இஹ்ராம் அணியும் முன்பு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்தல்.

739. இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.

புஹாரி: 1539 ஆயிஷா (ரலி).

740. ‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது” என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புஹாரி :271 ஆயிஷா (ரலி).

741. ‘(‘நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்தி, காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறியதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கூறியபோது) ‘நான் நபி (ஸல்) அவர்களுக்கு நறுமணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள்’ என்று ஆயிஷா (ரலி) கூறினார்” என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

புஹாரி :270 முஹம்மது பின் முன்தஷிர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.