அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) ‘நம் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா?’ என்று பேசிய செய்தி, நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் ‘(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்ததை முன் கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்!” என கூறினார்கள். மேலும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம் வந்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டுமா நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?’ என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ரை, ஆயிஷா (ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா (ரலி) ஹஜ் செய்தபின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?’ எனக் கேட்டதற்குவர்கள், ‘இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :1785 ஜாபிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஹஜ்ஜில் இஹ்ராமை அணிதலும் களைதலும்….

நிபந்தனையுடன் இஹ்ராமணிதல்.

754. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக ‘இஹ்ராம்’ கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு!’ எனக் கூறினார்கள். ளுபாஆ (ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) அவர்களின் துணைவியாராவார்.

புஹாரி : 5089 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நிபந்தனையுடன் இஹ்ராமணிதல்.

இஹ்ராமணிந்தவர் மரணித்தால்….

753. (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1265 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஹ்ராமணிந்தவர் மரணித்தால்….